• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தையின் மலத்தின் நிறம் சொல்லும் அர்த்தங்களும் அறிகுறிகளும்

Radha Shree
0 முதல் 1 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 07, 2019

பெரும்பாலான குழந்தைகள் மலம் கழிக்கும் போது முகத்தை சுழிப்பது அல்லது பல்வேறு ஜாடைகள் காட்டுவார்கள். இந்த ஜாடைகள் பார்க்க ரசிப்பதாக இருந்தாலும் இதற்கு பின்னால் நிறைய அர்த்தங்கள் ஒலிந்திருக்கின்றது.

பிறந்த குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது குழந்தையின் மலத்தை தவறாமல் கவனிக்க வேண்டும். ஏன்னென்றால் குழந்தையின் மலத்தின் மூலம் அவர்களுடைய உடல்நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் நம் குழந்தை எப்படி மலம் கழிக்கிறது என்பதை கவனித்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப் பிரச்சனைகளை அறியலாம்.

புதிதாக பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தையின் மலத்தின் மூலம் அவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படி உணர்கிறார்கள், ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்

புதிதாக பிறந்த குழந்தையின் கருமலம் அல்லது மெக்கோனியம்

மெக்கோனியம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய குழந்தையின் மலம் பொதுவாக கருமையான மற்றும் பச்சை-கருப்பு நிறத்தில் இருக்கும். இது முற்றிலும் சாதாரணமானது. மலம் தளர்வாகவே(loose) இருக்கும். இதுவும் முற்றிலும் சாதரணமானது.

என்ன செய்ய வேண்டும் ?

மெகோனியம் தற்காலிகமானது, உங்கள் குழந்தை பிறந்த பின் முதல் மூன்று நாட்களுக்கு நீடித்திருக்கும், பின்னர் இது மஞ்சள் நிறத்தில் மாறும்.

 பளிர் மஞ்சள் மற்றும் பசைப் போல் மலம்

பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதால் அவர்களின் மலம் தளர்வாக மற்றும் seedy poop என்பது போல் இருக்கும். லேசாக நாற்றம் வரும். பார்க்க வயிற்றுப்போக்கு போல் தோன்றும். பயப்பட வேண்டாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இது முற்றிலும் இயல்பானது.

என்ன செய்ய வேண்டும் ?

கவலை கொள்ளாமல் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

கருநிறம் மற்றும் அடர்த்தியாக

தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளின் மலம் கருமையாகவும், அடர்த்தியாகவும் (Thick and Dark) இருக்கும்.

என்ன செய்ய வேண்டும் ?

கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் குழந்தையின் இயல்பான உணவுப் பழக்கத்தை நீங்கள் தொடரலாம். நீங்கள் புதிதாக ஏதாவது ஃபார்முலா பால் கொடுக்க ஆரம்பித்தால் அவர்களின் மலத்தில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் அது சில நாட்களில் சரியாகிவிடும்.

பச்சை நிறம் கலந்த பழுப்பு நிறம் (Greenish Brown)

உங்கள் குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்த பிறகு அவர்களின் மலம் பச்சை நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் (Greenish Brown) மாறும். மேலும் உங்கள் குழந்தை இரும்பு சத்து மருந்து உட்கொண்டாலும் மலம் இந்த நிறத்தில் இருக்கும். இது முற்றிலும் சாதாரணமானது.

என்ன செய்ய வேண்டும் ?

இப்படி மலம் வருவது சாதாரணம் தான். உங்கள் குழந்தையிடம் காய்ச்சல், சளி அல்லது அதிக எரிச்சலூட்டும் தன்மையை இதனுடன் நீங்கள் கவனித்தால் மருத்துவரை அணுகலாம்.

மருத்துவரை அணுக வேண்டிய அறிகுறிகள்

உங்கள் குழந்தையின் மலத்தின் நிறம், தன்மை மற்றும் மணத்தை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தையும், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் கண்டறிய முடியும்.

 • தொடர்ந்து தண்ணீர் மற்றும் பழுப்பாக காணப்பட்டால்

குழந்தை தளர்வாக மலம் கழிப்பது இயல்பு தான். ஆனால் தொடர்ந்து குழந்தை இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீராக மலம் கழிப்பதோடு அசொளகரியமாக உணர்வது, பால் குடிக்காமல் தவிர்ப்பது, காய்ச்சல், வலியால் அழுவது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் வயிற்றுப்போக்காக இருக்கலாம். வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரை அணுகுவது நல்லது.

 • வறண்டு மற்றும் கற்கள் போல் காணப்பட்டால்

இந்த நிலைத்தன்மை இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருக்கலாம். எப்போதாவது மலம் தளர்வாக மற்றும் இறுக்கமாக காணப்பட்டால் இயல்பானது. குழந்தைளுக்கு ஃபார்முலா பால் அறிமுகபப்டுத்தும் போது, அதை மாற்றும் போது, திட உணவு ஆரம்பிக்கும் பொழுது மலம் இறுக்கமாக வரலாம்.

தாய்ப்பால்/. ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இன்னும் அதிகமாக பால் கொடுங்க. 3 மாத குழந்தைகளுக்கு ஒரு நாளில் மூன்று நான்கு தடவை ஒரு பாலாடை தண்ணீர் கொடுக்கலாம்.

திட உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு நார்ச்சத்து:ள்ள காய்கறி மற்றும் பழங்கள் கொடுக்கலாம். தண்ணீர், மோர் கொடுக்கலாம். இது மலச்சிக்கலில் இருந்து பாதுகாக்கும்.

 • பச்சையாக மற்றும் மெலிதாக

மலம் பச்சை நிறத்தில் மெலிதாக இருந்தால் மலத்தில் சளி இருப்பதற்கான அறிகுறி. இது ஒரு நோய் தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம் மருத்துவரை அணுக வேண்டும்.

 • வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்

மலம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் இருந்தால் உங்கள் குழந்தைக்கு  உணவு சரியாக செரிக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். இதுவும் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்கப்பட வேண்டும்

 • அதீத துர்நாற்றம்

குழந்தையின் மலத்தில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசினால், மருத்துவரை அணுகவும்.

மேலும் சில அறிகுறிகளை கீழே பார்க்கலாம்

 • மலத்தில் இரத்தம்
 • வாந்தி
 • காய்ச்சல்
 • கருநிறத்தில் சிறுநீர்
 • பசியின்மை
 • அதீத சோர்வு மற்றும் கவனமின்மை

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளில் 4-5 முறை மலம் கழிப்பது குழந்தைகளுக்கு சாதாரணமானது, ஆனால் இதில் நீங்கள் பெரிய மாறுபாட்டை கண்டால் சிக்கலைக் குறிப்பதாகும். தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருக்கும் குழந்தைகளை நன்றாக நீரில் சுத்தம் செய்யவும். இதனால் அவர்களுடைய மென்மையான சருமத்தில் பாதிப்புகள் வரலாம். மருத்துவரிடம் அதற்கேற்ற ரேஷஸ் மருந்தையும் பரிந்துரைக்க சொல்லுங்கள்.

உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை புரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி கவலை கொள்ளாதீர்கள். புதிதாக பிறந்த குழந்தைகளின் அம்மாக்கள் இந்த கவலைகளை எளிதாக கையாள்வதன் மூலம் உங்கள் குழந்தையுடன் பிணைப்புடன் மற்றும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த பெற்றோர் Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}