• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

குழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை - பிறகு ஏன்?

Kiruthiga Arun
0 முதல் 1 வயது

Kiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 15, 2018

பாட்டியாக இருந்தாலும் அம்மாவாக இருந்தாலும் குழந்தை அழுவத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. பெரும்பாலும் நம்ம குழந்தை அழுதா பசின்னு நினைப்போம். ஆனா எல்லா நேரமும் பசிக்காக மட்டும் நம் குழந்தை அழறது இல்ல. அவங்க பேச ஆரம்பிக்கிற வரைக்கும் எதுக்கு அழறாங்கனு கண்டு பிடிக்கிறதே நமக்கு பெரிய சவாலா இருக்கும்.

என்னென்ன காரணங்களுக்காக குழந்தைகள் அழுகிறார்கள்

· பசி அழுகை: குழந்தை பசிக்காக அழும் போது நிச்சயமா எதாவது ஒரு விஷயத்தை செய்யும். அதை நம்ம தெரிஞ்சு வெச்சுக்கணும். என் பொண்ணு பசிக்கும் போதும் தூக்கம் வரும் போதும் கை சப்புவா. அப்பவே எனக்கு தெரிஞ்சிடும் ஒன்னு இது பசிக்காகவா அல்லது தூக்கத்திற்காகன்னு  உடனே நாம தெரிஞ்சு அதற்கான ஏற்பாடுகளை செஞ்சா அவங்க அழ போறது இல்ல.

· வயிற்று வலி மற்றும் வாய்வு தொல்லை: சில குழந்தைகள் சாப்பிட்ட உடனே அழ ஆரம்பிப்பாங்க. சாப்பிட்ட பிறகு சில சமயம் வயிற்று வலி இருக்கும். அதே மாதிரி வாய்வு தொல்லைகளும் இருக்கலாம். அப்படி வாய்வு தொல்லை இருக்கும் போது அது வெளி ஏறும் வரை குழந்தை அழுகும். அதுவே அவர்களுக்கு வயிற்றில் அழுத்தம் தரும். அதனால் அவர்களை திருப்பி போட்டு மெதுவாக அவர்களது கால்களை சைக்கிள் ஓட்டுகிற மாதிரி அசைக்கவும். இது வாயுவை வெளியேற்ற உதவும்.

·    ஏப்பம் விடுதல்: ஏப்பம் விட்றதுக்கெல்லாம் குழந்தை அழுமானு கேக்காதீங்க. அதுவே அவங்களுக்கு பெரிய தொல்லையா இருக்கும். அது வெளிய வரதுக்குள்ள அவங்க பயந்து அழுவங்க. முதுகை நல்ல தட்டி விடலாம், தடவி விடலாம் . இப்படி செய்வதனால அவங்க இயல்பா இருந்தாங்கன்னா அப்போ இது ஏப்பத்திற்கான அழுகைன்னு தெரிஞ்சிகோங்க.

· ஆண் குழந்தைகள்: ஆண் குழந்தைகள் அழுகும் பொழுது மேல சொன்ன விஷயங்கள் எதுவும் இல்லனா அவங்க ஆண் குறிகளை பாருங்க. சில சமயத்துல அங்க முடி சுத்தி இருந்தா அந்த அழுத்தம் கூட அவங்க அழுகைக்கு காரணமா இருக்கலாம். 

· டயபர்சில சமயங்களில் டயபர் நிரம்பிடுச்சுன்னா குழந்தைகளுக்கு எரிச்சலும், அசொளகரியமும் ஏற்படும். அதனால கூட அழலாம். நிச்சயமா அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தையோட டயப்பரைப் பாருங்க.

· அதீத குளிர்/வெப்பம் உணரும் பொழுது: ரொம்ப குளிர் இல்ல வேர்க்கும் பொழுது அழுவங்க. உடை மாத்திக் கொண்டிருக்கும்  பொழுது கூட குளிர் தாங்காம அழுவங்க. இல்ல ரொம்ப இருக்காமான உடை போட்டு இருந்தாலோ அல்லது துணி சருமத்தை உருத்தினாலோ அழ கூடும். மற்றும் உடை ஈரமாக இருந்தாலும் அழுவார்கள். அதனால அடிக்கடி அதையும்  செக் பண்ணிக்கோங்க.

· பற்கள் வளரும் பொழுது: குழந்தை பருவத்தில் முக்கியமான ஒரு விஷயம் பற்கள் வளர்வது. அவங்களுக்கு அது நிச்சயமா எரிச்சல் மற்றும் வலியை  ஏற்படுத்தும். அதனால கூட அழுவங்க. 

· எறும்புகள் ஜாக்கிரதை : சில நேரங்களில் குழந்தையின் ஆடையிலோ அல்லது உடம்பில் எறும்பு கடித்தாலும் அழுவார்கள். அவ்வப்போது குழந்தையின் ஆடையையும், உடல் முழுவதும் பார்ப்பதன் மூலம் அவர்களின் அழுகையின் காரணத்தை அறிய முடியும்.

· அம்மாவிற்காக: குழந்தைகளுக்கு எப்பொழுதும் யாராவது பக்கத்துல நெருக்கமா இருக்கிறது பிடிக்கும். அதுவும் அம்மாவையோ இல்ல அப்பாவையோ தான் எதிர்பாப்பாங்க. அப்படி இல்லாத பொழுது தான் அழுவங்க. என் பொண்ணுக்கு குழந்தைல இருந்தே என் கையை பிடிச்சிட்டே இருக்கணும். தூங்கும் போதும் அவ பக்கத்துல நான்  இருக்கும் போதும் என் கையை எப்போதும் பிடிச்சிருப்பா

· உடல்நலன்: காய்ச்சல் வரதுக்கு முன்னாடியும் வந்த அப்பறமும் குழந்தைங்க நிச்சயமா அழுவங்க. அவங்களுக்கு சரியாகும் வரை அழுகையை நிறுத்துறது ரொம்ப கஷ்டம் தான். சில சமயங்களில் காய்ச்சல் வரதுக்கு முன்னாடியே அழுகை ஆரம்பிச்சிடும். இதுவும் நமக்கு ஒரு பாடம் தான். காய்ச்சல் வரத்துக்கான அறிகுறி தான் இந்த அழுகைனு தெரிஞ்சிக்கணும். 

· ஆர்வங்கள்: பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி ஒரு வயது குழந்தையாக இருந்தாலும் சரி அவர்களுக்கென தனித்தனி ஆர்வங்கள் ஆசைகள் உண்டு. வேடிக்கை பாக்கிறது அல்லது மற்ற குழந்தைங்க விளையாடுறத பாக்கிறது அல்லது உங்கள தூக்கிட்டு நடக்க சொல்லுவாங்க. இப்படி தன்னோட தேவை, ஆசை, வருத்தம், ஏமாற்றம் என எல்லாவற்றையும் குழந்தைங்க அழுகை மூலமாக தான் வெளிப்படுத்துவாங்க. ஏன்னா இந்த காலகட்டத்துல அழுகை தான் அவங்களோட மொழி.

அவங்க எதுக்கு அழறாங்கனு தெரிஞ்சிக்கிறது கொஞ்சம் கடினமான விஷயம் தான். ஆனா அவங்கள கூர்ந்து கவனிச்சோம்னா நமக்கு அந்த அழுகையின் அர்த்தம் புரிஞ்சிடும்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}