• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

வயது 1-3 : மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி பற்றி அறிக

Santhana Lakshmi
1 முதல் 3 வயது

Santhana Lakshmi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 02, 2018

 1 3

குழந்தையை வயிற்றில் சுமப்பதிலிருந்தே ஒரு அம்மாவிற்கு குழந்தை மீதான அக்கறையும் பொறுப்பும் அதிகமாகிவிடுகிறது. எல்லா அம்மாகளுக்குமே தன் குழந்தை ஒரு அப்துல்கலாம், ஐன்ஸ்டீன் மாதிரி பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்கிற ஆசைதான். குழந்தையின் மூளை வளர்ச்சியானது கருவிலிருந்தே ஆரம்பிக்கிறது. அதனால்தான், நம்ம வீட்டு பெரியவங்க, நல்லதை பொல்லதை நல்லா சாப்பிடுங்க, பாடுங்க, பாப்பாகிட்ட பேசுங்கன்னு சொல்வாங்க. ஏன்னா, எல்லா குழந்தையும் முதலில் கேட்பதும் உணர்வதும் தாயின் குரலையும், பரிசத்தையும்தான்.

அதிலும் குழந்தை பிறந்த பிறகு, முதல் மூன்று வயதுவரை என்பது தாய்க்கு மட்டுமல்ல குழந்தையை சுற்றியிருப்பவர்களுக்கும் குழந்தை மீதான பொறுப்பு அதிகமாகிவிடுகிறது. அதனால்தான், குழந்தை அழுவதில் ஆரம்பித்து அடியெடுத்து வைப்பது வரை அசராமல் கவனித்து வருவார்கள்.

எந்தெந்த மாதங்களில் குழந்தையின் உடல் வளர்ச்சி, ஞாபகசக்தி, மூளைவளர்ச்சி, அறிவாற்றல் போன்றவை வளருகின்றன. அதற்கு, நாம் குழந்தைக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை பார்ப்போம். ஏன்னா, குழந்தை மட்டும் வளருவதில்லை அம்மாவும்தான்…

உடல் வளர்ச்சி:

 • குழந்தை பிறந்த 3ம் மாதத்தில் இருந்துதான் தாயின் முகத்தை நன்றாக பார்க்கும். அதன் கருவிழிகள் நாலாபுறமும் சுத்தி பார்க்ககூடிய ஸ்டேஜ் வந்துவிடும். தாயின் பரிசம் குழந்தைக்கு எப்பொழுதுமே இருந்தாலும் கண் தெளிவாக இந்த மாதத்தில் இருந்து நன்றாக பார்க்க ஆரம்பித்துவிடும்.
 • அப்புறம் ஒவ்வொரு மாதமாக குழந்தையின் வளர்ச்சியானது ஆரம்பிக்கும். கைகளை ஆட்டுவது, விரல்களை பிடிப்பது வாயில் வைத்து சுவைப்பது,  முகம் பார்த்து சிரிப்பது போன்றவை.
 • 5ம் மாதத்தில் குப்புற விழ ஆரம்பிச்சுட்டாங்கன்னா அப்புறம், படிபடியா அடுத்தடுத்த மாதங்களில் உட்கார ஆரம்பிப்பாங்க.,
 • 7, 8 மாதத்தில் சுவற்றை பிடித்து எழுந்திருக்க முயற்சி செய்வது, அதன்பின், 12, 15 மாதங்களில் நடக்க ஆரம்பித்துவார்கள். நாம் தான் ஓடுவதற்கு ரெடியாகவேண்டும்

பேச்சுத்திறன்:

 • ஒரு வயதிலிருந்தே குழந்தைகள் பேச ஆரம்பிச்சுடுவாங்க. உலகத்திலே குழந்தைங்க பேசுறதை மட்டும்தான் ’மழலை மொழி’ன்னு சொல்றோம். அதிலும், இந்த மொழி புரியறது தாய்க்கு மட்டும்தான். பொதுவா, குழந்தைங்க நாம பேசுறதை வயித்துல இருக்கும்போதே நல்லா கேட்க ஆரம்பிச்சிருவாங்க.
 • அதனாலதான், குழந்தைகிட்ட எப்பொழுதும் பேசிகிட்டு இருங்கன்னு சொல்வாங்க. நாம் பேசும் பேச்சுதான் அவங்களுக்கான வார்த்தைகள். அதன்பின், 15, 18 மாதங்களில் புத்தகம் மூலமா எழுத்துக்கள், படங்களை சொல்லித்தரலாம். இதெல்லாம், குழந்தை சரளமாக பேசவும், புரியவும் துணை புரியும்.​​மூளை அறிவாற்றல் வளர்ச்சி:
 • குழந்தையின் உடல் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மூளை வளர்ச்சியும் முக்கியம். பொதுவாகவே குழந்தையின் செயல்கள் அதன் மூளையில் ஆரம்பித்திலே பதிவாகிவிடும்.
 • ஒன்றரை வயதிலிருந்தே குழந்தைங்க அதை வெளிப்படுத்துவாங்க. வலித்தால், அழுவது, விளையாடுவது, ஏதாவது செய்கைக்கு சிரிப்பது போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே குழந்தையின் மூளை வளர்ச்சி இயல்புநிலை இருப்பதுதான். 2, 3 வயதில் அவர்களின் இந்த வளர்ச்சியானது ஆரம்பித்துவிடும்.​

ஞாபகசக்தி:

 • எந்த மூலையிலிருந்து பேசினாலும், கூப்பிட்டாலும் குழந்தை அம்மாவின் குரலை கண்டுப்பிடிச்சுடும். காரணம், வயித்துல இருக்கும்போதே அம்மாவின் குரல் குழந்தையின் மூளையில் பதிந்துவிடும்.
 • அதனால், குழந்தையின் ஞாபகத்திறன் 2 வயதிலே நல்லா ஆரம்பிச்சுடும். பொருட்களை அடையாளப்படுத்துவது, வார்த்தைகளை சொல்லித்தருவது, நிறங்கள், பழங்கள், காய்கள்கள், போன்றவை காண்பிப்பது. இதெல்லாம், குழந்தையின் மூளையில் பதிவாகி, பின் ஞாபகத்திறனை தூண்டச்செய்யும்.
 • 2, 3 வயதில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லவேண்டும். புத்தகத்தில் படங்களாக பார்ப்பதைவிடவும், நேரிலே பார்க்கும்பொழுது நன்கு தெளிவாக அதன் ஞாபகத்தில் இருக்கும். அதனால், பூங்கா, மிருகக்காட்சி போன்ற இடங்களுக்கு கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தலாம்.

விளையாட்டு மற்றும் கதை சொல்லுதல்:

 • மூளையோட வளர்ச்சிக்கும் அறிவுக்கும் முக்கிய பங்கே கதையும் விளையாட்டுதான். எப்ப நம்ம பாட்டிங்க, பாட்டி வடை சுட்ட கதையை சொன்னாங்களோ அங்கிருந்தே குழந்தைக்கு ஞாபகசக்தியும், கேட்கிற அறிவும் வளர்ந்துருது.
 • அதனால்தான், குழந்தைகிட்ட நிறைய கதை சொல்லுங்க, ஜாலியா விளையாடவைங்கன்னு சொல்றாங்க. கதைகளை கேட்கும்பொழுது குழந்தை அடுத்து என்ன என்பதை யோசிக்கவும், கேட்கவும் ஆரம்பித்துவிடும்.
 • விளையாடும்போது பொருளை உபயோகிக்கவும், அடிபட்டால் விழுந்து எழவும், எந்தெந்த விளையாட்டுக்களை எப்படியெல்லாம் விளையாடலாம் என்பதையும் தெரிந்துக்கொள்கிறார்கள்.​​

பெற்றோர் சொல்லித்தரவேண்டியது:

 • 1 முதல் 3 வயது வரை குழந்தைக்கான வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியம். குழந்தையின் வளர்ச்சியில் பயிற்சி தருவது மிகவும் அவசியம்.
 • குழந்தையிடம் கதை சொல்லுதல், பாட்டு பாடுதல், வண்ணங்கள், படங்கள் காமித்தல் போன்றவை. குழந்தைக்கான நேரத்தை முறையாக செலவிடுதல், ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.
 • முக்கியமாக குழந்தையிடம் நிறைய கேள்வியை நாம் கேட்கவேண்டும். அதேபோல், குழந்தை கேட்கும் கேள்விக்கு சலிக்காமல் பதில் சொல்லவேண்டும். அப்பொழுதான் குழந்தையின் அறிவுத்திறனோடு, தேடலு ம் வளர்ச்ச பெறும்.
 • ஒரே மாதிரியான விளையாட்டுகள் என்றில்லாமல் தினமும் ஒரு விளையாட்டு என்று இருக்கவேண்டும், இதெல்லாம் குழந்தையின் உடலும் மூளையும் ஒரே மாதிரி வேலை செய்ய உதவும்.

உணவு மற்றும் தூக்கம்:

 • மூளை ஒழுங்கா வேலை செய்யவும் அறிவா யோசிக்கவும் உணவும் தூக்கமும் அவசியம். அதனால், குழந்தை நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை ஆரம்பித்திலே கொடுத்து பழக்கவேண்டும்.
 • பழங்கள், கீரைகள், மீன், பால், முட்டை, நட்ஸ் போன்ற உணவுகளை குழந்தையின் அந்தந்த வயதுக்கேற்ப அளவாக கொடுக்கவேண்டும்.
 • பிறந்த குழந்தை 18 மணிநேரம் தூங்க வேண்டுமென்றால், வளரும் குழந்தை 10 மணிநேரம் தூங்க வேண்டும். பகலில் 2 மணிநேரமும், இரவில் 8 மணிநேரமும் குழந்தைகள் ஆழ்ந்து தூங்கும்போது மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். உணவும் தூக்கமும் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மன வளர்ச்சிக்கும் முக்கியம்.

குழந்தைக்கு இந்த விஷயங்களை முறையாக செய்து பயிற்சி கொடுத்தாலே போதும். வளர்ச்சி சரியாக இருக்கும். அப்புறமென்ன, நம்ம வீட்டு குழந்தையும் அடுத்த அப்துல்கலாம்தான்…

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}