குழந்தை உணவில் முட்டையை அறிமுகப்படுத்துவதற்கான வழிகள்

Kiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019

குழந்தை பிறந்தது முதல் எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும் மிக பெரிய குழப்பம் எந்த வயதில் எந்த உணவை எப்படி தருவது என்பது தான். அதில் இப்போ நம்ம பாக்க போறது மிகவும் முக்கியமான உணவு முட்டை. பொதுவாக சில குழந்தைகளுக்கு ஒரு வயது வரை முட்டை தர வேண்டாம் என்று சொல்வார்கள். சிலர் குழந்தைக்கு 10 அல்லது 11 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்துவார்கள். முக்கியமான ஒன்று குழந்தைக்கு ஏற்றுக் கொள்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இந்த போஷாக்கான உணவை எந்தெந்த வகையில் தரலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
அதனால் ஆறு மாத குழந்தைக்கு தருவதாக இருந்தால் முட்டையை நல்லா கடினமா ஆகற அளவு வேகவிடனும். குறைஞ்சது 2௦ நிமிடம் வேகவிடனும். அதன் பிறகு நல்லா ஆற விடுங்க. இப்போ அதுல இருக்கிற மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஸ்பூன் பயன்படுத்தி மசிக்கலாம். அப்படியே குழந்தைக்கு கொஞ்சமா உப்பு சேர்த்து தரலாம்.
குழந்தைகளுக்கு முட்டை பரிமாறுவது எப்படி?
சில குழந்தைகளுக்கு முட்டையினால் ஒவ்வாமை ஏற்படுவது இயல்பு. அதனால முட்டை தரத்துக்கு சரியான வயது ஆறு மாதம் முதல் தரலாம். அதிலும் நாம எல்லாரும் முட்டையின் மஞ்சள் கரு தான் ஒவ்வாமைக்கு காரணம் என்று நினக்கிறோம். அது தவறு. முட்டையோட மஞ்சள் கருல இருக்கிற புரதச்சத்தை விட வெள்ளை கருவில் இருக்கிற புரத சத்தினால் தான் ஒவ்வாமை ஏற்படுகிறது.
- அப்படியே தரது ரொம்ப உலர்வா இருக்குனு நினைச்சீங்கனா தாய் பால் அல்லது குழந்தைக்கு தரும் பாலை கொஞ்சமா மசிக்கும் போது சேர்த்து தரலாம்
- கேரட்டை நல்லா குலையற அளவு வேகவைத்து அது கூட வேகவைத்த மஞ்சள் கருவை சேர்த்து மசித்து தரலாம்
- எட்டு மாத குழந்தைக்கு தரும் பொழுது முட்டை பொரியல் செய்து தரலாம். மஞ்சள் கருவை மட்டும் பொரியல் செய்து தரலாம்
- முட்டை நல்லா வேக விடணும். கொஞ்சமா உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து தாங்க
- சாதம் கூட பொரியல் சேர்த்து தரலாம்
- நம்ம காலை உணவான தோசை கூட சேர்த்து முட்டை தோசையாக தாங்க. கொஞ்சம் வண்ணமயமா பாக்க அழகாவும் சுவையாகவும் இருக்கும். அதன் கூட நல்லா பொடியா நறுக்கின கொத்தமல்லி தழை சேர்த்துக்கோங்க
- ஒரு வயது குழந்தைக்கு சப்பாத்தி ஆம்லெட் தரலாம்
- இன்னும் புதுசா முயற்சி பண்ணனும்னு நெனசிங்கனா முட்டை நூடுல்ஸ் செஞ்சுதாங்க.முட்டை நூடுல்ஸ் ரொம்ப எளிதாக செய்யக்கூடிய உணவு. முட்டை கூட கொஞ்சமா உப்பு மிளகு தூள் மற்றும் பொடியா நறுக்கின கொத்தமல்லி சேர்த்து நல்லா அடிச்சு ஆம்லெட் போட்டு எடுத்துகோங்க. அதை ரோலாக்கி பிறகு சிறு துண்டுகளாக நறுக்கவும். இப்போ ஆம்லெட் நூடுல்ஸ் மாதிரி நீளமா வந்திடும்.
எக்காரணத்தை கொண்டும் முட்டையை குழந்தைக்கு பிடிக்காமல் திணித்துப் பழகாதீர்கள். அவர்களுக்கு எப்போது விருப்பமோ, எப்படி சாப்பிட விருப்பமோ இதையெல்லாம் கவனத்தில் வச்சு கொடுங்க. நிச்சயமா இந்த விஷயங்களை முயற்சி செஞ்சு பாருங்க உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிட பழகிடுவாங்க.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}