கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை - சிறப்புகள் மற்றும் பட்சணங்கள்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Aug 30, 2021

பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் மக்களால் அதிகம் கொண்டாடப்படுவது ஸ்ரீஜெயந்தியாகவும் கிருஷ்ண ஜெயந்தியாகவும் கோகுலாஷ்டமி. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இந்த ஆண்டு ஆவணி14ஆம் தேதி ஆகஸ்ட் 30ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா ஏன் கொண்டாடுகிறோம்
கம்சன் என்ற அரக்கன் மதுராவை ஆண்டு வந்தான். கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன். அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நடு இரவில் வசு தேவருக்கும், தேவகிக்கும் மகனாக அவதரித்தார் பகவான் கண்ணன்.பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்று பயந்தனர். அப்போது குழந்தை, பேசத் தொடங்கியது. ‘உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று உத்தரவிட்டார் மகாவிஷ்ணு.
சில காலங்கள் அன்னை யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்’ என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். கம்சன் தன்னை அழிக்கப் பிறந்த குழந்தை எதிரியை எப்படியாவது அழிக்க வேண்டும் என நினைத்தான்.
குழந்தையாக இருந்த போதே தன்னை அழிக்க வந்த அரக்கர்களை கொன்ற கண்ணன் பல லீலைகளையும் செய்து குறும்பு கண்ணனாக வலம் வந்தார்.மதுராவிற்கு வந்து தனது தாய் மாமன் கம்சனையும் வதம் செய்து கொன்றார்.•கண்ணனின் பிறப்பு அசுர வதத்திற்காக மட்டும் நிகழ்ந்ததல்ல. போர்க்களத்தில் பகவத் கீதையை போதித்து மண்ணுலக மக்களை ரட்சிக்க வந்தவராய் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக்கண்ணனாக வலம் வருகிறார் பகவான் கிருஷ்ணன்.
குழந்தை கிருஷ்ணருக்கு பிடித்தவை
- கிருஷ்ணர் எப்போதும் தனக்கு பிடித்த புல்லாங்குழலுடன் இருப்பது வழக்கம்.
- அவரின் அழகுக்கு அழகு சேர்ப்பதால் மயில் இறகுக்கு மேலும் பெருமை சேர்ந்தது என்றால் மிகையாகாது.
- பால கோபாலுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்த ஒன்று..
- பசு பிடிப்பதால் கிருஷ்ணரை நந்த கோபாலன் என்று அழைக்கப்படுகிறார். இது உண்மையில் ‘பசு பாதுகாவலன்’ என்று பொருள் படும்
பிடித்த பூ மல்லிகை, கடம் பூக்கள்..
பிடித்த பழங்கள் நாவல் பழம், கொய்யா, நெல்லிக்கனி..
பிடித்த நிறம் மஞ்சள் மற்றும் நீலம்.அதனால் அவர் பிதாம்பரர் மற்றும் நீலாம்பரர்..
பிடித்த பட்சணங்கள்
- சீடை
- அவல்
- தட்டை
- முறுக்கு
- அப்பம்
- பாலில் செய்த இனிப்புகள்
- லட்டு மிகவும் பிடித்த ஒன்று.. அதனால் அவர் செல்லமாக லட்டு கோபால் என்று அழைக்கப்படுகிறார்.
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.