• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல்

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 12, 2018

பொதுவாக கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வருவது சாதரணம் தான். உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதில் இந்த மலச்சிக்கலும் ஒன்று. 50 % கர்ப்பிணிகள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். எந்தெந்த வகையில் கர்ப்ப கால மலச்சிக்கலை சரி செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் உணவுப்பாதை தசைகள் உட்பட உடல் முழுவதும் உள்ள தசைகள் தளர்வடையும்.. இதற்கு புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகரிப்பதே காரணம். மேலும் கருவில் உள்ள குழந்தைக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களுக்காக கர்ப்பிணிகள் உட்கொள்ளும் இரும்புச்சத்து, வைட்டமின் மாத்திரைகளும் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கலை சரிசெய்யும் வழிகள்

 • ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமாக இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
 • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தினமும் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகின்றது. இந்த வகை சத்துக்களை எடுத்துக் கொள்ளும் போது குறைந்த அளவில் தொடங்க வேண்டும். ஒவ்வொரு உடம்பிற்கும் வெவ்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரிக்க வேண்டும்.
 • முழுதானிய உணவுகள், சிவப்பரிசி, கீரை வகைகள், பீன்ஸ், பச்சைக் காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொரு நாள் உணவிலும் ஏதோ ஒரு வகையி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை போதுமானதாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
 • வெதுவெதுப்பான நீர் மலச்சிக்கலைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகினால், கர்ப்ப கால மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
 • உலர்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் சரியாகும்.
 • செரிமான மண்டலத்திற்கு  தொந்தரவு தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். மைதா பிஸ்கட், ப்ரெட், பரோட்டா போன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
 • முக்கியமாக இரவில் பழங்கள் மற்றும் எளிதாக செரிக்ககூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இரவில் அதிகம் உணவு சாப்பிட்டாலோ அல்லது நேரம் கழித்து அதிகாமாக சாப்பிட்டாலோ வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கலம்.
 •  ஒரு நாளில் மூன்று முறை வயிறுமுட்ட சாப்பிடுவதை மாற்றி ஆறு முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது மூலம் உணவு எளிதாக செரிகக் செய்து குடலுக்கு அனுப்பும்.  இதனால் மலச்சிக்கலை உருவாக்கும் வாய்ப்பு குறைகிறது.
 • நடைபயணம் மனதுக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் நல்லது. தினமும் மிதமான நடைபயணம் செல்வது மூலமாக தசைகள் தளர்வடையும்.

மலச்சிக்கலை ஏற்படுத்தும் மருந்து மாத்திரைகள்

 இப்போதெல்லாம் கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை நோயாளி போல் கை நிறைய மாத்திரைகளோடு தான் இருக்கிறார்கள். இந்த வைட்டமின்கள், இரும்புச்சத்து மாத்திரைகளும் மலச்சிக்கலை தீவிரப்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கலை சந்தித்தீர்கள் என்றால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதை பற்றி கலந்து ஆலோசியுங்கள். மலச்சிக்கலை தீவிரப்படுத்தாத மாத்திரைகளை பரிந்துரைக்க சொல்லுங்கள்.

மருத்துவர் பரிந்துரைக்காத மலச்சிக்கலை தடுக்கும் மாத்திரைகள் மற்றும் எண்ணெய்களை உட்கொள்ளாதீர்கள். குழந்தையை பாதிக்காத பாதுகாப்பான மருத்துவ முறைகள் மற்றும் வீட்டு வைத்தியம் போன்றவற்றை பின்பற்றுவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

இந்த கர்ப்ப காலம் முழுவதும் கர்ப்பிணிகள் உட்கொள்ளும் ஒவ்வொன்றும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உடல், உணவுகள், வாழ்க்கைமுறை என அனைத்திலும் கவனம் அவசியம். எளிதாக குணப்படுத்தகூடிய மலச்சிக்கலை மேலும் சிக்கலாக்கி கொள்வது நம்முடைய உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். இந்த இரண்டையும் ஆரோக்கியாமாக வைத்துக் கொண்டால் மலச்சிக்கல் மட்டுமின்றி மற்ற வயிற்றுக் கோளாறுகளிலிருந்தும் எளிதாக உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}