• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

நர்சரி அட்மிஷன் 2019: உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாரா?

Radha Shree
3 முதல் 7 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 08, 2018

 2019

சென்னை உட்பட தமிழகம் எங்கும் இதோ அடுத்த கல்வி ஆண்டுக்கான நர்சரி பள்ளி சேர்க்கை தொடங்கிவிட்டது. ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் குழந்தைக்கு சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென விரும்புவார்கள். பள்ளிகள் பற்றி ஆய்வு செய்வது, பல பள்ளிகளில் படிவங்களை வாங்குவது, படிவங்களை சமர்ப்பிப்பதற்கான சரியான தேதியை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது, ஆவணங்களை தயார் செய்து கொள்வது என பெற்றோர்கள் திட்டமிட்டு செயல்படுவதற்கான சரியான தருணம் இதுவே.
மேலும் உங்கள் குழந்தைக்கான சரியான பள்ளியைத் தேர்ந்தெடுக்க என்னென்ன விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும் ? எவ்வாறு அதை திட்டமிட வேண்டும் என்பதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.

நீங்கள் பள்ளியை தேடும் போது மூன்று விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 1. ஆன்லைனில் உங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளை பட்டியலிடுங்கள். நிறைய பள்ளிகளில் 10 நாட்களுக்கு முன்பே நுழைவுப் படிவங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமாக அந்த பள்ளியை பற்றிய தகவலை கேகரித்துவிட்டு பிறகு படிவங்களை வாங்குங்கள். சில பள்ளிகளில் குழந்தையையும் அழைத்து வர சொல்லுவார்கள்.
 2. உங்கள் குழந்தைகளின் வயது, திறன், தூரம், கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தெந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதை பட்டியலிடுங்கள்.
 3. பல பள்ளிகளில் படிவத்தை வாங்குவதால், சரியான தேதியில் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் நிரப்பிக் கொடுக்க வேண்டும். அதனால் இந்த விவரங்களை ஞாபகத்தில் வைப்பதற்கான குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்யவைகள்

 • ஓவ்வொரு பள்ளியிலும் சேர்க்கைக்கான வயது வரம்பு வித்தியாசப்படுவதால், உங்கள் குழந்தையின் வயதை சரியாகக் கணக்கிட்டு முன்கூட்டியே பள்ளியை அணுகுங்கள்.
 • பள்ளிகளை எப்படி தேர்ந்தெடுப்பது ?
 • இப்போதே எந்தக் கல்விமுறையில் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ப்ளே-வே கல்விமுறை, மாண்டிசோரி, வால்டார்ஃப் கல்விமுறை, ரெஜியோ எமிலியோ கல்விமுறை போன்ற பல்வெறு கல்விமுறைகள் இருக்கின்றது. இப்போது சில அரசு பள்ளிகள் கூட ஆரம்ப பள்ளிகளுக்குத் தேவையான ப்ளே-வே முறை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.
 • பெரும்பாலான பள்ளிகளில் டோனேஷன் கட்டணம் கேட்கிறார்கள். ப்ரீ- ஸ்கூலுக்கு பிறகு அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கப் போகிறர்களா அல்லது வேறு பள்ளிக்கு அனுப்பப் போகிறீர்களா என்பதை திட்டமிடுங்கள். பெரிய பள்ளிகளில் டோனேஷனை கட்டிவிட்டு பிறகு பள்ளியை மாற்ற நினைக்கும் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
 • பள்ளியில் ஆசிரியர் – குழந்தை விகிதாச்சாரத்தை விசாரித்துக் கொள்வது நல்லது. சிறிய குழந்தைகளாக இருப்பதால் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனிப்பு தேவைப்படும். 2 அல்லது 3 வயது குழந்தைகள் என்றால் ஒரு ஆசிரியருக்கு 6 குழந்தைகள் என்பது சரியான விகிதாச்சாரம். அதுவே 4 அல்லது 5 வயது குழந்தைகள் என்றால் 8 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் விகிதம் சரியானது என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.
 • முதன் முதலில் குழந்தைகள் புதிய சூழலுக்குள் செல்லும் போது அகடமிக்குக்கான வளர்ச்சியை விட விளையாட்டு, ஒழுக்கம், சமூகமாயதல் மற்றும் கற்பனை திறன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வித்தியாசப்படும் வயது அடிப்படை

  பொதுவாக அடுத்த ஆண்டு சேர்க்கைகான ஏற்பாடுகளே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூனில் ப்ரீ-ஸ்கூல் என்றால் உங்கள் குழந்தையின் வயது 2 அல்லது 2 வருடம் 6 மாதம், LKG என்றால் 3 அல்லது 3 வருடம் 6 மாதம், சில பள்ளிகள் 4 வயது என்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் நர்சரி வகுப்புகளுக்கென்று சில வயது வரம்புகளை நிர்ணயித்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு அடுத்த ஆண்டு மே மாதத்தில் உங்கள் குழந்தையின் வயது 2 அல்லது 2 வருடம் 6 மாதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதை கணக்கில் கொண்டு உங்கள் குழந்தைக்கு பள்ளியை அணுகுத் தொடங்கிவிடுங்கள். அடுத்த ஆண்டு சேர்ப்பதற்கான படிவத்தை இப்போதே சமர்ப்பிக்க வேண்டும். ஏன்னென்றால் பள்ளிகள் குறிப்பிடும் வயதிற்கு ஒரிரு மாதங்கள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, கூடுதலாக இருந்தால் அட்மிஷன் கிடைக்காது.

இப்போதே பள்ளிகளில் விசாரிக்க ஆரம்பித்தால் தான் பெற்றோர்களுக்கு தெளிவு கிடைக்கும். மேலும் எதிர்பார்த்த பள்ளியில் சீட் கிடைக்கவில்லை என்றாலும் மற்ற பள்ளிகளை தேட அவகாசம் இருக்கும். இல்லையென்றால் இறுதியில் கிடைக்கும் பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும்.

நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சிகள் சொல்லும் ப்ரீ-ஸ்கூல் பள்ளி சேர்க்கைக்கான சரியான வயது
தமிழகத்தில் பெரும்பாலும் 2 அல்லது 3 வயது வரை குழந்தைகளை சேக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் ப்ரீ-ஸ்கூல் சூழலுக்கு பழகுவதற்கான சரியான வயதாக 2 அல்லது 21/2 வயது என்கிறார்கள் குழந்தை நல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள். இன்றைய காலக்கட்டத்தில் மேலும் பெற்றோர்கல் இருவரும் வேலைக்கு போகும் சூழல் இருக்கும்பட்சத்தில் அல்லது 1½ வயது குழந்தைகளை ப்ரீ-ஸ்கூல் சேர்ப்பதை விட டே- கேர் சேர்ப்பதை சிறந்தது. அதனால் ப்ரீ-ஸ்கூல் என்றால் 2 அல்லது 2 1/2 வயது சிறந்தது. அதே போல் 3 வயதில் கிண்டர்கார்டன் மற்றும் ஆரம்ப பள்ள்யில் சேர்ப்பது சிறந்தது.

அட்மிஷன் தேதிகள் பற்றிய விவரம்

2019-20 ஆண்டுக்கான நர்சரி பள்ளி அட்மிஷன் தகவல்கள் இணையத்தளத்தில் வெளிவரத் தொடங்கிவிட்டது.

பெரும்பாலான பள்ளிகளில் டிசம்பர் மாதம் விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம். ஜனவரிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

நர்சரி பள்ளி சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்வதற்கான பயனுள்ள குறிப்புகள்:

 •  முதலிலேயே பள்ளி படிவத்தை ஒரு நகல் எடுத்து அதில் பூர்த்தி செய்து பார்த்துக் கொள்ளுங்கள். பிழைகள் ஏற்பட்டாலும் திருத்திக் கொள்ளலாம். ஒரிஜினல் படிவம் வீணாகாது.
 •  பள்ளியில் கேட்கப்படும் ஆவணங்களை இரண்டு மூன்று நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேர பரபரப்பில் ஏதாவது ஒன்றை மறக்க வாய்ப்பிருக்கிறது. ஆவணங்களை       ஒவ்வொரு பள்ளிப் படிவத்தோடும் இணைத்து தனித்தனி கவரில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 •  தேர்ந்தெடுக்கும் பள்ளிகளின் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ஆன்லைன் மற்றும் நேராக என இருமுறைகளிலும் படிவத்தை நிரப்பிக் கொள்ளலாம்.
 •  படிவத்தில் வயதை பூர்த்தி செய்யும் போது கவனம் தேவை. சில பள்ளிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குழந்தையின் வயது என்ன என்று கேட்டிருப்பார்கள், சில பள்ளிகளில்     ஜூன் மாதத்தில் குழந்தையின் வயதை என்ன என்று கேட்டிருப்பார்கள். ஆதலால் குழந்தையின் வயதை சரியாகக் கணக்கிட்டு படிவத்தில் குறிப்பிடுங்கள்.
 •  வீட்டு முகவரி மற்றும் பின் கோடு போன்றவற்றை கவனமாகப் பூர்த்தி செய்யுங்கள்.
 •  படிவத்தை நிரப்பிய பிறகு தொடர்ந்து பள்ளியின் அறிக்கைகளை பின்தொடருங்கள். சில பள்ளிகளில் ரெஜிஸ்ட்ர்டு போஸ்ட் அனுப்புவார்கள். சில பள்ளிகளில் இ-மெயில் அனுப்புவார்கள். சில பள்ளிகளில் நேரில் வர சொல்லுவார்கள். இந்த விஷயத்தில் தொடர்ந்து உங்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

பள்ளி நிர்வாகிகளை சந்திக்கும் போது கேட்க வேண்டிய கேள்விகள்:

 • என்னுடைய குழந்தை டாய்லெட் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமா? சில பள்ளிகளில் டயப்பர் போட அனுமதியில்லை.
 • பள்ளியோடு பெற்றோர்கள் எவ்வாறு ஈடுபட முடியும்? உதாரணத்திற்கு பெற்றோர்கள் சந்திப்பு, வொர்க்ஷாப்ஸ், வாட்ஸ் அப் க்ரூப், ஃபேமிலி பிக்னிக், விடுமுறை விழாக்கள் என பெற்றோர்கள் சமூகமயமாக என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 • என் குழந்தையின் முன்னேற்றத்தை பற்றி ஆசிரியர் எப்படி தெரிந்து கொள்வார்கள்? இ-மெயில், நியூஸ்லெட்டர், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு முலம் குழந்தையின் முன்னேற்றத்தை அறிவிக்கும் வழியை தெரிந்து கொள்ளுங்கள்.
 •  பள்ளியின் ஒழுக்க விதிமுறைகள் என்ன? குழந்தைகளை அதற்கேற்றவாறு வீட்டிலும் பெற்றோர்கள் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
 • பள்ளியில் என் குழந்தையின் அன்றாட செயல்கள் என்ன? விளையாட்டு நேரம், ஸ்நாக்ஸ் நேரம், கதை சொல்வது, புத்தகம் வாசிப்பது என அவர்கள் வழக்கமாக செய்யும் செயல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
   

ஒரு குழந்தைக்கு 3 அல்லது 4 வயது ஆகிவிட்டது, அவர்கள் பள்ளிக்கு செல்ல தயாராகிவிட்டார்கள் என்று ஒரு பள்ளி நிர்ணயித்துவிட்டால் மட்டும் போதாது, அதை குழந்தையின் திறன்கள், செயல்கள், வளர்ச்சி ஆகியவையே முதலில் நிர்ணயிக்க வேண்டும். அதுவரை அவர்களுக்கான அவகாசத்தை கொடுப்பதே அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்லது. குழந்தைகளின் முதல் பள்ளி அனுபவம் அவர்களின் வாழ்வில் இனிமையான நினைவுகளாக மலரட்டும்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Tools

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Calculator

Are you pregnant? Track your pregnancy weeks here!

Duedate Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}