• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

ஏன் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான மனநிலையில் அவசியம் இருக்க வேண்டும்?

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 12, 2019

கர்ப்பமாக இருக்கும் காலங்களில் பெண்களின் வாழ்க்கைமுறையில் பல்வேறு விதங்களில் மாற்றங்கள் உண்டாகும். மெதுவாக நடக்க வேண்டும், நன்றாக தூக்க வேண்டும், சத்துள்ளதை சாப்பிட வெண்டும், சந்தோஷமான மனநிலையில் இருக்க வேண்டும், நடைபயிற்சி செய்ய வேண்டும் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும். அரவணைக்க பக்கத்தில் நபர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கர்ப்பிணிகளின் மனநிலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

அது மகிழ்ச்சி, பயம், வருத்தம், கோபம், ஏமாற்றம், எரிச்சல் என பலவகை உணர்கல் கலந்திருக்கும். நம்முடைய அடையாளத்தை பற்றி நிறைய சிந்திப்போம். இது சில சிலங்களில் நம்மை அறியாமலேயே மன அழுத்தத்திற்குள் கொண்டு செல்லும், ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுவது எளிது ஆனால் அதற்கான சூழல், உணவு, தூக்கம், தியானம், உறுதுணை, பாதுகாப்பு என பல அம்சங்களை நாம் நம்மை சுற்ரியும் நமக்குள்ளும் உருவாக்க வேண்டியது அவசியம். அப்போது தான் எது நேர்ந்தாலும் கர்ப்பிணிகளால் ஆரோக்கியமான மனநிலையை தக்க வைத்து கொள்ள முடியும்.

கார்ப்பமாக இருக்கும் போது குழந்தையால் நம்முடைய எல்லா உணர்வுகளையும் உணர முடியும். அதனால் நம்முடைய உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. எதிர்மறையான உணர்வுகள் குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுடைய உணர்வுகளை கையாளும் சில உத்திகளை கையாள வேண்டிய நேரம் இது. இது உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் பல நன்மைகளை உண்டாக்கும்.

கர்ப்ப காலங்களில் பொதுவாக வரும் பயம் மற்றும் கவலை என்னென்ன?

கர்ப்பிணிகளுக்கு இந்த கர்ப்ப காலம் ஒரு அழகான தாய்மை அனுபவம். இந்த ஒன்பது மாதங்களில் சில இடங்களில் அதீத உற்சாகம் ஏற்படலாம், சில இடங்களில் ஏமாற்றம், வருத்தம் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் மனநிலையில் மாற்றங்கள் வருவது இயல்பானது. நம்முடைய ஹார்மோன் மாற்றங்களால் உடலிலும், மனதிலும் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றது. ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய அழுத்தம் மற்றும் கவலையை கையாளும் வழிகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடலாம். சில கர்ப்பிணிகள் தங்களுக்கு இருக்கும் பொதுவான பயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

 • கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை பற்றிய பயம்.
 • பிரசவத்தை எப்படி சமாளிப்பது.
 • குழந்தை பிறந்த பிறகு அலுவலக வேலையையும், குழந்தையையும் எவ்வாறு சமமாக பார்ப்பது?
 • வரப்போகும் கூடுதல் பொறுப்புகளை எப்படி நிர்வகிப்பது.
 • கணவனுடன் உறவில் மாற்றங்கள், முந்தைய குழந்தையை கையாள்வது போன்ற கவலைகள்.
 • பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா?
 • குடும்பம் ஆதரவாக இல்லாத வருத்தம்.
 • கூடுதல் நிதி சுமையை நிர்வகித்தல்
 • பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் சார்ந்த எதிர்பார்ப்புகள்.
 • இரண்டாவது குழந்தையின் வருகையால் முந்தைய குழந்தையை எப்படி தயார்ப்படுத்துவது.

மன அழுத்தம் கர்ப்பத்தை எப்படி பாதிக்கும் ?

மன அழுத்தத்திற்கும், கர்ப்பத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமானது தங்களுக்குள் வருகிற எதிர்மறை விளைவுகளை கர்ப்பிணிகள் எந்த வழிகளில் கையாள்கிறார்கள் என்பது அவசியம். உதாரணத்திற்கு, சில கவலையாக இருக்கும் போது நிறைய சாப்பிடுவார்கள், அது ஜங்க் உணவாக இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். இதன் விளைவுகள் குழந்தையின் உடல்நலத்தில், வளச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிலர் கோபத்தில் கத்துவது, தூக்கி எறிவது என நடந்து கொள்ளும் போது இந்த உணர்ச்சிகள் குழந்தைக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. சில பெண்களுக்கு மதுபானம் மற்றும் சிகரெட் குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை கையாள்வார்கள். குழந்தையின் பிறப்பு குறைபாடுகளுக்கும், குறைபிரவத்திற்கும் வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான மனநிலையில் வைக்க உதவும்  10 வழிகளில்

கர்ப்பகாலத்தில் கவலை அல்லது ​​ அதிக மன அழுத்தமாக உணர்கின்ற போது,  தலைவலி, பசியின்மை அல்லது தூக்கமின்மை, பயம், பாதுகாபின்மை, அடிக்கடி மனநிலையில் மாற்றங்கள், மறதி, கவனக்குறைவு என பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்குடும். மேலும் கருச்சிதைவு அல்லது குறைமாத பிரசவம் என பிற வழிகளிலும் கர்ப்பத்தை பாதிக்கும். எனவே, உங்கள் கவலைகள் குறைக்க மற்றும் ஒரு நேர்மறையான முறையில் மன அழுத்தத்தை சமாளிக்க கற்றுக்கொள்வது அவசியம். என் அனுபவத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு உதவக்கூடிய சில நுட்பங்கள் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 1. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் – தினமும் உங்களுக்கு பிடித்த செயலை செய்யும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் உங்களை மகிழ்விக்கும் சில செயல்பாடுகளை செய்ய தவறாதீர்கள். உடற்பயிற்சி செய்வது, பிடித்தவர்களோடு உரையாடுவது, தூக்கம், ஒரு சினிமா பார்ப்பது, மசாஜ் செய்வது, வரைவது, கிராஃப்ட் செய்வது என உங்களை மகிழ்வாக உணர வைய்யுங்கள்.
 2. மனதை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள் – கர்ப்ப காலங்களில் எதிர்காலத்தை பற்றிய நிறைய எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இது தொடர்பாக அதிக கவலை கொள்ளாமல் வாசிப்பது, யோசிப்பது, ஆலோசனை கேட்பது, மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்புகளுக்கு தயாராவதற்கு திட்டமிடுவது போன்ற செயல்கள் உங்களுக்குள் ஒரு சமாதானத்தை வரவழைக்க உதவுவது மட்டுமில்லாமல் எதிர்காலத்தை திட்டமிடவும் உதவியாக இருக்கும்.
 3. கையாளும் உத்திகள் – நீங்கள் பதட்டமான, கவலையாக, அதீத சோர்வாக இருக்கும் போது தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி, தசைகளை தளர்வடைய செய்யும் உத்திகள் போன்றவற்றின் உங்கள் மனதை திசைத்திருப்புவதோடு அமைதியாக வைக்க உதவும். ஒரு சிறிய நடைப்பயணம், நகைச்சுவை காட்சிகள், சின்ன தூக்கம் என உங்களுக்கேற்ற அமைதிப்படுத்தும் உத்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
 4. உணர்வுகளை பற்றி பேசுங்கள் – உணர்வுகளை உங்களுக்குள்ளேயே பூட்டி வைக்காமல் கணவரோடு அல்லது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு யாருடன் பேசினால் நேர்மறையாக உணர்வீர்களோ அவர்களோடு கலந்து பேசுங்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது உங்களை எவ்வாரு கையாள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கவலையை கையாள உதவும்
 5. பொறுப்புகளை பிரித்துக் கொள்ளுங்கள் – ஏற்கனவே கர்ப்ப காலத்தில் வரும் உடல் மன மாற்றங்களையும், சூழலையும் சமாளிக்க திணறும் போது உங்கள் அன்றாட பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். சமைக்க கஷ்டமாக இருந்தால் உறவினரை அல்லது சமைக்க மெய்டு வைத்துக் கொள்ளுங்கள். முதல் குழந்தையை கவனிக்க உதவிக்கு யாரையாவது உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பாரத்தை குறைக்கும்.
 6. பணிச்சுமையை தளர்த்திக் கொள்ளுங்கள் - சட்டம், மருத்துவம், கார்ப்பரேட் அல்லது கடுமையான வேலையை கோருகின்ற வேறு எந்தத் துறையில் நீங்கள் பணியாற்றினாலும் உங்கள் முதலாளியிடம்  உங்கள் வரம்புகளைக் குறித்து விவாதிக்கவும், நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை தெரியப்படுத்துவதன் மூலம் நீங்கள் வசதியாக இருக்க முடியும்,
 7. புதிதாக கற்றுக் கொள்ளுங்கள் – கர்ப்பம் மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பாக நிறைய கற்றுக் கொள்ளுங்கள். நண்பர்களோடு பேசுவது, இது தொடர்பாக படிப்பது, parentune.com போன்ற பெற்றோர்கள் இணைந்த ஆன்லைன் கம்யூனிட்டியில் பங்கேற்பது, வொர்ஷாப்பில் கலந்து கொள்வது ஆகியவற்றின் மூலம் உங்கள் உடல் நலம் மற்றும் உளவியலை நன்கு அறிந்து கொள்ள முடியும்.
 8. உங்கள் அச்சங்களைக் கண்டறிந்து அவற்றை எழுதுங்கள் - குறிப்பாக எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை அடையாளம் காண்பதுடன், அவற்றை வார்த்தைகளில் எழுதுவது மூலம் நீங்கள் அனுபவிக்கும் விஷயங்களை சமாளிக்க சிறந்த வழியாகும். இந்த பழக்கத்தின் இன்னுமொரு போனஸ் என்னவென்றால், நீங்கள் உங்கள் மருத்துவரை அடுத்த முறை சந்திக்கும்போது, இது சார்ந்த ஆலோசனைகளை இன்னும் தெளிவான முறையில் பெற முடியும்.  
 9. எல்லா தகவலகளையும் நம்பாதீர்கள் – ஆதாரமுள்ள தகவல்களை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் பயத்தை ஏற்படுத்த நிறிய பேர் நம்மை சுற்றி இருப்பார்கள். தேவையான, அவசியமான, நம்பிக்கையான தகவல்களை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். வாட்ஸப், சமூக வலைதளம் போன்ற இடங்களில் இருக்கும் எல்லா தகவல்களும் உண்மையான இருக்காது.
 10. உங்களுடைய துணையுடன் வழக்கமான சோதனைகளுக்கு செல்லுங்கள்: உங்கள் துணையுடன் மருத்துவரிடம் சென்று பார்வையிட அறிவுறுத்தப்படுவது நல்லது. உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம். உங்கள் உடலில் உள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்து நீங்கள் அடிக்கடி ஆலோசனை பெறுவது உங்கள் கவலையைத் தடுக்கின்றன. 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs
Tools

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Calculator

Are you pregnant? Track your pregnancy weeks here!

Duedate Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}