• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

குழந்தைகளில் மிஸ்-சி' நோய் (MIS – C) – அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 20, 2021

 MIS C
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

மிஸ்-சி' நோய் தற்போது இந்த அரிய வகை நோய் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வும் குறைவாக இருக்கின்றது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள  10 வயது பெண் குழந்தை இந்த நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். ஆரம்பத்தில் கொரோனா அறிகுறிகள் இருந்திருக்கிறது. சிகிச்சை அளித்தும்  காய்ச்சல் குறையவே இல்லை என்பதல் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் போது தான் இந்த அரிய வகை நோயை கண்டுபிடித்திருகிறார்கள் மருத்துவர்கள்.

ஆங்கிலத்தில் Multi-inflammatory syndrome in Children கொரோனா தொற்றோடு தொடர்புடையது மற்றும் கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கும்  இந்த நோயினால் பாதிப்பு இருக்கின்றது. சில அறிகுறிகள் மூலம் இதை நாம் அடையாளம் காணலாம். அதனால் பெற்றோர் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இது பற்றி குழந்தை நல மருத்துவர் டாக்டர். நர்மதா விளக்குகிறார்

மிஸ்-சி' நோய் (MIS – C) என்றால் என்ன?

குழந்தைகள் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து இரண்டு வாரம் கழித்து குழந்தைகளில் மல்டிசிஸ்டம் அழற்சி நோய்க்குறி (எம்ஐஎஸ்-சி) என்ற அழற்சி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீளும்போது குழந்தைகளுடைய நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். ஆனால் இந்த நோய் தாக்கும் போது நோய் எதிர்ப்பு திறன் பலமடங்காக அதிகரிக்கிறது. இந்த அழற்சியானது உடலில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது. இதனால் இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், மூளை, தோல், கண்கள் அல்லது இரைப்பை குடல் உறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்கள் பலவீனமடையக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிறது.

MIS-C க்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை. இருப்பினும், MIS-C உடைய பல குழந்தைகளுக்கு COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் அல்லது COVID-19 நோயினால் பாதிக்கப்பட்டவர் நெருக்கத்தில் இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. MIS-C தீவிரமானது, ஆபத்தானது கூட, ஆனாலும் பயப்பட வேண்டாம், இந்த நிலையில் கண்டறியப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மருத்துவ கவனிப்பில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள்.

இந்த அதிகப்படியான எதிர்ப்பு திறனை கட்டுப்படுத்த ஸ்டிராய்டு மருந்துகள் கொடுக்கின்றோம். குழந்தைகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும். குழந்தைகள் மருத்துவமனைகளில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது

உங்கள் பிள்ளைக்கு MIS-C நோய்வாய்ப்பட்டதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்வது?

உங்கள் பிள்ளை MIS-C அறிகுறிகளை காண்பித்தால் உடனே உங்கள் குழந்தையின் மருத்துவர், செவிலியர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள்: இந்த மாதிரியான அறிகுறிகள்

 • காய்ச்சல்
 • வயிற்று வலி
 • வாந்தி
 • வயிற்றுப்போக்கு
 • கழுத்து வலி
 • சொறி
 • வாய்ப்புண், கை, கால் வீக்கம்
 • கழுத்தில் நெறி கட்டுதல்
 • சிவந்த கண்கள்
 • அதிக சோர்வாக உணர்வது

எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (இதையும் படிக்க: குழந்தைகளின் கொரோனா பயத்தை எவ்வாறு கையாள்வது? http://www.parentune.com/parent-blog/kuzanthaiyudam-corona-pyamthai-evvaaru-kaiyaalvadhu/6396)

MIS-C இன் அவசர எச்சரிக்கை அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் பிள்ளை காண்பித்தால் உடனடியாக அவசர சிகிச்சையை நாடுங்கள்:

 • சுவாசிப்பதில் சிக்கல்
 • மார்பில் வலி அல்லது அழுத்தம் போகாது
 • குழப்பமான மனநிலை
 • எழுந்திருக்க முடியாத நிலை
 • வெளிர், சாம்பல் அல்லது நீல நிற தோல், உதடுகள்
 • கடுமையான வயிற்று வலி

உங்கள் குழந்தையை மருத்துவர்கள் எவ்வாறு பரிசோதிப்பார்கள்?

வீக்கம் அல்லது நோயின் பிற அறிகுறிகளை கண்டால் மருத்துவர்கள் சில சோதனைகளை செய்யலாம். இந்த சோதனைகளில் பின்வருவன அடங்கும்:

• இரத்த பரிசோதனைகள்

• மார்பு எக்ஸ்ரே

• ஹார்ட் அல்ட்ராசவுண்ட் (எக்கோ கார்டியோகிராம்)

• வயிற்று அல்ட்ராசவுண்ட்

அறிகுறிகளுக்கு மருத்துவர்கள் (உங்கள் குழந்தை நன்றாக உணர மருந்து மற்றும் / அல்லது திரவங்கள்) வழங்கலாம் மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தலாம். எம்ஐஎஸ்-சி நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். சிலருக்கு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

COVID-19 அல்லது MIS-C பற்றிய கவலைகள் உட்பட, குழந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்ட பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் உடனடியாக ஒரு குழந்தை நல மருத்துவரை அல்லது பிற சுகாதார வல்லுனரை அழைக்க வேண்டும். ஒரு நபர் வருகை தேவைப்பட்டால், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சுகாதார வழங்குநர்கள் CDC( Centers for Disease Control and Prevention) பரிந்துரைகளைப் பின்பற்றலாம்.

MIS-C பற்றிய தரவுகள் அதிகம் இல்லை

சி.டி.சி இன்னும் எம்.ஐ.எஸ்-சி மற்றும் அது குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி கற்றுக் கொண்டிருக்கிறது, எனவே சில குழந்தைகள் ஏன் எம்.ஐ.எஸ்-சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் ஏன் இல்லை என்று எங்களுக்கு தெரியாது. சில சுகாதார நிலைமைகள் உள்ள குழந்தைகளுக்கு MIS-C வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா என்பதையும் கூற இயலவில்லை.  நிச்சயமாக சீக்கிரமே இதற்கான பதில்கள் கிடைக்கும்.

COVID-19 இலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

பெரும்பாலும் பெரியவர்களுக்கான கோவிட்- 19 சிகிச்சை பற்றியே அதிகமாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் பெரியவர்கள் மூலமாக தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எம்ஐஎஸ்-சி பற்றி இப்போது எங்களுக்கு தெரிந்தவற்றின் அடிப்படையில், உங்கள் பிள்ளையையும் முழு வீட்டையும் COVID-19 க்கு காரணமான வைரஸ் வராமல் தடுப்பதே சிறந்த வழி. தினமும் தவறாமல் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை கொரோனா மற்றும் MIS-C நோயிலிருந்தும் பாதுகாக்கலாம். (இதையும் படிக்க: கொரோனா பற்றி உங்கள் குழந்தையுடன் பேசுவது எப்படி – 8 உதவிக்குறிப்புகள் http://www.parentune.com/parent-blog/corona-parri-ungkal-kuzawthaiyudan-pesuvathu-eppadi-8-uthavi-kurippukal/5369)

கொரோனா மற்றும் மிஸ்-சி இந்த இரண்டையும் பொறுத்தவரை ஆரம்ப அறிகுறிகள் மூலம் நோயின் தீவிரத்தை குறைக்கலாம். அதனால் குழந்தைகளில் சந்தேகத்திற்குறிய அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது. பதட்டப்பட வேண்டாம், விழிப்புணர்வோடும், முன்னெச்சரிக்கையுடனும் இருப்போம் குழந்தைகளை பாதுகாப்போம்.

Reference: https://www.cdc.gov/mis-c/

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}