• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து கர்ப்பம் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

ஏன் கர்ப்பிணி பெண்களுக்கு வலைகாப்பு நிகழ்ச்சி செய்கிறார்கள்?

Santhana Lakshmi
கர்ப்பகாலம்

Santhana Lakshmi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 24, 2018

வண்ண வண்ண வளையல்களும், வித விதமான உணவு வகைகளும், பெற்றோர், கணவர், உறவினர் புடைசூழ ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமான தருணத்தில் தன் குடும்பத்தினரால் சிறப்பித்து செய்யப்படும் விழாவே வளைகாப்பு நிகழ்வாகும்.

கருவுற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு ஒரு வசந்தமே! பண்டிகைப்போல கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல இது! காத்திருந்து காத்திருந்து கண்கொள்ளா நிகழ்வாக பெண்ணுக்கு அமையக்கூடிய விழாவாகத்தான் நம் பாரம்பரியத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஏன், வளைகாப்பு செய்கிறார்கள்?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை எந்தளவிற்கு வரப்பிரசாதமோ, அந்தளவிற்கு தாய்மை தருணத்தை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திப்பதற்கு எல்லா வகையிலும் பக்குவம் தேவை. அதனால்தான், ஒரு பெண் கருவுற்ற செய்தியை அறிந்த முதல் தருணத்திலே! அவள் மீதான அக்கறையும், அன்பும் சுற்றியிருப்பவர்களுக்கு பன்மடங்கு கூடிவிடுகிறது.

கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் அவள் உடலில் ஏற்படும் மாற்றங்களே! ‘மசக்கை’ யாக வெளிப்படுகிறது. அதாவது, எந்த உணவையும் உண்ண முடியாமல், குமட்டலும் வாந்தியும் அவளை கலங்கவைக்கும்.  அதுவே, உடல் மாற்றங்களுக்கான முதல்படி.

இதனால்தான், கருவுற்ற பெண்ணின் மீதான கவனிப்பு கணவருக்கு மட்டுமல்ல, அவளை சார்ந்த அத்துணை உறவுகளுக்கும் உள்ளது என்பதையும், வயிற்றில் இருக்கும் குழந்தையை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். உனக்காகவும் குழந்தைக்காகவும் எல்லோரும் இருக்கிறோம் என்பதையும் வளைகாப்பு போன்ற விழாக்களே பக்கபலமாக வலியுறுத்துக்கின்றன.

வளைகாப்பு செய்யும் முறை:

ஐந்தாம் மாதத்திற்கு பிறகு கருவிலிருக்கும் குழந்தை வெளியில் நிகழக்கூடிய விஷயங்களை தன் தாய் மூலம் அறிந்துக் கொள்ளும். அதனால்தான், வளைகாப்பு நிகழ்வை பெரும்பாலும் 7 அல்லது 9 ஆம் மாதங்களில் செய்வார்கள்.

இருபுறமும் விளக்கேற்றி, பூக்கள், பழங்கள், வெற்றிலை, குங்குமம், வளையல்கள் போன்றவற்றை ஒவ்வொரு தாம்பூலத்திலும் வைத்து வரிசைத்தட்டு வைப்பார்கள்.

அதன்பின், இதன் நடுவில் ஒரு சேரில் வெள்ளைத்துணியை விரித்து அதன் நாலாபுறமும் மஞ்சள் தடவி வைப்பர்.  அந்த சேரில், அலங்கரிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை அமர வைப்பர்.  கர்ப்பிணி பெண் அருகில்  அப்பெண்ணின் கணவரையும் உட்காரச் செய்வர். அத்தோடு, கூடவே ஒரு குழந்தையும் உட்கார வைப்பர்.

கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் ரோஜாப்பூ மாலையை கணவரின் கையால் போடச்சொல்வர். பின்பு, அவளது கன்னத்தில் பூசப்படும் முதல் சந்தனமும் கணவரின் கையாலே பூசப்படும்.

அதன்பின், உறவுகள் ஒவ்வொருவராக சந்தனம் பூசி, குங்குமம் இட்டு பெண்ணின் கையில் வளையல்களை போடுவர்.  எல்லா வண்ணங்களிலும் பெண்ணின் கைகளில் வளையல் போடப்படும்.

வளைகாப்பு விழாவிற்கு வந்தவர்களுக்கும், வளையல்கள் கொடுப்பர். அதன்பின், வளைகாப்பு உணவான அறுசுவை உணவும் முதலாக கர்ப்பிணி கொடுக்கப்பட்டு, பின்பு அனைவரையும் சாப்பிடச்சொல்வர்.

வளைகாப்பின் நோக்கமும் நன்மைகளும்:

 1. வளைகாப்பின் நிகழ்ச்சியின் நோக்கமே கருவுற்ற பெண் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய ஒரு விழாதான்!.
 2. ஏனெனில், ஒரு பெண் என்னதான் தாய்மை அடைந்தவிட்டோம் என்று சந்தோஷப்பட்டாலும், மனதளவில் அவளுக்குள் பிரசவத்தைப்பற்றி ஒரு பயமானது இருந்துக் கொண்டுதான் இருக்கும்.
 3. வளைகாப்பு செய்யும்போது, உன் நலனையும் குழந்தை நலனையும் பேண நாங்கள் இருக்கிறோம் என்று உறவுகள் சூழ இருக்கும்போது அந்த பயம் நீங்கி, மனதளவில் மகிழ்ச்சி வருகிறது.
 4. கருவில் இருக்கும் குழந்தை 20 வாரத்தில் இருந்தே சத்தங்களை உணரத்தொடங்கிவிடும். வளையல்கள் போடும்போது அதன் சத்தத்தை குழந்தை உணரும். அதோடு, வளையல்கள் ஒன்றோடொன்று உரசும் போது இசையொலியாக கேட்பதோடு, நரம்பு மண்டலத்தையும் தூண்டச் செய்கிறது.
 5. வளைகாப்பின் சிறப்பம்சமே! கையில் போடப்படும் வளையலும்! வாய்க்கு சுவையான உணவும்தான்! வளைகாப்பின் போது போடப்படும் ஒவ்வொரு வளையலும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அந்த நிறங்கள் பெரும்பாலும் வானவில்லின் ஏழு வண்ணங்களாகவே இருக்கும்.ஏனெனில், நிறங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யக்கூடியது.
 6. புளிப்பு, காரம், இனிப்பு  என்று அறுசுவையும் கலந்த சாப்பாடாகத்தான் வளைகாப்பு உணவு இருக்கும். ஏனெனில், தாய் உணவை ருசித்து சாப்பிடும்போது, உணவின் சுவைக்கேற்ப தாயிடம் ஏற்படும் மாற்றங்களையும் கருவிலிருக்கும் குழந்தை உணரும். அதனால்தான், அனைத்து சுவைகளிலும் வளைகாப்பில் உணவு பரிமாறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த விழாவில் கர்ப்பிணிப் பெண் சாப்பிட்ட பிறகே அனைவரும் சாப்பிடுவர். ஏனெனில், அறுசுவையையும் முதலில் அவள் ருசிக்க வேண்டுமென்பதற்கே!
 7. வளைகாப்பில் முக்கிய காப்பே! வேப்பிலை காப்புதான். விழாவில் உறவினர்கள் சூழ கர்ப்பிணி பெண்ணை அமர வைப்பர். அதனால் எந்த நோய்த் தொற்றும் அப்பெண்ணை அணுகாதவாறு சிறந்த கிருமிநாசினியாக வேப்பிலையை காப்பாக இரு கைகளிலும் அணிவிப்பர்.
 8. வேப்பிலையோடு தற்காப்பாக மஞ்சளும் சந்தனமும் இருக்கும். கர்ப்பிணிப் பெண்ணின் கன்னத்தில் மட்டுமல்ல! கை, கால்களிலும் சந்தனம் பூசுவர். ஏனெனில், சுற்றியிருப்பவர்களின் சூடு அவளை பாதிக்காமல், உடம்பை குளுமைப்படுத்த…

வளைகாப்பில் பெண்ணின் கையில் எல்லோரும் வளையல் போடுவர். அதில், கடைசியாக போடப்படும் வளையல் கணவர் கையால் இருக்கும். ஏனெனில், ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இறுதிவரை உன்னுடன் நானே இருப்பேன் என்பதை உணர்த்தும். அறுசுவையின் ருசியும்! வளையல்களின் வண்ணங்களும் கருவை சுமக்கும் அவளின் மனதை மகிழ்ச்சியோடு பலப்படுத்த, கருவை காக்கும் அவளின் கரங்களுக்கு “வளைகாப்பு” செய்வோம்!

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}