• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

குழந்தைகளின் கொரோனா பயத்தை எவ்வாறு கையாள்வது?

Jeeji Naresh
3 முதல் 7 வயது

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 19, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

அப்பா ஒரு மருத்துவமனையில் அம்மா ஒரு மருத்துவமனையில் ஆறு வயதான குழந்தையை தன் நண்பர் வீட்டில் விட்டு விட்டு தானும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வரகின்றனர் ஒரு பெற்றோர். இந்த சூழ்நிலையில் அந்த குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்று பார்க்கும் நேரத்தில் அத்தனை சமத்தாகவும், புரிதலுடன் தன்னுடைய அப்பா, அம்மா சரி ஆகிட்டு என்னை வந்து சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்கனு நம்பிக்கையோடு விளையாடி கொண்டிருக்கிறாள் தன் பெற்றோரின் நண்பர் வீட்டில்..

உண்மையாகவே இந்த குழந்தையின் நம்பிக்கையும், தன்னை புது சூழலுக்கு ஏற்றவாறு மாற்ற தயாராகும் மணபக்குவமும் ஆச்சரியமானதே.. ஆனால் எல்லா குழந்தையும் ஒரே மாதிரி நடந்து கொள்வதில்லை. இந்த குழந்தைக்கு கூட உள்ளே ஏக்கம் இருந்திருக்கலாம். ஆனால் வெளிக்காட்ட தெரியாமலும் இருந்திருக்கலாம். ஆனால் அந்த பெற்றோர் செய்த ஒரு சிறப்பான விஷயம் தன் குழந்தைக்கு கொரோனா நோய் பற்றியும், தாங்கள் குணமடைந்து சீக்கிரமே உன்னை வந்து அழைத்து போவோம் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி பல சம்பவங்களை நாம் திமந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் தங்களுக்கு முன் நடக்கும் சம்பவங்களை கொண்டே இந்த உலகத்தை அனுமானித்துக் கொள்கிறார்கள். சர்வதச குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் , கொரோனா தொற்று ஏற்படுத்திய பதற்றத்தால் குழந்தைகள் மனநிலை பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு நாம் எப்படி உதவலாம்? அவர்களுக்கு எப்படி தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முதலில் குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்வது எப்படி?

குழந்தைகளுடன் உரையாடுவதன் மூலம் அவர்களின் மனநிலையை தெரிந்து கொள்ளலாம். இதனால் நோய் குறித்த அச்சத்தை போக்க முடியும்.

கொரோனா குறித்த கேள்விகளை கேளுங்கள்:

 • நம்மை சுற்றி கொரோனா நோய் பரவுவதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்.?
 • கொரோனா என்றால் என்ன? என்று கேள்விகள் கேட்கலாம்.

கொரோன பற்றி ஒரு படம் வரைய சொல்லலாம்.  இதன் மூலம் அவர்களின் கொரோனா பற்றிய புரிதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் புரிதலை அலட்சியம் செய்யும் வகையிலோ அல்லது கிண்டல் தொனியிலோ நாம் அணுக கூடாது.

உண்மை சூழலை நேர்மறையாக எடுத்து சொல்லுவோம்:

இந்த நோயின் உண்மை நிலையை முடிந்த வரை குழந்தைகளிடம் எடுத்து சொல்லுவோம். என்னென்ன விஷயங்கள் என்பதை பார்க்கலாம்:

 • அறிகுறிகள், எவ்வாறு பாதிக்கின்றது, எவ்வாறு பரவுகிறது. அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது என்பது பற்றிய விவரங்களை சொல்லலாம். முடிந்தவரை உண்மையான தகவல்களை அவர்களுக்கு இலகுவாக சொல்லி கொடுக்கலாம்.
 • கொரோனா பற்றி செய்திகளில் வருகின்ற எதிர்மறை விஷங்களை தவிர்ப்பது நல்லது. அதாவது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா இறந்து கொண்டிருக்கிறார்கள் போன்ற செய்திகளை தவிர்ப்பது நல்லது.குழந்தைகளுக்கு இதனால் அச்சம், நம்பிக்கையின்மை வரக் கூடும் இதனை பற்றி வீட்டில் பேசிக்கொள்வதை தவிர்க்கலாம்.
 • இதற்கு பதிலாக நாம் எப்படி பாதுகாப்பாக இருந்தால் இந்த நோய் வராது மற்றும் அப்படியே வந்தாலும் இதில் இருந்து மீண்டு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் போன்ற நேர்மறை விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். பயமுறுத்தி ஏற்படுத்தும் பாதுக்காபு குழந்தைக்கு அச்ச உணர்வையே ஏற்படுத்தும். வீட்டில் ஏதாவது அவசர மருத்துவ உதவி நாடும் போது குழந்தைகளை கையாள்வது கடினமாக மாறக்கூடும்

எவ்வாறு குழந்தைகளின் கொரோனா பயத்தை சமாளிப்பது:

இப்போ இருக்கின்ற சூழ்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம் அதனை சமாளிப்பது அவசியம். முதலில் குழந்தைக்கு ஒரு நேர்மறையான வார்த்தை மந்திரத்தை சொல்லி கொடுப்போம்.உதாரணமாக " நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" "நான் என்னை தூய்மையாக வைத்துக் கொள்கிறேன்" இந்த மாதிரி வார்த்தைகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட முடியும்.

     1. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்துவது:

தங்களை எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயங்களான கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவது. மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியுடன் இருப்பது போன்றவற்றை அறிவுறுத்த வேண்டும். மேலும் தும்மும் போதும், இரும்பும் போதும் கை முழங்கை மூலம் மறைக்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும். அப்போதான் வீட்டில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தால் அவர்களிடம் நெருக்கமாக இருக்க கூடாது என்று உணருவார்கள்.

    2. கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தின் உதவியாளர்களை பற்றி பேசுவது:

எத்தனையோ மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்ற கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யும் பணியாளர்களை பற்றி குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். நமக்காக தொடர்ந்து உதவி செய்றாங்க என்று சொல்லும்போது சிறுவயதிலேயே நன்றி உணர்வும், மதித்து நடக்கும் உணர்வும் வளர்த்துக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாது வீட்டில் லாக்டவுனில் இருக்கும் நாம், நம் குழ்தைகளுக்கு வீட்டு வேலைகளை செய்ய சொல்லித்தர வேண்டும். வீட்டில் யாராவது உடல்நிலை சரயில்லாமல் இருக்கும்போது அவர்களுக்கு உணவு, தண்ணிர் எடுத்து தருவது. நலம் விசாரிப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் சிறு வயதிலேயே வளரும்.

    3. குழந்தைகளை பாதுகாப்பாக மற்றும் உடல் நலனுடன் இருக்க சில குறிப்புகள்:

 • சத்தான உணவை உட்கொள்வது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது இதன்மூலம் ஒரு ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியும் என்று குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
 • நோய் எதிர்ப்புசக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும். நேர்மறையான எண்ணம் சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க உதவுகின்றது.இதனை பற்றின அச்சம்  மனரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது.
 • குழந்தைகள் அன்றாட செய்யுற விஷயங்களை அப்படியே நிறுத்திடாமல் இருக்க முயற்சி செய்யனும். அதாவது பாதிப்பு குறைவாகவோ அல்லது வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள் பல ஆசைகளோடு இருப்பார்கள். பூர்த்தி செய்ய முடிந்த ஆசைகளை நிறைவேற்றலாம்.
 • வீட்டில் பதட்ட சூழ்நிலையை உருவாக்குவதை தவிர்த்து, அதாவது இதை பற்றி நிறைய கலந்துரையாடாமல் சின்ன சின்ன ஆக்டிவிட்டீஸ் மூலம் அவர்களை ஈடுபடுத்தலாம். அவர்களோடு விளையாடலாம். இதல்லாம் செய்வது சுலபம் இல்லையென்றாலும் குழந்தைகளின் உடல்/மன ஆரோக்கியத்திற்கு அவசியம் என்ற நோக்கத்தில் செய்யலாமே!

 எனவே கொரோனா பற்றின அச்சத்தை போக்க அதன் சம்பந்தமான எந்த ஒரு எதிர்மறை விஷங்களையும் குழந்தைகளிடம் இருந்து தவிர்த்து அதிலிருந்து விரைவில் மீளுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவோம்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}