• உள்நுழை
 • |
 • பதிவு
கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் பாலியல் உறவு - அறிய வேண்டிய விஷயங்கள்

Parentune Support
கர்ப்பகாலம்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 13, 2018

கருவுற்றிருக்கும் போது பாலியல் உறவு பற்றி பேசுவது ஒரு மென்மையான விஷயமாக இருக்கலாம். அப்பாவாகப்போகும் ஆண்கள் சில பாலியல் நிலைகள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று அஞ்சுவர். அம்மாக்கள் ஆகப்போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மாறும் பாலியல் ஆசை அவர்ளுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தலாம். இருவரும் அவரவர் எண்ணங்களை அக்கறையுடன் கலந்தோசித்துக்கொள்வது அவசியம்.

ஆனால் உண்மை என்னவென்றால், கர்ப்ப காலத்தில்  பாலியல் உறவு குறித்த பெரும்பாலான அச்சங்களும் கவலைகளும் தேவையில்லை. கர்ப்ப காலத்திலும் அவர்கள் ஒரு பாதுகாப்பான  பாலியல் உறவை தொடரலாம். கர்ப்ப காலத்தில் பாலியல் உறவு பாதுகாப்பானதா? இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமா? என்பது போன்ற உங்கள் கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடை கிடைக்கும்.

கர்ப்ப காலத்தில் பாலியல் உறவு பற்றிய உண்மைகள்:

பாலியல் உறவு பற்றி இரண்டு மிகப்பெரிய தவறான கருத்துக்கள் பாலியல் பாதுகாப்பாக இல்லை என்றும் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைந்து காணப்படும் என்றும் கூறப்படுவது தான். இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:

 • சாதாரண கர்ப்பத்தின் அனைத்து கட்டங்களிலும் பாலியல் பொதுவாக பாதுகாப்பானது. கருச்சிதைவுகளின் வரலாறு உங்களுக்கு இருந்தால், முதல் மூன்று மாதங்களில் உடலுறவு தவிர்க்க உங்கள் மருத்துவர் உங்களுக்கு அறிவுரை வழங்கலாம். உங்கள் குழந்தையின் கருப்பை உள்ளே நன்கு பாதுகாக்கப்படுவதோடு, உடலுறவினால் பாதிக்கப்படுவதில்லை.
 • பல பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைந்து காணப்படும் என்றாலும், கர்ப்ப காலத்தில் நான்கிலிருந்து ஆறாவது மாதம் வரை பெண்களுக்கான பாலியல் உணர்வு அதிகரித்து காணப்படும். உங்களுடைய கர்ப்பத்தின் கடைசி காலத்தில் சில ஜோடிகளுக்கு பாலியல் தொடர்பான ஆசை மிகவும் அதிகரித்து காணப்படும்.
 • உங்கள் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சோர்வு ஏற்படுவதால், நீங்கள் பாலியல் உணர்வுக்கான சில விருப்பங்களை தற்காலிகமாக இழப்பீர்கள். பின்னர் உங்கள் கர்ப்பத்தில், இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மார்பக விரிவாக்கம், ஏற்படும்போது உங்கள் பாலியல் ஆசையை அதிகரிக்கும்.
 • உங்கள் கர்ப்பத்தின் கடைசி கட்டத்தில், உங்கள் மார்பகங்கள் மென்மையாக மாறும், உச்சி நீளமாகவும் கடினமாகவும் மாறும், மேலும் உங்கள் வயிற்றின் அளவு அதிகரிப்பதால் சில பாலியல் நிலைகள் சங்கடமானதாக இருக்கலாம்.
 • ஆனாலும், பாலியல் உறவு பற்றிய உங்கள் மருத்துவரின் அறிவுரைகளை நீங்கள் எப்பொழுதும் பின்பற்ற வேண்டும், குறிப்பாக உங்கள் கர்ப்பத்தில் அதிக ஆபத்து இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுடைய பாலியல் நடவடிக்கையை கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறுவார்.

தம்பதிகளுக்கான சில அறிவுரைகள்:

 • பாலியல் தொடர்பால் வரக்கூடிய நோய்கள் உங்கள் குழந்தைக்கு பரிமாறலாம், எனவே பாதுகாப்பான பாலியல் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உறவினால் இரத்த குழாயில் காற்று குமிழி அடைப்பு ஏற்படாமல் இருப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
 • பாலியல் ஆசைகளில் ஏற்றங்கள் மற்றும் தாழ்வுகளை எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் நீங்கள் மிகவும் சோர்வாக அல்லது பாலியல் உறவு மிகவும் சங்கடமாக இருப்பதாக உணரலாம். உங்கள் ஹார்மோன்கள் மற்றும் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் பாலியல் ஆசையை பல்வேறு வழிகளில் பாதிக்கலாம். இது சாதாரணமானது, நீங்கள் தவறாக உணரத் தேவையில்லை.
 • உங்கள் மார்பகங்கள், குறிப்பாக முலைக்காம்புகள், கர்ப்ப காலத்தில்  உணர்வுத்திறன் மிக்கதாக இருக்கும். எனவே எண்ணெய் அல்லது ஆணுறை பயன்படுத்துவது உங்களுக்கு வசதியாக தோன்றும். கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக முதுகெலும்பை பின் தட்டையாக வைத்திருக்கக் கூடாது என்று பரிந்துரைக்கப்படுகின்றனர், ஏனெனில் வளர்ந்துவரும் கருவின் எடை முக்கிய இரத்தக் குழாய்களைக் கட்டுப்படுத்தக் கூடும், இதனால் கருவிற்கு இரத்த ஓட்டம் குறையும்.
 • உங்கள் உடற்கூறில் ஏற்படும் மாற்றங்கள் சில நீங்கள் பயன்படுத்தும் பாலியல் நிலையில் சங்கடம் ஏற்படுத்தலாம். அதாவது பெண் கீழே இருப்பது, சங்கடமானதாக இருக்கும். அதனால், உங்கள் துணைவர் கீழேயோ, பின்னாலோ  அல்லது பக்கத்திலோ இருக்கும் நிலையில் உறவு வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிசோதித்து உறவு கொள்ள வேண்டும்.
 • உடலுறவின் போது உங்கள் யோனியில் இரத்தப்போக்கு, வெளியேற்றம் அல்லது வலி இருந்தால் உறவில் ஈடுபடாமல் உடனடியாக உங்கள் மருத்துவரைப் பார்க்கவும். சுருக்கங்கள் இருந்தாலோ அல்லது பனிக்குடம் உடைந்த பிறகோ உறவில் ஈடுபடக்கூடாது. உறவின்போது குழந்தையின் பாதுகாப்பு பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவருடன் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
 • உங்களுக்கு உடலுறவில் ஈடுபாடு வரவில்லை என்றால் அது ஒரு பிரச்சனையே அல்ல. உடலுறவு கொள்வது மட்டுமே பாலியல் என்பது இல்லை. எனவே, இந்த கர்ப்ப காலத்தில் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் உள்ள அன்பை வெளிப்படுத்துதல் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் அவசியமானதும் கூட. இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள், உங்கள் கருத்துக்களை பரிமாறுதல் அதிக புரிதலை ஏற்படுத்தும்.

கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் பாலியல் உறவு கொள்வதற்கு மருத்துவரின் அறிவுரை மிகவும் அவசியம்:

 • கருச்சிதைவு வரலாறு அல்லது அச்சுறுத்தல்
 • முன்கூட்டியே குறைமாத பிரசவம் ஏற்பட்ட வரலாறு
 • சொல்லப்படாத யோனி இரத்தப்போக்கும் அரிப்பு அல்லது வெளியேற்றம்
 • அம்னோடிக் திரவத்தின் கசிவு (குழந்தையை சுற்றியுள்ள திரவம்)
 • நஞ்சுக்கொடி (குழந்தை வளர தேவியான இரத்த நிறைந்த அமைப்பு) கருப்பை வாய் (கருப்பை திறப்பு) வரை இறங்கி இருப்பது (பிளாசெண்டா ப்ரேவியா)
 • கருப்பை வாய் பலவீனமாக இருந்தால் அது குறைமாத பிரசவத்திற்காக அபாயத்தை அதிகரிக்கும்
 • அதிக கருக்கள் (இரட்டையர்கள், மூவர்கள், முதலியன)

“கர்ப்ப காலத்தில் உறவு எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் உடலுறவில் ஈடுபடுகையில் எச்சரிக்கையுடனும் நுண்ணறிவுடனும் இருப்பது அவசியம், எனவே நீங்களும் குழந்தையும் எந்தத் தீங்கும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம்”

 • 3
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| May 07, 2019

நான் கர்பம் தரித்து 5 மாதங்கள் ஆகிவிட்டது, நானும் என் கணவரும் எப்பொழுது எங்கள் உறவை தொடர்வது நல்லது

 • அறிக்கை

| Mar 27, 2019

நான் march 6th period ஆனேன் நான் இப்போது கருவுற்று இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா பின் முதுகு இரண்டு தினங்களாக அதிக வலி ஏற்படுகிறது ஏதாவதது அறிகுறி இருக்கிறதா

 • அறிக்கை

| Feb 21, 2019

கர்பம் தரித்து ஒன்றரை மாதத்தில் கருச்சிதைவு ஏற்பட்டது.. பின் டி அன்டு சி செய்யபட்டுள்ளது.. அடுத்து எத்தனை மாத இடைவெளிக்கு பிறகு அடுத்த குழந்தைக்கு தயாராவது...

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Tools

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Calculator

Are you pregnant? Track your pregnancy weeks here!

Duedate Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}