• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைப்பதற்கான குறிப்புகள்

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 01, 2019

கர்ப்ப காலத்தில் உடலில் பல வித மாற்றங்கள் நிகழ்வது போல் கால் வீக்கமும் ஒன்று. கவலை கொள்ள வேண்டாம். உடலில் அதிகப்படியான திரவம் தங்குவதாலும் ஏற்படலாம். முகம் அல்லது விரல்களில் கூட வீக்கம் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் இருக்கும் நீங்கள் இதை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதை இப்பதிவு மூலம் அறியலாம்.

ஏன் வீக்கம் வருகின்றது?

கர்ப்பிணி பெண்களில் பாதி பேர் இதை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லலாம். முக்கியமாக இரண்டாம் ட்ரைமெஸ்டரில் அல்லது மூன்றாம் ட்ரைமெஸ்டரின் பிற்பகுதியில் ஏற்படலாம். இது ஒவ்வொருவருக்கும் வானிலை மாற்றம், ஒரு நாளின் நேரத்தை பொறுத்து மாறுபடலாம். கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும், இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே  இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. 

மேலும் கர்ப்ப காலத்தில் உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாப்பதற்காக உடல் அதிக திரவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த அதிகப்படியான திரவம், உங்கள் உடலில் உள்ள  கருப்பையில் அழுத்தம் கொடுத்து வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

உங்கள் கைகளில், கால்களில், முகத்தில் அதிகப்படியான வீக்கம் ஏற்பட்டால், அதுவும் நாள் முழுவதும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனென்றால் ப்ரீ எக்லம்சியா (preeclampsia) எனப்படுவது அதிக பிபி, அதிக எடை அதிகரிப்பு மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் இருக்கும். உங்கள் கெண்டைக்கால் சிவப்பு நிறமாகவும், வீக்கமாகவும் தெரிந்தால் நரம்பில் இரத்தக் கட்டாக இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் வீக்கம் ஏற்படுவது பொதுவான விஷயம் என்றாலும் உங்கள் மருத்துவரை பார்க்கும் போது இதைப் பற்றி பேசி ஆலோசனை பெறுவது உங்களுக்குள் ஏற்படும் தேவையற்ற அச்சத்தை தவிர்க்க உதவும்.

கால் வீக்கத்தை குறைப்பதற்கான குறிப்புகள்

தரையில் அமரும்போது கால்களை குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். இது போன்று மேலும் சில குறிப்புகளை பார்க்கலாம்.

ஓய்வு அவசியம் – கர்ப்ப காலம் என்பதால் எப்போதும் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வப்போது சிறு சிறு இடைவெளிகள் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வேலை நேரத்தில் அதிகமாக அமர்ந்திருப்பதற்கு பதில் சிறிது நடைப்பயணம், எழுந்து நிற்பது போன்றவற்றை செய்யலாம். கால்களை கீழே அதிக நேரம் தொங்கவிடாமல் நாற்காலி அல்லது ஏதாவது மீது காலை வைத்துக் கொள்ளவும்.

காலுக்கான சரியான காலணி – கர்ப்ப காலத்தில் காலுக்கும் வசதியான காலணிகளை வாங்குவது அவசியம். உங்கள் கால்கள், கால்விரல்கள், குதிகால் ஆகியவை மிகுந்த மன அழுத்தத்தில் இல்லாதபோது அசொள்கரியம் ஏற்படுவது குறைகிறது.

உடற்பயிற்சி - நடைபயிற்சி, நீச்சல், கர்ப்ப யோகா - இவை அனைத்தும் உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. உடற்பயிற்சி முறையை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். ஏனென்றால் உங்கள் உடலின் நிலையை பற்றி அறிந்து பரிந்துரைப்பார்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள் – நிறைய தண்ணீர் அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் நீச்சத்து குறையாமல் இருக்கும். இதன் மூலம் கர்ப்ப கால வீக்கத்தை குறைக்கவும், வராமல் தடுக்கவும் முடியும். உடலில் நீர்வறட்சி ஏற்படாதவாறு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்

ஆரோக்கியமான உணவு -  உங்கள் கர்ப்பம் முழுவதும் ஆரோக்கியமான உணவை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். துரித உணவு, குறிப்பாக நிறைய உப்பு கலந்த உணவை தவிர்க்கவும். ஆரஞ்சு, முலாம்பழம் மற்றும்  சுண்ணாம்பு  சத்து போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

வீட்டு வைத்தியம் – வீக்கத்தை முற்றிலுமாக குறைக்குமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக உங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும். செய்து பாருங்கள்

  1. வெண்ணீர்ல் கல் உப்பு கலந்து உங்கள் கால்களை சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
  2. சில குளிர்ந்த முட்டைக்கோஸ் இலைகளை வீங்கிய இடத்தில் ஒரு கட்டு போல் போர்த்தி வைக்கவும். இலைகள் ஈரமாகும்போது, அவற்றை மாற்றி மீண்டும் செய்யவும்.
  3. பார்லி கஞ்சி, வெந்தய கஞ்சி குடிக்கலாம்.
  4. லாவெண்டர் அல்லது சைப்ரஸ் எண்ணெயைப் பயன்படுத்தி கால் மசாஜ் செய்யுங்கள்.

கர்ப்பம் என்பது பல குழப்பமான உடல் மாற்றங்களை எதிர்கொள்ளும் நேரம், உங்கள் உடலுக்குத் தேவையான அதிக கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் காலில் உள்ள வீக்கம் வருத்தத்தை அளித்தாலும், அமைதியாக அமர்ந்து இந்த இதற்கான தீர்வுகளை சிந்தித்து முயற்சிக்கவும். நீங்கள் விரைவில் இதிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}