குழந்தைகள் தங்கள் வாயில் அனைத்தையும் ஏன் வைக்கிறார்கள் ?

Vidhya Manikandan ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Dec 22, 2020

பொதுவாக குழந்தைகள் கையில் கிடைப்பதை எடுத்து உடனே வாயில் வைப்பார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் அந்த பொருளின் அமைப்பு மற்றும் சுவை எப்படி இருக்கும் என்று வாயில் வைப்பார்கள். சில குழந்தைகள் வாயில் பொருள்களை வைத்து கடிப்பார்கள் இது அவர்களுக்கு முதல் பல் வளர போகிறது என்று அர்த்தம். சிலருக்கு 3 வது மாதத்திலும் சிலருக்கு 4-7 வது மாதத்திலும் பல் வளர ஆரம்பிக்கும்.
குழந்தைகளின் 12 வது மாதத்தில் விளையாட்டு பொருள்கள் மீது ஆர்வம் அதிகம் வந்துவிடும். 2 வயதில் அவர்கள் அனைத்து பொம்மைகள் மற்றும் பொருட்களை கைகளால் எடுத்து ஆராயத் தொடங்குவார்கள். தங்களது 3 வது வயதில் தான் குழந்தைகள் வாயில் கை வைப்பதை நிறுத்துவார்கள். குழந்தைகள் வாயில் கை வைக்கிறார்கள் என்றால் ஒன்று பசிக்காக இல்லையென்றால் அவர்கள் தனிமையை உணர்கிறார்கள் என்று அர்த்தம். இதை இப்படியே விட்டுவிட்டால் வளர்ந்த பிறகும் வாயில் கை வைப்பார்கள் இதனால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
எல்லாவற்றையும் தனது வாயில் வைப்பதை குழந்தைகளை எவ்வாறு தடுப்பது?
குழந்தைகள் வாயில் பொருட்களை போடாமல் இருக்க பெற்றோர்கள் இந்த ஐந்து வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு நிழலாக இருங்கள்
- பாதுகாப்பானப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் வாங்குங்கள்
- ஆபத்தான பொருட்களை வாயில் வைக்க கூடாது என்று கற்றுக் கொடுங்கள். வாயில் வைப்பதற்கு கேரட் அல்லது ஏதாவது ஆரோக்கியமான ஸ்நாக்கை கையில் கொடுத்து திசைத்திருப்புங்கள்.
- குழந்தைகளின் கைகளை கழுவ வைக்க வேண்டும். மெலும் ஈர்களின் மீது விரல்களை வைத்து மெதுவாக அமுக்கி விடுங்கள். இதன் மூலம் பொருட்களை கடிக்க வேண்டும், மெல்ல வேண்டும் என்ற தூண்டுதல் குறையும்.
- தீங்கு விளைவிக்கும் உணவை தவிர்க்கவும்
பெற்றோரின் கவனத்திற்கு என்ன செய்வது?
நல்ல பெற்றோரின் கவனத்தை ஈர்க்க சில குறிப்புகள் இங்கே. கவனமாக படிக்க.
- பெற்றோர் நாம் எப்போதும் குழந்தைகளுடனே இருக்க முடியாது. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும். நம் உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது அவர்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். பெரிய குழந்தைகளுடன் விளையாட அனுப்பும் போது உன் தம்பிக்கு/ தங்கைக்கோ எதுவும் தெரியாது அவர்கள் எதையும் வாயில் போட்டுவிடாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்புங்கள்.
- ஒரு பொம்மையை வாங்கும் முன் அதில் எதுவும் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருக்கின்றனவா என்று பார்த்து வாங்க வேண்டும். பந்து மற்றும் பிளாக்ஸ் என்று பெரிய அளவு பொம்மையை வாங்கி கொடுத்து நாமும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும். அப்போது தான் அவர்கள் வாயில் வைப்பதை மறந்து சந்தோசமாக விளையாட கற்றுக் கொள்வார்கள்.
- நம் குழந்தைகள் கையில் சிறியப் பொருளை எடுத்து இருந்தால் அதை உடனே வாயில் வைப்பார்கள் அதற்குள் நாம் அவர்களை திசை திருப்பி வேறு ஒரு பொருளை கையில் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் எதை வாயில் வைக்க முடியும் முடியாது என்று வேறுபடுத்தி பார்ப்பார்கள்.
- சில குழந்தைகள் குட்டியான அல்லது சிறிய மணிகளை மூக்கில் போட்டு விடுவார்கள் மூக்கில் இருந்தால் ஒரு துவாரம் வழியாக மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் சளி வெளிவரும் அல்லது இரு துவாரத்தில் இருந்தும் வெளிவரும். இந்த சமயம் அவர்களின் மூக்கை சிந்த சொல்லுங்கள் அல்லது நாம் ஒரு துவாரம் வழியாக ஊதினால் அடுத்த வழியாக வந்து விடும். நம்மால் முடியவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.
- குழந்தைகள் கை நிறைய உணவை எடுத்து வாயில் போடுவதை தவிர்க்கவும். விழுங்கக்கூடிய உணவுகளை வாயில் போடுவதை தடுக்க வேண்டும். இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். காசு போன்ற பொருட்களை வாயில் போட்டால் அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற நுட்பத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள் 3 முதல் 4 வயதிற்குள் பொருட்களை வாயில் போடுவதை நிறுத்தி விடுவார்கள். அதனால் எந்த அச்சமும் தேவையில்லை.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.



| Oct 28, 2020
குழந்தைகளுக்கு 18-20 மாதங்களுக்கு இடையில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் பொம்மைகளை என்ன செய்ய முடியும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள், அடிக்கடி அவற்றை வாயில் வைப்பார்கள். அவர்கள் சுமார் 2 வயது வரை வளரும்போது, விஷயங்களை ஆராய விரல்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்கிறார்கள். சுமார் 3 வயதிற்குள், பெரும்பாலான குழந்தைகள் வாயில் பொருட்களை வைப்பதை நிறுத்துகிறார்கள்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}