• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

முருங்கை கீரை குழம்பு - ஆரோக்கியமும் ருசியும் நிறைந்தது

Bharathi
1 முதல் 3 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 05, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

முருங்கை கீரையில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றது. எல்லா அம்மாக்களுக்குமே தங்களுடைய குழந்தைகள் கீரை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். சில குழந்தைகள் கீரையை எப்படி சமைத்து கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். சில குழந்தைகளுக்கு வெவ்வேறு விதமான செய்முறைகள் தேவைப்படும். உங்கள் குழந்தைகள் முருங்கை கீரை சாப்பிட இது ஒரு சிறந்த வழியாகும். இதில் புளி, தக்காளி சேர்க்கப்படவில்லை. சிறு குழந்தைகளுக்கும் இந்த குழம்பைக் கொடுக்கலாம். இந்த ருசியான குழம்பை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதன் மூலம் அவர்கள் கீரை அதாவது ஒரு ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிற திருப்தி நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். 

முருங்கை கீரை குழம்பு சமைக்க தேவையான பொருட்களும், செய்முறையும் கீழே பார்க்கவும்.

தேவையான பொருட்கள்:

பாசிபருப்பு. - 1 கப் (50 கிராம்)

பச்சை மிளகாய். - 1 இல்லை

முருங்கைக்காய். - 1 எண்

கத்திரிக்காய் - 3 எண்

மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்

உப்பு. - தேவையான தொகை

முருங்கை இலைகள் - 1 கப்

அரைக்க:

தேங்காய். - 5-6 துண்டுகள்

சீரகம். - 1 ஸ்பூன்

மிளகு - 1/2 ஸ்பூன்

வெங்காயம். - 4-5 எண்

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு விதைகள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை.

செய்முறை:

1. முதலில் பாசிபருப்பை பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்..

2. ஒரு கடாயை எடுத்து முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் சேர்க்கவும்.

3. மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் காயம் சேர்க்கவும்.

4. அதை கலந்து நன்கு கொதிக்க வைத்து பின்னர் முருங்கை இலைகளை சேர்க்கவும்.

5. பின்னர் அரைத்து பேஸ்ட் சேர்த்து வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.

6. தேவையான உப்பு சேர்த்து வறுத்த கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும் ..

7. சுவையான குழம்பு தயார் ..

இட்லி, தோசை, சாதம் என உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் இதை கொடுக்கலாம். இந்த செய்முறையை முயற்சித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}