• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி - தவிர்க்க வேண்டியவைகள்

Vidhya Manikandan
0 முதல் 1 வயது

Vidhya Manikandan ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 05, 2018

 

குழந்தைகள் பிறந்து 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.அதற்கு மேலும் ஒரு வயது வரை கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆனால் இன்றைய சமூதாயத்தில் தாய்மார்கள் டின் ஃபுட், பால் பவுடர் என்று குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்கிறார்கள் அதை தவிர்க்கவும். டின் ஃபுட்டில் நீங்கள் பார்த்தால் அரிசி,பருப்பு,காய்கரிகள்,பழங்கள் போன்றவற்றை பதப்படுத்தி தயாரித்து இருப்பார்கள்.அது போக கால அவகாசம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இதை கொடுப்பதால் தான் குழந்தைகளுக்கு  ஃபுட் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. நம் நாட்டில் இயற்கையாகவே அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் கிடைக்கின்றது. நாம் அதை கொண்டு உணவு தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே எந்த ஒரு அலர்ஜியும், நோயும் அண்டாது. இதைதான் “உணவே மருந்து” என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

குழந்தைகளுக்கு உணவு எந்த மாதத்திலிருந்து கொடுக்கலாம்?

சிலபேர் மூன்றாவது ஐந்தாவது மாதத்திலுருந்து கொடுப்பார்கள் ஆனால் ஆறாவது மாதத்திலிருந்து தான் கொடுக்க வேண்டும்.அது வரை திரவ உணவாக எடுத்த குழந்தைகள் ஆறாவது  மாதத்திலுருந்து திட உணவாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட தொடங்குவார்கள்.

என்ன சாப்பிட கொடுக்கலாம் ?

6 வது மாதம்:

 குழந்தைகளுக்கு செரலாக் கொடுப்பதற்க்கு பதிலாக வீட்டிலேயே நாம் செரலாக் தயாரிக்கலாம்.சாப்பாடு அரிசியை வருத்து பொடி செய்து கொள்ளவும். பின் பாசி பருப்பு ,உளுந்தம் பருப்பு, வறுகடலை இவை மூன்றையும் தனித் தனியாக வறுத்து பொடித்து  வைத்து கொள்ளவும் அரிசி பொடியுடன் ஏதாவது ஒரு பருப்பை மட்டும் சேர்த்து கஞ்சி போல் காய்ச்சி கொடுக்கலாம்.இவ்வாறு மூன்று பருப்பையும் தனித்தனியே சேர்த்து உபயோகிக்கலாம்.சர்க்கரை உபயோகிக்க வேண்டாம். அதற்கு பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி பாகு ஊற்றி இனிப்பாக கொடுக்கலாம்.

7-8 வது மாதம்:

சூப் வகைகள், கஞ்சிகள், நன்றாக வேக வைத்து மசித்த காய்கறிகள் மற்றும் பழங்களை  உணவாக கொடுக்கலாம்.

9 வது மாதம் முதல் ஒரு வயது வரை:

நன்றாக மென்று  சாப்பிடும் உணவுகளை  கொடுக்கலாம் ஒரு வயது குழந்தைக்கு பழங்கள் மற்றும் சாதம் வகைகளை நன்றாக வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம்.

அலர்ஜியை தடுக்க நாம் எதை தவிர்க்க வேண்டும்:

நம் குழந்தைகளின் ஆரோக்கியம் நாம் கொடுக்கும் உணவில் தான் உள்ளது. எனவே நாம் “ஆரோக்கிய உணவையே கொடுப்போம்! ஆரோக்கியமாக குழந்தைகளை வளர்ப்போம்!.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}