• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கரு வளர்ச்சியை பாதிக்கும் 5 பழக்கவழக்கங்கள்

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 19, 2019

 5

கர்ப்ப காலம் என்பது மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கக்கூடியது. குழந்தையை கருவில் சுமக்கும் தாயின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களே அந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை. உடளவில் மனதளவில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளது. அதனால் நாம் என்ன சாப்பிடுகிறோம், நம்மை எப்படி சுகாதாரமாக வைத்து கொள்கிறோம், எதையெல்லம் தவிர்க்க வேண்டும் போன்ற விஷயங்களை முன்னதாக அறிந்து வைத்து அதை பின்பற்றுவது அவசியம். மது, சிகரெட், கஃபேன் மற்றும் அன்றாடம் செய்யக்கூடிய தினசரி பழக்கமும் கூட கருவை பாதிக்கலாம். பொதுவாக கரு வளர்ச்சியை பாதிக்கும் 5 பழக்கவழக்கங்களை இந்த பதிவில் காணலாம்.

கஃபேன் (Caffeine)

நம் காலை பொழுதை உற்சாகமாக தொடங்க உதவும் முதல் அஸ்திரம் காஃபி, நமது அன்றாட பழக்கவழக்கங்களில் இன்றியமையாததாக மாறிப்போன காபியை நாம் கருவுற்ற சமயத்தில் பருகும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால் காப்பியில் caffeine இருக்கிறது.

Caffeine நமது உடலில் இருந்து சிறுநீர் அதிகம் வெளியேற்ற செய்கிறது, இதனால் உடலில் அதிகப்படியான நீர் பற்றாக்குறை ஏற்படும்.நமது உடலுக்கு தேவையான கால்சியத்தை உறிஞ்சும் தன்மை தடைப்படுகிறது. caffeine னால் premature delivery, miscarriage ஆகும் அபாயம், எடை குறைவாக குழந்தைகள் பிறக்கும் என பற்பல ஆய்வுகள் பட்டியலிடுகின்றனர். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் caffeineஐ தவிர்ப்பது நல்லது. 

புகைப்பிடிப்பது, சிகரெட் புகை மற்றும் மதுப்பழக்கம்

கருவுற்றிருக்கும் போது புகைப்பிடிப்பது என்பது கருச்சிதைவு வரை கொண்டு செல்லும். புகையிலையும் ஆபத்து தான். புகைப்பிடிப்பவர் அல்லாது சிகரெட் புகையை நேரடியாக சுவாசிப்பதும் ஆபத்தை விளைவிக்கும். சிகரெட்டின் புகை நூற்றுக்கணக்கான நச்சுத்தன்மையுள்ள இரசாயனங்கள் தாயின் இரத்த ஓட்டத்தின் மூலம் கருவுக்குச் செல்கின்றன. இது கரு வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது

 • சிகரெட்டின் புகைப்பிலுள்ள கார்பன் மோனாக்சைடு, கருவுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதை தடை செய்கிறது.
 • பிறந்தபின் ஆஸ்துமா , நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படச் சாத்தியமுள்ளது.  உடனடி சிசு மரண நோய்க்குறிக்கான (SIDS) அபாயம் உள்ளது.
 • நிகோடின்,  நஞ்சுக்கொடி மற்றும் கருப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. புகைபிடிக்காத கர்ப்பிணி பெண்களுக்கு கூட தொடர்ந்து புகையிலை புகைப்பிடிப்பதை நுகர்வதால் கருச்சிதைவு ஏற்படுகிறது.

இந்த மாதிரி சூழலை தவிர்ப்பதும், சிகரெட் புகையில்லாமல் வீட்டையும் வைத்திருப்பதும் அவசியம்

மதுப்பழக்கம்

மது உங்கள் இரத்த ஓட்டத்தின் வழியே உங்கள் குழந்தையின் இரத்த ஓட்டத்துக்குச் செல்கிறது. கருத்தரித்த பெண்கள் அல்லது கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கான எந்தவிதமான மதுவையும் அருந்தாமல் இருப்பதுதான் நல்லது. கர்ப்பகாலத்தில் மதுவை மிக அதிக அளவில் அருந்துவதால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் மற்றும் குறைமாதப் பிரசவம் ஆவதற்கான அபாயம் அதிகமுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்; ஒருங்கிணைப்பு மற்றும் இயக்கத்தில் பிரச்சினைகள் இருக்கும்; முகம், இதயம் மற்றும் எலும்புகளில் குறைபாடுகள் இருக்கும்.

அதிக நேர வேலை

ஜர்னல் ஆஃப் ஆக்கூபேஷனல் & சுற்றுச்சூழல் மருத்துவம் பத்திரிக்கையின் ஆய்வு அறிக்கையின்படி நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பதும், அதிக நேரம் வேலை பார்ப்பதும், உடல் ரீதியாக அழுத்தம் அதிகமாவதாலும் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என கூறுகின்றது. கர்ப்பிணிகளுக்கு தேவையான சரியான ஓய்வும், தூக்கமும் கிடைக்காத போது பிரசவ காலத்தில் சிக்கல் ஏற்படுவடுவதாக வல்லுநர்கள் கூறுகின்றார்கள். அதாவது குறைமாத பிரசவம் ஆவது அல்லது பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் வரலாம். மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான பிரசவத்திற்கு தேவைப்படுவது கருவுற்ற பெண்களின் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வும், தூக்கமும், அமைதியுமே

துரித உணவுகள்

கருவுற்றிருக்கும் போது ஹார்மோன் மாற்றங்கள் சில உணவுகளை சாப்பிடத் தூண்டும். துரித உணவுகள் எளிதாக கிடைக்கிறதே என்று அதை உட்கொள்வதால் பல பிரச்சனைகள் வரக்கூடும்.

 • கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவு உட்கொள்வதால், தாய்க்கு எடை அதிகரிக்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக எடை காரணமாக குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் பிரசவிக்கும் நேரத்திலும் சிக்கல்கள் வரலாம்.
 • சில ஆய்வுகள் மூலம் செயற்கை உணவு வண்ணம் மற்றும் இரசாயன சேர்க்கைகள் காரணமாக கருவில் உள்ள குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடுகள் வர வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 • கர்ப்ப காலத்தில் இந்த மாதிரி துரித உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தாய்மார்களின் குழந்தைகள் வளர்ந்தவுடன் இயல்பாகவே துரித உணவுகளுக்கு அடிமையாவார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமற்ற சுகாதாரம்

கருவுற்றிருக்கும் இருக்கும் போது ஏற்படும் மசக்கை காரணமாக ஒருவித சோர்வும், சோமேறித்தனமும் இருந்து கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வைரஸ் மற்றும் பேக்டீரியா நோய்த்தொற்றுகள் எளிதாக தாக்கலாம்.

 • ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோனின் அதிக அளவு காரணமாக பல் ஈறு பிரச்சனைகள் உண்டாகலாம். பற்களை சுத்தமாக வைக்கவில்லையென்றால் ஈறுகளில் ரத்தம் கசிவது மற்றும் கேவிட்டீஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கவனிக்கப்படாத தொற்றுகள் மூலம் கருவில் உள்ள குழந்தைக்கும் தாக்கம் ஏற்படும்.
 • அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். குளிக்கும் போது அந்தரங்க பகுதியில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
 • சொளகரியமான மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துங்கள். அதிகமாக வேர்த்தால் உடனே உடை மாற்றிக் கொள்ளுங்கள்.
 • தினமும் தவறாமல் குளிக்க வேண்டும். பெண்ணுறுப்புகளை சுகாகாதார வைக்க வேண்டும். Oral hygiene குழந்தை மற்றும் தாயாரின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

உங்களுடைய வாழ்க்கைமுறை ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான வழிகளை தொடர்ந்து செய்யுங்கள். கருவை பாதிக்கும் பழக்கவழக்கங்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி நாளை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தை பெற்றுக் கொள்ள வழிவகுக்கும்

 • 3
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Feb 08, 2019

8month pregnant but 7 month scan la baby breech position nu soli normal delivery agathu ini head down agathunu solranga

 • அறிக்கை

| Feb 06, 2019

I want to get pregnant 3 years of marriage life over.

 • அறிக்கை

| Jan 29, 2019

I'm pregnant in 5month some time stomach pain iruku ithu normal ah

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Days Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}