குழந்தையின் உடல், சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Nov 26, 2020

உங்கள் குழந்தையின் முதல் 5 வருடங்களில் முதன்மை அறிவாற்றல் வளர்ச்சி நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? எளிமையான சொற்களில் கூறினால், புலனுணர்வு வளர்ச்சி என்பது சிந்தனை மற்றும் புரிந்து கொள்ளும் திறனை குறிக்கிறது. முன்னதாக, குழந்தைகளுக்கு சிந்திக்கவும் புரிந்து கொள்ளவும் திறன் இல்லை என்று நம்பப்பட்டது. அதனால்தான், பெற்றோரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் குழந்தையின் முன் எதையும் சொல்லும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டனர். ஆனால், தற்போதைய அறிவியல், அம்மாவின் கருப்பையில் கூட குழந்தை அனைத்தும் உணரும், எல்லாவற்றையும் கேட்கும், கவனிக்கும் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது.
குழந்தையின் உடல், சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி
இந்த கட்டுரையில் உங்கள் குழந்தை இந்த அளவிற்கு புரிந்து கொள்கிறதா என்பதை நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
2 மாதங்களில்:
- முகங்கள் அடையாளம் தெரிவது
- கண்களால் பின்தொடர்ந்து தொலைவில் உள்ளவர்களை அடையாளம் கண்டுகொள்ள தொடங்குகிறது
- நடவடிக்கை மாறவில்லை என்றால் சலிப்புடன் செயல்பட தொடங்குகிறது
6 மாதங்களில்:
- அருகிலுள்ள விஷயங்களைப் பார்ப்பது
- வாய் பேசுகிறது என்பதை அறிவார்கள்
- விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காண்பிப்பது மற்றும் அடைய முடியாத விஷயங்களைப் பெற முயற்சிக்கிறது
- ஒரு கையிலிருந்து மறுகைக்கு பொருட்களை மாற்றுவது
12 மாதங்களில்:
ஒரு வருடம் நிறைந்த பிறகு, குழந்தைகளின் உடல், சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி வளரத் தொடங்குகின்றது. இந்த வயதில் குழந்தைகள் பெரியவர்களின் செயல்களைக் கவனிப்பதில் மிகப்பெரிய அளவு நேரத்தை செலவிடுகிறார்கள், எனவே பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் நல்ல நடத்தைகளை அமைப்பது முக்கியம்.
- பொருட்களை குலுக்குதல், ஆட்டுதல், வீசுதல் போன்ற பல்வேறு வழிகளில் விஷயங்களை ஆராய்வது
- மறைத்து வைத்த விஷயங்களை எளிதில் கண்டுபிடிப்பது
- ஒரு பெயரை குறிப்பிடும் போது அதை சரியாக கண்டுபிடிப்பது,
- சைகைகளை பின்பற்றுவது
- சரியாக பொருட்களை பயன்படுத்தத் தொடங்குகிறது (கப்பில் தண்ணீர் மற்றும் பால் அருந்துதல், தலை சீவுதல்)
- இரண்டு பொருட்களை ஒன்றாக இணைத்துக் வைத்திருப்பது
- உதவி இல்லாமல் ஒரு பொருளை வெளியில் எடுப்பது மற்றும் உள்ளே வைப்பது
- பொருட்களை எடு என்பது போன்ற சிறிய கட்டளைகளை கேட்பது
18 மாதங்களில்:
- சாதாரண பொருட்களை கண்டுபிடித்தல்; உதாரணமாக தொலைபேசி, சீப்பு, தண்ணீர்
- மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செயல்படுவது
- ஒரு பொம்மை அல்லது விலங்குகளுக்கு ஊட்டுவது போல நினைத்து விளையாடுவது
- உடல் உறுப்புகளை கண்டுபிடித்தல்
- பேப்பரில் கிறுக்குதல்
- எந்த சைகையும் இல்லாமல் வாய்மொழி கட்டளைகளை பின்பற்ற முடியும்
24 மாதங்களில்:
இரண்டு வயதில், பிள்ளைகள் அதிக சுதந்திரமாக வருகின்றனர். இப்போது உலகத்தை சிறப்பாக ஆராய்ந்து பார்க்க முடிவதால், இந்த கட்டத்தில் அதிகமாக கற்றல் தங்கள் அனுபவங்களின் விளைவாகும்.
- வடிவங்கள் மற்றும் வண்ணங்களை வரிசைப்படுத்த தொடங்குகிறது
- பழக்கமான புத்தகங்களில் உள்ள வரிகளை படிப்பது
- எளிமையான விளையாட்டுகளை விளையாடுவது
- 4 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை கோபுரங்களாக உருவாக்குகிறது
- ஒரு கையால் செயல்படுவது
- ஒரே நேரத்தில் இரண்டு கட்டளைகளை கடைப்பிடிப்பது
36 மாதங்களில்:
3 வயதில் குழந்தைகள் மிகவும் சிக்கலான வழிகளில் அவர்களை சுற்றி உள்ள உலகத்தை பகுப்பாய்வு செய்யும் திறன் கொள்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு பொருட்களையும் கவனிக்கையில், அதை வெவ்வேறு பிரிவுகளாக வரிசைப்படுத்தவும் வகைப்படுத்தவும் தொடங்குகிறார்கள். குழந்தைகள் செயல்பாட்டில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர்களை சுற்றியுள்ள உலகத்தை பற்றிய கேள்விகளைத் தொடங்குகின்றனர். "ஏன்?" என்பது இந்த வயதில் மிகவும் பொதுவாக அவர்கள் கேட்கும் கேள்வி.
- பொத்தான்கள் மற்றும் நகரும் பாகங்கள் கொண்ட பொம்மைகளை பயன்படுத்துவது
- 3 அல்லது 4 துண்டுகளுடைய புதிர்கள் சரியாக அடுக்குவது
- எண்களை புரிந்துகொள்வது மற்றும் எண்ணுவது
- ஒரு பென்சில் அல்லது க்ரேயான் மூலம் வட்ட வடிவம் வரைவது
- புத்தக பக்கங்களை ஒன்றொன்றாக திருப்புவது
- குறிப்பிட்ட நேரம் வரை ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்பது (5 - 15 நிமிடங்கள் வரை)
- ஒரு பொருளை எதற்காக பயன்படுத்துகிறோம் என்று அடையாளம் தெரிந்துகொள்வது
குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியில் சிக்கலின் அறிகுறிகள்
குழந்தைகளில் அறிவாற்றல் வளர்ச்சி சிக்கல்களின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் இங்கே. கீழே உள்ளதை படிக்கவும்...
- ஒரு பொருள் நகரும் போது அதில் கவனம் கொள்ளாமல் இருப்பது
- பொருட்களை வாயில் வைக்காமல் இருப்பது
- அருகில் இருக்கும் பொருட்களை எடுக்க நினைக்காமல் இருப்பது
- தெரிந்த நபர்களை அடையாளம் கண்டுபிடிக்காதது
- சைகைகள் கற்றுக்கொள்ளாதது
- முன்பு இருக்கும் பழக்கங்களை பின்னர் மறப்பது
- மற்றவர்களின் செயலை பின்பற்றாதது
- தொலைபேசி, சீப்பு போன்ற பொதுவான விஷயங்களை அடையாளம் கண்டுபிடிக்க தெரியாமல் இருப்பது
- சின்ன சின்ன கட்டளைகளை கடைபிடிக்க தெரியாதது
பெற்றோரின் வழிகாட்டுதல்கள்
அவர்களுக்கு தேவையான மூளை வளர்ச்சியை அடைய நீங்கள் கண்டிப்பாக சில விஷயங்களை செய்ய வேண்டும் :
- குழந்தைகளுக்கு அவர்கள் சுலபமாக செயல்பட (ஏறும் இடங்களில், ஊர்ந்து செல்வது, இழுத்தல், முதலியன) தேவைப்படும் பாதுகாப்பான இடம் கொடுக்கவும்.
- ஒவ்வொரு குழந்தையுடனும் ஒரு நிலையான உறவை ஏற்படுத்துங்கள்.
- குறிப்பாக உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
- குழந்தைகளின் வளர்ச்சியை தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல அவர்கள் திறனையும் அவர்களுக்கு கொடுக்கும் சவால்களையும் தீர்மானியுங்கள்.
- எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது. குழந்தைகள் வித்தியாசமாக மற்றும் பல்வேறு விகிதங்களில் முன்னேறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் ஒரு பகுதியின் வளர்ச்சி மற்ற பகுதிகளை விட நீண்ட காலம் எடுக்கலாம்.
- உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் அவர்களுடைய மேற்பார்வையாளர், பயிற்சியாளர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
"ஒரு குழந்தையின் மூளை நம்மை விட பெரியது, ஏனென்றால் அது எந்த முயற்சியும் இல்லாமல் எதையும் உள்வாங்கும் திறன் கொண்டது."
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}