குழந்தைகளின் உணர்ச்சிகளை கையாளும் 5 வழிகள்

Amala Jacino ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Mar 31, 2021

உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. குழந்தை பிறந்தது முதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறது. தன் உணர்வுகளை மட்டுமே ஆயுதமாக கொண்டு வளர ஆரம்பிக்கும் குழந்தைகளின் உணர்வுகளில் முதலில் அழுகை பின்பு சிரிப்பு, கோபம், ஆச்சர்யம், வெட்கம் என நீண்டு கொண்டே இருக்கும். இத்தகைய உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுக்கிறோமா? என்ற கேள்விக்கு எனது பதில் பல நேரங்களில் அடக்குவதற்கு மட்டுமே கற்றுக்கொடுக்கிறோம்.
உணர்வுகள் தனியாக மட்டும் அல்ல... இணைந்தும் வெளிப்படும். எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்காமல் போகும் போது எதிர்பார்ப்பு மற்றும் வருத்தம் ஆகிய இரு உணர்வுகளை மனம் வெளிப்படுத்தும். என்னுடைய இரண்டு மகள்கள் பல நேரங்களில் சேர்ந்து விளையாடுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். உடனே அங்கு சண்டையும் வரும். நான் சென்று இருவரையும் சமாதானம் செய்து மறுபடியும் ஒன்றாஅக விளையாட ஊக்குவிப்பேன். என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முழு சுதந்திரமும் உண்டு. அதன் பிறகே நானும் என் கணவரும் ஆரோக்கியமாக எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வோம்.
குழந்தையை வளாரும் போது மற்றவர்களை தன் நிலையில் வைத்து பார்க்கும் பக்குவத்தை எட்டிவிட்டால் எந்த இழப்பும் பெரிய அளவில் பாதிக்காது. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் மன அழுத்தம் குழந்தைக்கும் மட்டுமல்ல நமக்கும் குறைந்துவிடும்.
குழந்தையின் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் எவ்வாறு கையாள்வது?
உங்கள் குழந்தையின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
திசை திருப்புதல்
ஒரு குழந்தை தேவையில்லாத அல்லது அத்தியாவசியம் இல்லாத காரியங்களுக்கு அழுகும்போது திசை திருப்பி விட வேண்டும்.எடுத்துகாட்டாக ; மழை காலத்தில் ஐஸ்கிரீம் கேட்டு அழுகும்போது அல்லது அடம் பிடித்தால் அதை அவர்களுக்கு பிடித்த வேறு ஒரு செயல் செய்து அல்லது விளையாட்டு மூலமாக மாற்றிவிட வேண்டும்.
விளையாட்டு முறை
குழந்தைகள் தன்னுடன் யாராவது விளையாட வர மாட்டார்களா என ஏக்கத்துடன் இருக்கும் போது நாம் விளையாடுவது, ஆடுவது, பாடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது குழந்தைகள் அதீத சந்தோஷத்திற்கு உள்ளாகின்றனர்.நான் எப்போதும் எனது குழந்தைகளுடன் பிடித்த பாடலுக்கு ஆடுவது வழக்கம்
பரிசு கொடுத்தல்
நல்ல காரியங்களை செய்தால் அதை ஊக்குவிக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் மீண்டும் அந்த காரியத்தை செய்ய தூண்டும் வண்ணம் பிடித்த பரிசு ஒன்று கொடுத்தால் அது குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக இருக்கும்.
ஊக்குவித்தல்
தானாகவே தனது வேலைகளை செய்யும் விதமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும் தனித்துவமாக சிந்திக்க தூண்ட வேண்டும் .இவை யெல்லாம் குழந்தைகளை ஊக்குவிப்பதால் மட்டுமே நற்செயல்களை வளர்த்துக்கொள்வார்கள்.
பொறுமை
எனது குழந்தையை பல நேரங்களில் பொறுமையுடன் கையாளுவது கடினமாக இருக்கும்.அதே நேரத்தில் பொறுமையுடன் கூறினால் மட்டும் தான் கேட்பாள்.அதிகார தோரணையுடன் கூறினால் மீண்டும் செய்வாள் எனவே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளுக்காக நம்மை நாமே மாற்றிக்கொண்டு அன்புடனும் பொறுமையுடனும் கையாண்டால் வெற்றி நமதே..
மகிழ்ச்சியான பெற்றோர்!
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}