• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

கொரோனா குணமான பின் உடல்நிலை பாதிப்பது ஏன்? ‘Long Covid’ அறிகுறிகள் மற்றும் தீர்வு

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 29, 2022

 Long Covid

Long Covid என்று சொல்லப்படுகிற கொரோனாவுக்கு பின் உடல்நிலையில் வரும் பாதிப்புகள் பற்றி அறிய வேண்டியது அவசியாமகிறது. ஏன்னென்றால், இந்த நோய் உடலின் பல உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கலாம், இது அன்றாடம் இருக்கும் செயல்பாட்டை கடினமாக்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மிகப்பெரிய கவலைகளில் ஒன்று அதன் நீண்டகால விளைவுகள் ஆகும். உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட்-க்கு பின் நோய்க்குறி அல்லது நீண்ட கோவிட் பற்றி இன்னும் நிறைய தெரியவில்லை என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.  தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்த நோய் உடலின் பல உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும், இது அன்றாட செயல்பாட்டை கடினமாக்குகிறது.

நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோள்பட்டை, கழுத்து, முதுகு மற்றும் முழங்கால் தொடர்பான நோய்களைப் பற்றி அதிகமாக புகார் கூறுவதாக சில சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகள் என்ன சொல்கிறது?

செப்டம்பர் 2021 இல், கோவிட்-க்கு பின் உண்டாகும் பாதிப்புகள் பற்றி  National Comprehensive Guidelines for Management of Post-COVID Sequelae மையம் வெளியிட்டது. நீண்ட கோவிட் நோயை ஒப்புக்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ ஆவணம் இதுவாகும், மேலும் பிரச்சனைக்கு சிறப்பு கவனம் தேவை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

"கடுமையான COVID-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 20-30 சதவிகிதம் வரை,  இதய செயலிழப்பு மற்றும் அரித்மியா ஆகியவற்றால் வெளிப்படும் மாரடைப்புக்கான சான்றுகள் உள்ளன" என்று ஆவணம் கூறியது.

  • அறுபது நாளுக்கு பின் கோவிட்-19 உயிர் பிழைத்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு மார்பு வலி பதிவாகியுள்ளது.
  • அறுபது நாளுக்கு பின் கோவிட்-19 உயிர் பிழைத்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு படபடப்பு பதிவாகியுள்ளது.
  • கடுமையான கோவிட்-19க்குப் பின் ஆறு மாதத்திற்கு  பின் தொடர்ந்து மார்பு வலி மற்றும் படபடப்பு 5 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என பதிவாகியுள்ளது.

Long Covid நோய்க்கான பொதுவான அறிகுறிகள் யாவை?

காய்ச்சல், சோர்வு, மூச்சுத் திணறல், இருமல், மார்பு வலி, சமநிலை இல்லாதது (குழப்பம், மறதி மற்றும் கவனம் மற்றும் மன தெளிவின்மை), தூக்கக் கோளாறுகள், தசை வலி, இதயத் துடிப்பு, வாசனை அல்லது சுவை இழப்பு, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஆகியவை நீண்ட கோவிட் நோயின் சில பொதுவான அறிகுறிகளாகும்.

இந்த நோய் வாஸ்குலிடிஸ், இதயம் மற்றும் நரம்பு தொடர்பான நோய்கள் போன்ற கடுமையான கோளாறுகளை கூட ஏற்படுத்தும் என்று WHO முன்பு அறிவித்தது.

கொரோனாவுக்கு பின் வரும் Long Covid பாதிப்பில் இருந்து குணமாக உதவும் வழிகளை கூறுகிறார் டாக்டர். சந்தியா ராமநாதன், General Practitioner, NZ, Global Health Advocate

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 இல் ஒருவருக்கு லாங் கோவிட் அறிகுறிகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இது லேசான அல்லது மோசமான பாதிப்புகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் என்னென்ன வழிகள் மூலம் இந்த நோயைக் குணப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

நம் குடலில் இருக்கும் மில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. பூண்டு, வெங்காயம், சிக்கரி வேர், வாழைக்காய், ஆப்பிள், அஸ்பாரகஸ் ஆகிய இந்த வகை உணவில் ப்ரீபயாடிக் அதிகம் உள்ளது. ப்ரீபயாடிக்குகள் ஆரோக்கியமற்ற நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சி குறிப்பான்களைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

இழந்த வாசனையை எப்போது மீண்டு பெற முடியும்

கொரோனா தொற்றுக்குப் பிறகு ஆல்ஃபாக்டரி (olfactory) உணர்திறன் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும்  குறுகிய காலத்தில் அவர்கள் எளிதாக குணமடைய உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 95 சதவீத நோயாளிகள் ஆறு மாதங்களுக்குள் தங்கள் வாசனை உணர்வை மீண்டும் பெறுகிறார்கள்.

ஆல்ஃபாக்டரி பயிற்சியானது உடலின் நியூரோபிளாஸ்டிசிட்டியைப் பயன்படுத்துகிறது, இது புதிய நரம்பு பாதைகளை உருவாக்கும் உடலின் திறனைப் பயன்படுத்துகிறது. முறைகள் உடல் புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்க உதவுகின்றன, இதனால் வாசனை உணர்வை மீட்டெடுக்கின்றன.

சுவாசம் சீராக

எளிமையான எதிர்ப்பு சுவாசப் பயிற்சியானது, அடிப்படையில், நுரையீரலின் அடிப்பகுதியில் இருந்து தெளிவான திரவத்தின் மூலம் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் அளவை நிலைநிறுத்தி முழுமையான சுவாசத்தை ஊக்குவிக்கிறது,

பயிற்சி - ஒரு பெரிய பலூனில் மூன்று முறை மூச்சை இழுத்து, இடைநிறுத்தி ஆழமாக உள்ளிழுக்கவும்

அல்லது மூன்று சமமான சுவாசத்தை ஒரு ஸ்ட்ரா மூலம்ஒரு  கிளாஸ் தண்ணீரில் ஊதவும். தினமும் பல முறை செய்யவும்

முழுமையான ஓய்வு தேவை

குறைவான உடல் உழைப்பை உறுதி செய்யுங்கள். சீக்கிரம் குணமாக இது மிக அவசியம். அறிகிறிகள் தொடங்கும் போதே உடலுக்கும், மனதுக்கும் முடிந்த செயல்களை, வேலைகளை செய்யுங்கள். உதாரணத்திற்கு, வீட்டை சுத்தம் செய்வது என்றால் ஒரு அறையை மட்டும் செய்யுங்கள். அதே போல் அலுவலக வேலையைப் படிப்படியாக அதிகமாக்குங்கள்.

ஆரோக்கியமான சாப்பாடு மற்றும் நிறைய தண்ணீர்

வாசனை, ருசி, படி இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான சாப்பாடு அதாவது சூப், கஞ்சி வகைகள் என ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தலை வலி, உடல் நீர் வறட்சி ஏற்படுவதால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் திரவங்கள் எடுக்க வேண்டியது அவசியம்.

மூளை திறனை அதிகரிக்க

ப்ரைன் ஃபாக் அதாவது மூளை செயல் பாட்டில் மாற்றம் (குழப்பம், மறதி மற்றும் கவனம் மற்றும் மன தெளிவின்மை). இந்த அறிகுறிகள் கொரோனாவுக்கு பின் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று. உங்கள் மூளைத் திறன் மற்றும் கவனத்தை அதிகரிக்க வாரம் இரண்டு முறை மீன் சாப்பிடுங்கள். மூளைக்கு Omega-3 fat உதவுகிறது.

தரமான தூக்கம் மற்றும் நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கவனம் மற்றும் ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது.  

மூட்டு மற்றும் தசை வலி

கொரோனா குணமானாலும் சர்க்கரை மற்றும் கஃபெய்ன் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். காபி, டீ மற்றும் மது ஆகியவை பெரும்பாலும் தவிர்க்கலாம். சமைக்கும் போது உணவில் கிருமி நாசினியான மஞ்சள், இஞ்சி, ரோஸ்மேரி சேர்த்துக் கொள்வது நல்லது. மெக்னினிஸியம் அதிகம் உள்ள நட்ஸ், உலர் பழங்கள், முழு தானியங்கள் தினமும் சேர்க்க வேண்டும்.

விரக்தியடைய வேண்டாம்

கொரோனா குணமான பின்னும் sஇல அறிகுறிகள் அதாவது சோர்வு, உடல் வலி, தலைவலி இருப்பது சாதரணம் தான். பெரும்பாலும் இரண்டு வாரத்தில் குணமாகிவிடும் ஆனால் சில அறிகுறிகள் 12 வாரம் வரை இருக்கிறது. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் மற்றும் ஒய்வு மூலம் இதை குணப்படுத்தலாம்.

அமைதிப்படுத்துங்கள்

பதட்டம் மற்றும் மன அழுத்தம் இவை இரண்டும் கோவிட் -19 இன் பிரதான பிரச்சனைகள். வைரஸை எதிர்த்துப் போராட சைட்டோகீன் (செல்லுலார்) செயல்பாடின் காரணமாக மனநிலையில் மாற்றம் வருவது. இது உளவியல் ரீதியான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாகும். கொரோனாவின் போதும், கொரோனாவுக்கு பின் வரும் மனம் வருத்தம், மனசோர்வு நார்மல் தான். உடல் மற்றும் மனதிற்கு கடினமாக எண்ணும் வேலையை செய்யாமல்  இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் குணமாகலாம்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}