குழந்தைகளுக்கான பால் - வகைகள் மற்றும் நன்மைகள்

All age groups

Jeeji Naresh

3.4M பார்வை

4 years ago

குழந்தைகளுக்கான பால்  - வகைகள் மற்றும் நன்மைகள்

குழந்தைகளுக்கு பாலின் முக்கியத்துவம் நமக்கு தெரிந்திருந்தாலும். சில குழந்தைகளுக்கு மாட்டுப்பால் அல்லது ஆவின் பால் பிடிக்காமல் இருக்கலாம். இந்த மாதிரி குழந்தைகளுக்கு வேறென்ன மாற்று பால் இருக்கிறது. மேலும் திட உணவு கொடுக்க தொடங்கியவுடன் குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் அல்லது 2, 3 வயது குழந்தைகளுக்கு உணவோடு சேர்த்து எத்தனை முறை பால் கொடுப்பது தொடர்பான சந்தேகங்கள் நம்மிடம் அடிக்கடி வருவதுண்டு.

Advertisement - Continue Reading Below

உங்கள் குழந்தையின் உணவில் இது ஏன் முக்கியமானது?

உங்கள் குழந்தைக்கு எவ்வளவு பால் தேவை?

பால் வகைகள் மற்றும் அதன் நன்மைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்கு ஏன் பால் முக்கியமான உணவு?

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது.

  • கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுவாக இருக்க உதவுகிறது.
  • புரதம், வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்காக.
  • வைட்டமின் ஏ, கண்பார்வை மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு.
  • வைட்டமின் பி 12, ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்ய.
  • அயோடின், வளர்சிதை மாற்றத்தை சீராக்க.
  • மெக்னீசியம், தசை செயல்பாட்டிற்கு.
  • பாஸ்பரஸ், ஆற்றல் வெளியீட்டிற்கு.

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஏன் முக்கியமானது?

உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க தாய்ப்பால் உதவுகிறது. இது தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான விகிதத்தில் வழங்குகிறது.

  • இது ஒவ்வாமை, நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
  • இது நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
  • இது காது தொற்று போன்ற தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
  • இது எளிதில் ஜீரணமாகும் - மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படுத்துவது இல்லை.
  • குழந்தைகள் வளரும்போது ஆரோக்கியமான எடைகளைக் கொண்டுள்ளனர்.
  • தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகள் IQ சோதனைகளில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்.

பிறந்த குழந்தைகள் எவ்வளவு பால் குடிக்கும்?

பிறந்த உடனேயே தாய்ப்பால் மற்றும் 24 மணி நேர காலகட்டத்தில் 8 முதல் 12 முறை அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கலாம்.

முதல் ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். திட உணவு கொடுக்கும் போது தாய்பால் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. முடிந்த வரை உங்கள் குழந்தைக்கு தாய்பால் கொடுங்கள்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு செரிமனை பிரச்சனை வருவதால் விலங்குகளின் பாலை தவிர்க்க வேண்டும்.

2 முதல் 3 வயது குழந்தைகளுக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்?

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு கப் பால் கொடுக்கலாம். ஏனென்றால் அதிகப்படியான பால் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்போது  மற்ற அத்தியாவசிய உணவுகளை நிராகரிக்க தொடங்குவார்கள்.

4 முதல் 8 வயது குழந்தைகளுக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்?

நான்கு முதல் எட்டு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு கப் வரை பால் கொடுக்கலாம், ஏனெனில் அவை அதிகப்படியான வாயுவை ஏற்படுத்தி பசியையும் தூண்டும். கருத்தில் கொள்ள வேண்டிய  அதிகப்படியான பால் பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும். ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டோஸ் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பால் வகை:

பாலில் இத்தனை வகை உண்டா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு மாற்று பால் இருக்கின்றது. பால் வகைகளை விரிவாக பார்க்கலாம் இங்கே:

அல்ட்ரா-உயர் வெப்பநிலை பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட பாக்கெட் பால்:

அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்படுவதால் பாக்டீரியா மற்றும் நோய்கிருமிகள் அழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சீக்கிரம் கெட்டுபோவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

Advertisement - Continue Reading Below

அரிசிப் பால்:

இந்த பால் அரிசி தானியங்களிலிருந்து எடுக்கப்படுகிறது, அவ்வப்போது உங்கள் பிள்ளைக்கு உணவளிக்கலாம். இருப்பினும் இதில்  கொழுப்புகள் அல்லது புரதங்கள் இல்லாததால் உங்கள் குழந்தைக்கு இதனை மட்டுமே கொடுக்க வேண்டாம்.

சோயா பால்:

சோயா பால் சோயாபீன்களில் இருந்து எடுக்கப்படுகிறது மற்றும் பசுவின் பாலுக்கு ஒரு சிறந்த சைவ மாற்றாகும். ஆனால் இதில் முழுக்கொழுப்பு இல்லாததால் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.

மாடு, ஆடு மற்றும் செம்மறி பால்:

மாடு, ஆடு அல்லது செம்மறி பால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானது. இதில் வைட்டமின் பி 9 கூடுதலாக இருப்பதால் இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பாதாம் அல்லது முந்திரி பால்:

சைவ உணவு உண்பவர்களுக்கு மாற்றாக பாதாம் அல்லது முந்திரிப் பால் கொடுக்கலாம்.

டோன்ட் பால்:

இந்த பால் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் சரியான அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். இதில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பால் கொடுக்கலாம்.

ஆர்கானிக் பால் :

இதில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வளர்ச்சி ஹார்மோன்கள் அல்லது தடுப்பு மருந்துகள் இல்லாத உணவு கொடுக்கப்பட்ட பசுக்களிடமிருந்து கிடைப்பதால் இந்த பால் தூய்மையான ஒன்றாகும். ஆர்கானிக் பாலில் இயற்கையான ஒமேகா -3, கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன.குழந்தைகளுக்கு ஏற்றப்பால் இது.

தேங்காய்ப் பால்:

குழந்தைகளுக்கான மிகச்சிறந்த பால் வகையாகும்.உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நல்ல கொலஸ்ட்ராலின் அளவை பராமரிக்கிறது.ஆரோக்கியமான கொழுப்பு இதில் உள்ளடங்கியுள்ளதால் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

குழந்தைகளுக்கான சிறந்த வகை பால்:

குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் வகை அவர்களது வயதைப் பொறுத்தது.ஒரு வருடத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும், இருப்பினும் பாலாடைக்கட்டி (பதப்படுத்தப்பட்ட சீஸ் தவிர்க்கவும்) மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படலாம். ஒரு வயதிர்க்கு மேல் மற்ற பால் அறிமுகப்படுத்தப்படுத்தும் போது உங்கள் குழந்தைக்கு ஏதேனும் பரம்பரை இதய பிரச்சினைகள் இருந்தால் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும்.

பால் பிடிக்காத குழந்தைக்கு உணவில் பாலின் நன்மைகள் கிடைக்க மாற்று வழிகள்

உணவோடு  பால் கலந்து அறிமுகப்படுத்த சில குறிப்பிட்ட வழிகளை இங்கு பார்க்கலாம். இதன் மூலம் பால் குடிக்காத, பிடிக்காத குழந்தைகளுக்கும் பாலின் சத்து கிடைத்துவிடும்

  • பாலை தானியங்களால் தயாரிக்கப்பட்ட சத்துமாவு அல்லது ஓட்மீலுடன் கலக்கலாம், அவை பொதுவாக சுவையாக இருக்கும். இது உங்கள் குழந்தையின் விருப்பத்தைப் பொறுத்து சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கலாம். இதனுடன் முந்திரி திராட்சை பாதாம் சேர்த்தும் கொடுக்கலாம்.
  • பாலின் சுவையை மேம்படுத்த  பலவிதமான சுவைகளில் கலக்கலாம். பெரும்பாலான குழந்தைகள் சாக்லேட்டை விரும்புகிறார்கள். அதற்கு பதிலாக இலவங்கப்பட்டை, ஸ்ட்ராபெரி, இஞ்சி, பிஸ்தா, வாழைப்பழம், வெண்ணிலா, ஏலக்காய், மஞ்சள், தேன் கலந்து கொடுத்தால் சுவையாக இருக்கும்.

பால் மிகவும் ஆரோக்கியமான உணவு, ஆனால் இது திட உணவுகளுக்கு மாற்றாக பால் என்றும் இருந்ததில்லை.  உங்கள் குழந்தைக்கு  தானியங்கள், மீன்,  இறைச்சிகள்,  கீரைகள், காய்கறிகள் மற்றும்  பழங்கள் போன்ற உணவுவகைகளை குழந்தைகளுக்கு சரியான அளவில் சரியான வயதில் அளிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

உங்கள் குழந்தைக்கு எந்தவொரு பால் மற்றும் பால் பொருட்களை அறிமுகப்படுத்தும் போது நாம் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கியமான விஷயம்.

எந்தவொரு புதிய உணவையும் தொடங்கிய பின் உங்கள் குழந்தையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.

பசுவின் பாலுக்கும் இது பொருந்தும்.சில குழந்தைகள் தங்கள் தாயின் பால் உட்கொள்ளும் போது கூட இதை உணரலாம். வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, இடைவிடாத அழுகை, வாய்வு அல்லது மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் மூலம் ஒவ்வாமை இருப்பதை அறிந்துகொள்ளலாம்

சில குழந்தைகள் பால் ஒன்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வார்கள். குழந்தைகளின் வளச்சிக்கு அனைத்து உணவு சத்துக்களும் தேவை என்பதால் மற்ற உணவுகளையும்  எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய குழந்தைக்கு பிடித்த வகையில் உணவுகளையும், பாலையும் சரியாக கொடுக்கும் போது குழந்தைக்கு ஊட்டச்சத்து தானாகவே கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையாக இருப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பால் குடிக்க செய்வது கடினம். இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கேட்க நாங்கள் மிகவும் விருப்பமாக உள்ளோம்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...