• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

நடை பழகும் குழந்தைகளுக்கான பயிற்சிகள்

Radha Shree
0 முதல் 1 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Aug 04, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

உங்கள் வீட்டில் கண்ணனோ இல்லை ராதையோ இப்போது தான் நடக்க பழகி கொண்டு இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமே இல்லை இது உங்களுக்காக தான். எப்படியோ முக்கி முணங்கி குழந்தைகளை பெற்று விட்ட தாய்மார்கள் அப்பாடா!! இனி கொஞ்சம் கண் அயர்ந்து ஓய்வு எடுக்கலாம் என்று நினைக்கின்றனர். அவர்கள் நினைப்பை முற்றிலும் தவிடு பொடியாக்கும் வகையில் குழந்தை பிறந்த முதல் நாள் இரவே "வீச்" என்று கத்தி அழ தொடங்கி விடுகிறது.

இப்படி குழந்தை வெளிவந்த நொடி தொடங்கி ஒவ்வாரு கன பொழுதையும் தாய் கவனமாக பார்த்து கையாளுகிறாள்.பெரும்பாலான குழந்தைகள் 7-9 மாதங்களில் உட்கார முயலுகிறார்கள் .குழந்தைகள் இப்படி உட்காரவும் நடக்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளில் எத்தனை தோல்விகள் கண்டாலும் அவர்கள் விட்டு கொடுப்பதே இல்லை. தொடர்ந்து முயலுகிறார்கள்.நாற்காலி அல்லது மேசையை பிடித்து கொண்டு தான் குழந்தைகள் நடக்க பழகுகிறார்கள்.

நடை பழகும் குழந்தைகளின் நடை வண்டி முதலில் பின்னால் தான் போகும் பிறகு முன்னால் வரும் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.இப்போது நடை வண்டிகள் வண்ணமயமாக விளையாட்டு சாமான்கள் இணைக்கப்பட்டு கிடைக்கிறது. குழந்தைகளை வெகு நேரம் நடை வண்டியில் நடக்க விடாமல் உங்கள் கண்கானிப்பிலே சுதந்திரமாக  நடக்க வையுங்கள். குழந்தைகள் நடை பழகும் போது என்ன? என்ன? செய்வார்கள்.பெற்றவர்களாக நாம் என்ன செய்ய வேண்டும்? என்று பார்ப்போம்.

உங்கள் நடை பழகும் குழந்தைகள் என்ன செய்வார்கள்?

உங்களது நடை பழகும் குழந்தைகள் தங்களை சுற்றியுள்ளவற்றை ஆராய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் அவர்களின் உறவுகளை அறிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.அவர்கள் நடக்கும் போது ஊக்கப்படுத்துங்கள்இது அவர்களின் தன்னம்பிக்கையை இரட்டிப்பாக உதவும்.

 1. கண்ணாமூச்சி  வி்ளயாட்டு வி்ளயாடுங்கள் - விளையாட்டை பற்றி உங்கள் நடை பழகும்  குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு, ஆரம்ப கட்டத்தில் அவர்களுக்கு அருகாமையில் உள்ள இடத்தில், நாற்காலி  அல்லது கட்டிலுக்கு அடியில், ஒளிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தை உங்களை கண்டுபிடிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை , அவர்களை கட்டி பிடித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.இது பாதுகாப்பான முறையில் ஆராயும் வழக்கத்தை  ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் நடை பழகும் குழந்தைகளை ஒரு கட்டத்தில் விட்டு விட்டு விலகி செல்வது அவர்களுக்கு பழகி விடுகிறது.
 2. ஏதாவது ஒரு புது இடத்தில் உங்கள் குழந்தைகளை ஆராய்ச்சி செய்ய ஈடுபடுத்துங்கள் - சமையல் அறை ,அலமாரிகள் அல்லது இளம் குழந்தைக்குப் பாதுகாப்பான புதிய பொருட்கள்  நிறைந்த ஒரு பட்டியலை காட்டுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு என்னென்ன பொருட்கள் எங்கெங்கு இருக்கும் என்று நாளடைவில் புரிய தொடங்கும்.
 3. ஒரு விளையாட்டு  பொருளை பகிர்ந்து  கொள்வது எப்படி என்று அவர்களுக்கு காட்டுங்கள் - உங்கள் குழந்தை ஒரு வி்ளயாட்டுப் பொருளை வைத்து கொள்ளட்டும். நீங்கள்  ஒரு விளையாட்டு பொருளை உங்களுக்கு என்று கேட்டு வாங்கி கொண்டு அவர்களுக்கு அருகில் உட்கார்ந்து விளையாடுங்கள்.இது அடுத்தவர்களுக்கு பகிர்ந்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தையின் மனதில் விதைக்கும்.
 4. இது அவர்களின் ஞாபக சக்தியை வளர்க்க உதவும் - குழந்தைகளிடம் விளையாட்டு பொருளின் பெயரையோ, நிறத்தையோ கூறி அதை எடுத்து வர செய்யலாம். 
 5. மற்றவர்கள் எவ்விதம் உணர்கிறார்கள் என்பதைப் புாிநது கொள்ள செய்யுங்கள். அதற்கு பல்வேறு உணர்வுகள் (கோபம், மகிழ்ச்சி, சோகம்) போன்றவற்றை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள்  உள்ள ஒரு புத்தகத்தைத் தேடி பிடியுங்கள். இந்த புத்தகத்தை உங்கள் நடை பழகும் குழந்தையுடன் சேர்ந்து படியுங்கள், கதாபாத்திரங்கள் ஏன்? அவ்விதம் உணர்கிறார்கள் என்பதை கவனமாக விளக்குங்கள். உங்கள் குழந்தையும் இதை எல்லாம் உணர்வான் என்று அவனுக்கு தெரியபடுத்துங்கள். இதன் மூலம் மற்றவர்களின் உணர்வுகள் உங்கள் குழந்தைக்கு புரிய தொடங்கும்.
 6. அவனுக்குத் தெரிந்த  நபர்களை அடையாளம் காட்ட செய்யுங்கள் - உங்களது நடை பழகும் குழந்தைகளிடம் அவர்களுக்கு  நன்கு அறிமுகமான நபர்களின் புகைபடங்களை காட்டி அதில் உள்ள நபர்களை அடையாளம் காணும் படி செய்யுங்கள். இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும்.
 7. உங்கள் நடை பழகும் குழந்தைகளை  அத்தனை உணர்வுகளும் வெளிபடுத்தும் இசைக்கேற்ப நடனமாட செய்யுங்கள் இதன் மூலம் நாம் நடந்து கொள்ளும் விதத்திற்கும்,  உணர்வுகளுக்கும் தொடர்பு உள்ளது என்று உங்கள் நடை பழகும் குழந்தை புரிந்து கொள்வான்.
 8. உங்கள் நடை பழகும் குழந்தையிடம் எளிய படங்களுடன் கூடிய வண்ணமயமான விலங்குகள், பறவைகள், எழுத்துக்கள் நிரம்பிய அட்டைகளை சுட்டிக் காட்டி அதை எடுத்து வர செய்யுங்கள். இதனால் உங்கள் குழந்தை நிறைய கற்றுக் கொள்வர்.
 9. நடை பழகும் குழந்தையின் முன் கண்ணாடி ஒன்றை வைத்து அதில் பிரதிபலிக்கும் குழந்தையின் பிம்பத்தை அடையாளம் காண செய்யுங்கள். இதன் மூலம் நாம் எப்படி இருக்கிறோம்? உணர்வுகளுக்கு ஏற்றவாறு நம் பாவனைகள் எப்படி மாறுகிறது? என்று குழந்தைகளுக்கு புரியும்.
 10. சுற்றுப்புறத்தை ஒழுங்கு படுத்த சொல்லி கொடுங்கள். ஆபத்தான பொருட்களை( ஊசி,ஆணி) கண்டால் அப்புற படுத்த சொல்லி கொடுங்கள்.இதன் மூலம் உங்கள் குழந்தைகள்  தன்னை சுற்றி உள்ள இடத்தை தூய்மையாக வைத்திருப்பது தன்னுடைய கடமை என்று உணர்ந்து செயல்படுவார்கள்.
 11. மேலும்  கதவுகள், சன்னல்களை மூடவும், கதவுகளுக்கு தாள்பாழ் போடவும் கற்று கொடுங்கள்.

இப்படி சின்ன சின்ன விசயங்களையும் வளரும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்ப்பதால், பெரிய முடிவுகள் எடுக்கும் போது கவனத்துடன் இருப்பார்கள். நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை நம்மால் இப்படி தான் உருவாக்க முடியும்.

"விளையும் பயிர் முளையிலேயே தெரியும் "

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Mar 22, 2019

I have 7 and half old baby. I am using walker for my boy baby. we are not put down to floor is this any problem for my baby.

 • Reply | 1 Reply
 • அறிக்கை

| Dec 28, 2019

It is proved that modern walker slows down the learning activity of children . If u want u can give traditional walker to ur child which should suit ur child's height.

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}