• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள்

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 17, 2018

செல்வத்திலேயே மிகச் சிறந்த செல்வம் குழந்தை செல்வம் ஆகும். சில பெற்றோர்களுக்கு அச்செல்வம் எளிதில் கிட்டி விடுகிறது. ஆனால், சில பெற்றோர்களுக்கோ எத்தனை மருத்துவம் பார்த்தாலும், மாதா மாதம் கோவில் கோவிலாக ஏறி இறங்கினாலும் கிடைப்பது இல்லை. ஆணின் ஆண்மையையும் பெண்ணின் பெண்மையையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதே  ஒரு பெண்ணின் தாய்மையே ஆகும்.

பெண் ஆனவள் தன் கருவை கருப்பையில் கலங்காமல் வைத்தும், கரு குழந்தையாக பூமிக்கு வந்த பின்னர் கண்ணும் கருத்துமாக கருவிழியில் வைத்து காக்கிறாள். ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பின் ஒவ்வொரு நாட்களும் மிக அழகாக தோன்றும். அதிலும், ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் அவளுக்கு கணக்கற்ற களிப்பை தரும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் நோய்கள் மற்றும் உடல் நல கோளாறுகள் என்ன? என்று பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்வதனால் தேவையற்ற பயத்தை குறைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் எல்லா கர்ப்பிணிகளும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

 1. எல்லா கர்ப்பிணிகளும் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இது குறித்து கர்ப்பிணி பெண்கள் பயம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் வயிற்றில் உள்ள கருவை முதுகு தான் தாங்கி நிறுத்துகிறது.
 2. கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் சில பெண்களுக்கு மார்பகத்தில் இருந்து நீர்மம் வெளியேறும். இது இயல்பான நிகழ்வே ஆகு‌ம்.
 3. கர்ப்ப காலத்தில் கருப்பை மென்மை ஆவதால், வெள்ளைப்படுதல் இருக்கும். இதனால் பெண்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.
 4. கர்ப்பிணி பெண்களுக்கு தசைப் பிடிப்பு இருக்கும். இதை தொடர்ந்து கால்,கைகளில் வீக்கம் இருக்கும்.
 5. ஹார்மோன் பிரச்சனைகளால் சில கர்ப்பிணி பெண்களுக்கு தூக்கமின்மை இருக்கும். நல்ல உணவு மற்றும் போதுமான ஓய்வ எடுத்துக்கொள்வதால் இதை நிவர்த்தி செய்ய முடியும்.
 6. முடி உதிர்தல் மற்றும் சரும பிரச்சனைகள் கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும். இது மன உளச்சலினால் ஏற்படலாம். இதை கர்ப்பிணிகள் நோயாக நினைத்து வருந்த வேண்டிய அவசியம் இல்லை.
 7. ஹார்மோன் மாற்றத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். நார்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதனாலும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதாலும் இதை சரி செய்யலாம்.
 8. கர்ப்பிணி பெண்களுக்கு சில சமயங்களில் தலைவலி ஏற்படும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மன அழுத்தத்தினால் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, முடிந்தவரை மன அமைதி பெற மெல்லிய இசையை கேட்கலாம் அல்லது சிறிது நேரம் தியானம் செய்ய செலவிடலாம்.
 9. கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தவாறே இருப்பார்கள். இது பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் பிரச்சனை தான். இது நோயோ, உடல் நல கோளாறோ அல்ல. வயிற்றில் உள்ள கரு பெரிதாவதால் சிறுநீர் பையில் அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் காரணமாகவே கொஞ்சம் சிறுநீரும் சிறுநீர் பையில் தேங்காமல் உடனடியாக வெளியேறி விடும்.
 10. குமட்டல் மற்றும் வாந்தி, உணவு சுவை விருப்பங்களில் மாற்றம் இவையெல்லாம் எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் பொதுவாக இருக்க கூடிய பிரச்சினைகள் ஆகும்.
 11. குழந்தை வளர வளர கர்ப்பிணி பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்படும். இது கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் நிலை மாற்றமாகும்.
 12. கர்ப்பிணி பெண்களின் சுவாச விகிதம் மாறுபடும். ஏனெனில் குழந்தை வளரும் போது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாயின் சுவாச விகிதம் மாறுபடும்.
 13. கருவில் இருக்கும் குழந்தை மாதா மாதம் வளர்ச்சி அடைவதால் இதய துடிப்பு அதிகரிக்கும். மேலும் கருவுற்ற காலத்தில் இருந்து இரண்டு முதல் மூன்று மாத காலத்திற்கு தாயின் இரத்த அழுத்தம் குறையும்.
 14. ஹார்மோன் ஏற்ற தாழ்வுகள் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு மெட்டாபாலிச அளவு அதிகமாக இருக்கும். இதனால் கருவை சுமக்கும் தாய் வழக்கத்தை விட அதிகமாகவே தங்கள் உடலில் வெப்பத்தை உணர்வார்கள்.
 15. ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு தலைமுடி மற்றும் நகங்களின் வளர்ச்சி குறையும். நிறைய பெண்களுக்கு தலைமுடி நிறையவே கொட்டும்.
 16. புரொஜெஸ்டிரோன்,  ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதனால் கர்ப்பிணி பெண்களுக்கு மார்பகம் மென்மையாகி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.
 17. கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை அளவு பெரிதாவதால் இரைப்பையின் வடிவம் மாறி நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
 18. கர்ப்பிணி பெண்கள் சூடான உணவையோ அல்லது மிக குளிர்ச்சியான உணவை உண்ண கூடாது. தெருவோரங்களில் விற்கப்படும் பழச்சாறுகளை அருந்த கூடாது. அது சுத்தம் இல்லாத நீரினால் தயாரிக்கப்பட்டு இருக்கலாம்
 19. கர்ப்பிணி பெண்கள் மள்ளாந்து படுக்க கூடாது. ஒருகளித்தவாறே  ( ஒரு புறம் சாய்ந்தவாறே ) படுக்க வேண்டும். ஏனென்றால், மள்ளாந்து படுப்பதனால் இரத்த குழாய்களில் அழுத்தம் காரணமாக மூச்சு விடுவதில் பிரச்சனைகள் ஏற்படும்.
 20. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு உடலுறவு வைத்துக் கொள்ள கூடாது. நான்காம் மாதத்தில் தொடங்கி ஒன்பதாம் மாதம் வரை வைத்து கொள்ளலாம். ஆனால் உடலுறவின் போது கர்ப்பிணி பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதை எல்லாம் தவிர கர்ப்பிணி பெண்கள் அரைவேக்காட்டு முறையில் வேகவைத்த உணவுகளையும், கெட்டுப் போன காய்கறிகள் மற்றும் பழங்களில் கெட்டுப் போன பகுதியை மட்டும் நீக்கி விட்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி சாப்பிடுவதால் கிருமிகள் வயிற்றுக்குள் சென்று பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்கள் மேற்கண்ட பொதுவான உடல் நல பிரச்சனைகள் பற்றி முன்பே தெரிந்து வைத்து இருப்பதினால் கர்ப்ப காலம் குறித்த காரணமில்லா கவலைகளை களைந்து கண்ணும் கருத்துமாக குட்டி பாப்பாவை பெற்றெடுக்க முடியும்.

 • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Dec 19, 2018

3 மாத கர்ப்பிணி பெண் சளி பிடித்துள்ளது என்ன செய்ய வேண்டும்

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}