• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

கொசுக்களிடமிருந்து நம்ம குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது

Jeeji Naresh
1 முதல் 3 வயது

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 18, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கொசுக்களிடம் இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. குறிப்பா இந்த மழைக்காலம், குளிர்கால துவக்கம் மற்றும் முடிவில் அதிகமா இருக்கும் அதுங்களோட தாக்கம். பொதுவாக கொசு கடில இருந்து குழந்தைகளை பாதுகாப்பது ஒரு சவாலான விஷயம் .எத்தனையோ அம்மாக்கள் எத்தனையோ இரவுகள் தூங்காமல் தங்கள் குழந்தைகளுக்கு கொசு விரட்டிய அனுபவம் இருக்கும். ஏனென்றால்  டெங்கு, சிக்கன்குண்ய, மலேரியா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்கள் வர இந்த கொசுக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றது.

பெரும்பாலும் மார்கெட்டில் இருக்கும் கொசு விரட்டி மற்றும் கொசு சுருள், லிக்விடேட்டர் எல்லாம் நம்ம குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா ? என்றால் நிச்சயம் இல்லை. அவைகள் தோல் அலர்ஜி மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அப்போ இயற்கையான முறையில் இந்த கொசுக்களை எப்படி விரட்டலாம், இந்த கொசுக்களிடமிருந்து எப்படி நம்ம குழந்தைகளை பாதுகாக்கலாம் என்ற சில குறிப்புகளை உங்களோட பகிர்ந்து கொள்ள விரும்புறேன்.

வீட்டிற்குள் கொசுக்கள் வரமால் இருக்க என்ன செய்யலாம்:

குழந்தைகள் அதிகமான நேரம் வீட்டில் தான் செலவழிக்கிறாங்க. அதனால் இந்த கொசுக்கள் வீட்டுக்குள்ள வராம தடுக்கும் வழிகள முதல்ல பார்க்கலாம்.

  1. குப்பைகளில் தான் கொசுக்கள் வாழும், அதனால் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் குப்பை சேராமல் தூய்மையாக வைத்துக்கொள்வதுதன் மூலம் கொசுக்கள் அதிகம் வராம தடுக்கலாம்
  2. கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய எளிதான வழி தண்ணி தேங்கி இருத்தல். வீட்டிற்குள் சிலர் பூச்செடிகளை தண்ணீரில் வைப்பாங்க அதனை தவிர்க்கலாம். வீட்டை சுற்றியும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவது முக்கியம். மீன் தொட்டியை சுத்தமாகவும் , மூடியும் வைப்பது நல்லது.
  3. வீடு துடைக்கும்போது அதில் சிறிது மஞ்சள் தூள், கல்லுப்பு, புதினா எண்ணெய் அல்லது யூக்கலிப்டஸ் எண்ணெய் ஒரு மூடி சேர்த்து துடைக்கலாம்
  4. கொசுக்கள் அதிகமாக இருக்கும் காலத்தில் வீட்டின் ஜன்னல், கதவுகளை மாலை வேளையில் சீக்கிரமாக அடைத்து வைப்பதன் மூலம் ஓரளவு கொசுகளிடமிருந்து தப்பிக்கலாம்.
  5. ஜன்னல்களுக்கு, கதவிற்கு கொசுவலை பயன்படுத்தலாம்
  6. குழந்தைகளை கொசுக்களி்டம் இருந்து காப்பாற்ற படுக்கையில் கொசுவலை விரிப்புகள் பயன்படுத்தலாம்.
  7. வீட்டை சுற்றி கற்பூரம் வள்ளி, துளசி, திருநீற்று பச்சிலை செடிகள் வளர்க்கலாம். இடம் வசதி இல்லாதவர்கள் ஒரு சிறு பூந்தொட்டியில் கூட செடிகள் வளர்க்கலாம்

இயற்கையான முறையில் எப்படி கொசுக்களை விரட்டலாம்:

மூலிகை புகை: வேப்பிலை, நொச்சிலை, மாவிலை, யூக்கலிப்டஸ்  இலை, தேங்காய் நார் இவைகளில் ஒன்றை நன்கு உளர்த்திவிட்டு மாலை வேளையில் புகை போடலாம். குழந்தைக்கு  சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் தவிர்த்து கொள்ளுங்கள். இவர்களுக்கு கொதிக்கும் தண்ணீரில் இவை அனைத்தையும் போட்டு குழந்தை தூங்கும் அறையில் வைத்து விடுங்கள்.          

அத்தியாவசிய எண்ணெய்: வேப்பிலை எண்ணெயுடன் சிறிது லாவெண்டர் எண்ணியை சேர்த்து குழந்தைகளின் கை, கால், முகம் கழுத்து பகுதியில் தேய்த்து விடலாம். தேங்காய் எண்ணெயும் லாவெண்டர் எண்ணெயும் கூட சேர்த்து தேய்க்கலாம்

எலுமிச்சை மற்றும் கிராம்பு: எலுமிச்சை பழத்தில் நான்கு, ஐந்து கிராம்பு சொருகி குழந்தைகள் தூங்கும் இடத்திற்கு அருகில் வைத்தால் கொசுக்கள் அண்டாது

கற்பூரவள்ளி, பூண்டு, கற்பூரம் தண்ணீர் : கற்பூரவள்ளி இலையை அரைத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். பூண்டின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காத ஒன்று. சிறிது பூண்டு அல்லது கற்பூரம் இவற்றை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணிரை வீட்டினுல் தெளிக்கலாம். 

குழந்தைகளை கொசு கடித்தால் என்ன தீர்வு:

ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த கொசு கடியினால வர தடிப்புகள், அறிகுறிகள் மாறலாம். முடிந்தவரையில் நம் வீட்டுப் பொருட்கள வைத்து குணப்படுத்த முயற்சி செய்யலாம். 

கொசு கடித்தால் ஒருவிதமான அரிப்பு, சிவப்பு தடிப்பு ஏற்படும் குழந்தைகள் சொரியாமல் இருக்க ஒரு பூண்டு பல் அல்லது ஒரு சின்ன வெங்காயம் நசிக்கி கடித்த இடத்தில் தேய்த்து விடலாம்.

சிவந்த தடிப்பு, எரிச்சல், அரிப்பு சரி ஆக வாழை பழத்தோலை அந்த இடத்தில் பயன்படுத்தலாம். வாழை பழ தோலிற்கு அலர்ஜி எதிர்ப்பு பண்பு உள்ளது

வெள்ளரிக்காய் சரும அரிப்பை போக்கும் தன்மை கொண்டது. அரிப்பு ஏற்பட்ட இடத்தில் சிறிது வெள்ளரிக்காயை அரைத்து தேய்க்கலாம் . குழந்தைகளின் சருமத்திற்கும் இது நல்லது

மிளகுகீரை எண்ணையை தேய்க்கலாம். இதற்கு குளிர்வுட்டும் திறனுடயதால் அரிப்பு வராமல் தடுக்கும்

சிவந்த தடிப்பின் மற்றும் காயமாக இருந்தால் அதன்  மேல் சிறிது மஞ்சள்தூள், உப்பு தண்ணீரில் கலந்து வைக்கலாம் சீக்கிரம் ஆறிவிடும்

கொசு தொல்லையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்காக செயற்கையான கொசுவர்த்தி சுருள். கொசு விரட்டி திரவம் எல்லாம் பயன்படுத்துவதை தவிர்த்து மேல் குறிப்பிட்ட இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள். இதன் நன்மைகளை பலவிதங்களில் நீங்க உணர்வீங்க.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். உங்களுடை கருத்துகளை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும். மேலும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸை பகிர்ந்து கொண்டால் மற்ற பெற்றோரும் பயனடைவார்கள்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}