• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

3, 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனரித் தேர்வு – கற்றல் திறனுக்கான கணக்கெடுப்பு

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Oct 18, 2021

3 5 8 10
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஆன்லைன் வழியாக மட்டுமே கற்று வருகின்றனர். ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்போவதால அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் கற்றல் இழப்பீட்டை கணக்கில் எடுக்கும் வகையில் 3, 5, 8, 10-ம் வகுப்புகளுக்கு மாநில அளவில் திறனறித்தேர்வு நடக்க உள்ளது. திறனரித் தேர்வு என்றால்? மாணவர்களின் கற்றலில் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு கண்டறிவது?  அவர்கள் கற்றல் திறனை எப்படியெல்லாம் வளர்க்க  உதவலாம்? என்பதை இப்பதிவில் காணலாம்.

மாநில திறனரித் தேர்வு  NAS (National Achievement Survey) 2021

 • NAS என்பது திறன் அடிப்படையிலான தேசிய மதிப்பீடு ஆகும்.. இது மாணவர்களின் கற்றல் திறன் பற்றிய தகவல்கள் வழங்குவதற்காக நடத்தப்படுகிறது.
 • பள்ளிக் கல்வியின் செயல்திறனைப் பிரதிபலிப்பதே முக்கிய நோக்கமாகும். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
 • தரவரிசையில் குழந்தைகளின் திறன்களை மதிப்பிடுவதற்காக III, V, VIII மற்றும் X  வகுப்புகளுக்கு கடந்த NAS 2017/2018 இல் நடத்தப்பட்டது.
 • 2020 ல் NAS இன் அடுத்த சுற்று பள்ளி மூடப்பட்டதால் நடத்த முடியவில்லை.
 • NAS இப்போது 12 நவம்பர் 2021 அன்று நடத்தப்படும்.

எதற்காக இந்த திறனரித் தேர்வு?

கொரோனாவால் இந்த ஒன்றரை ஆண்டு பள்ளிக்கு செல்லததால் குழந்தைகளுக்கு கற்றலில் நிறைய பிரச்சனைகள் மற்றும் சவால்கள் உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பீட்டை கணக்கில் எடுத்து அதை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் திறனரித் தேர்வு (National Achievement Survey -NAS 2021) நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 3, 5, 8, 10-ம் வகுப்புகளுக்கு மாநில அளவில் திறனறித்தேர்வு நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே மதிப்பீடு தேர்வு ஒன்றை பள்ளிகல்வித்துறை நடத்தியதை இங்கே குறிப்பிட விருமொபுகிறேன்.

கல்வித்தரத்தை உயர்த்த கற்பித்தல் செயல்முறை, மதிப்பீடு,  மற்றும் கற்றல் ஆகியவற்றின் சார்புநிலையைப் புரிந்துகொள்வதில் ஆராய்ச்சியாளர்கள் உட்பட கல்வியாளர்கள், கல்வித் திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு NAS பயனுள்ளதாக இருக்கும். கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான சர்வே இது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின்  சமூக-உணர்ச்சி மற்றும்  கற்றல் திறன், அறிவாற்றல் வளர்ச்சி பாதித்துள்ளது என்பதை அறிய NAS உதவுகிறது. கற்றலில் மாணவர்களின் செயல்திறனை துல்லியமாக கண்டறிய உதவும் என நம்பப்படுகிறது.

திறனரித் தேர்வில் என்னென்ன கற்றல் திறன் சார்ந்து கணக்கெடுக்கிறார்கள்?

மொழி, கணிதம், EVS/அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடத்திட்டங்களில் 3, 5, 8 மற்றும் 10 க்கு NAS 2021 நடத்தப்படும்,

உங்களுக்காக பயனளிக்கும் வகையில் கடந்த NAS 2021 இல் நடத்தப்பட்ட தேர்வில் கேட்ட பாடங்களின் தொகுப்பை இங்கே நீங்கள் காணலாம்

மொழியியல் தேர்வில்  - 3, 5, 8 & 10 ஆம் வகுப்பு

 • கேட்பது, வார்த்தைகளை அடையாளம் காணுவது, வாசித்தல்  மற்றும் படிப்பது போன்றவற்றில் மாணவர்களின் திறன்களின் சதவிகிதம்.

கணிதத் தேர்வில்  - 3 & 5 ஆம் வகுப்பு

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வடிவங்கள் மற்றும் இடஞ்சார்ந்த புரிதல், எண்கள், மனக்கணக்கு, பணம், அளவீடு, எடை, தொகுதி, நேரம், தரவு கையாளுதல், வடிவங்கள் என கணிதத்திலும் தேசிய சராசரி சதவிகிதம்

8 ஆம் வகுப்பு

Number System, Algebra, Ratio and Proportion, Geometry, Representing 3D in 2D, Construction, Mensuration, Data Handling, Introduction to Graphs

10 ஆம் வகுப்பு

Number System -Algebra -Trignometry -Coordinate Geometry -Geometry -Mensuration -Statistics and Probability

EVS/அறிவியல்  - 3 & 5 ஆம் வகுப்பு

 • குடும்பம் மற்றும் நண்பர்கள்
 • a) உறவுகள் b) வேலை மற்றும் விளையாட்டு c) விலங்குகள் d) தாவரங்கள்
 • உணவு, தங்குமிடம், தண்ணீர், பயணம், நாம் செய்யும் விஷயங்கள்

8 & 10 ஆம் வகுப்பு

உணவு, பொருட்கள், உலகம், நகரும் விஷயங்கள், மக்கள் மற்றும் சிந்தனைகள், வேலை எப்படி நடக்கிறது, இயற்கை நிகழ்வுகள், இயற்கை வளம்

சமூக அறிவியல்  8 ஆம் வகுப்பு

வரலாறு, நிலவியல், சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை ஆகிய பாடங்கள்

சமூக அறிவியல்  10 ஆம் வகுப்பு  

 நிலவியல், அரசியல் அறிவியல்  & பொருளாதாரம் ஆகிய பாடங்கள்

மேலும் பாடவாரியான தகவல்களுக்கு இந்த இணையத் தளத்தை பாருங்கள்

https://nas.education.gov.in/reportAndResources

குழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்க பெற்றோர் உதவக்கூடிய 11 விஷயங்கள்

 1. எல்லா குழந்தைகளும் நல்ல விஷயங்கள் மற்றும் அவர்களுக்கு கடினமான விஷயங்களை கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனங்களை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியம்.
 2. செயலின் முடிவை விட முயற்சியை பாராட்டுங்கள். சரியான அல்லது தவறான பதிலில் கவனம் செலுத்துவதை விட ஒரு குழந்தை தனது சிறந்த முயற்சியை எடுக்கும்போது அதை அடையாளம் காண்பது முக்கியம். உதாரணமாக, நீங்கள் சொல்லலாம், "இந்த கணித சிக்கலை நீங்கள் கண்டுபிடிக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்கிறீர்கள்" அல்லது "இந்த கணிதத்தில் ஈடுபாடாக இருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." இதே உத்தியை மற்ற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம் (எ.கா., "பேஸ்பால் பயிற்சியின் போது பந்தை பிடிக்க நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தீர்கள் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்").
 3. குழந்தைகள் பள்ளிப் பணிகளை செய்யும்போது ஓய்வெடுக்கவும் இடைவேளை வழங்கவும் அனுமதியுங்கள். அப்போது தான் அவர்கள் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
 4. எளிதான பணிகளுக்கு இடையே கடினமான பணிகளை சாண்ட்விச் செய்யுங்கள். உதாரணமாக, உங்கள் பிள்ளை கணிதத்தை படித்துவிட்டு அடித்து வாசிப்பதை விரும்பினால், சில கணித சிக்கல்களுடன் தொடங்கவும் அதன் பிறகு வாசிப்பு.  பின்னர் விருப்பமான கணித பாடத்துடன் வீட்டுப்பாடத்தை  முடிக்கவும். எளிதான பணி என்பது  "குழந்தையை சோர்வில்லாமல் படிக்க ஊக்கம் கொடுக்கும்" மற்றும் விருப்பமான பாடத்துடன் முடிப்பது வீட்டுப்பாடம் நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற உதவும்.
 5. கற்றல் குறைபாடுள்ள குழந்தைக்கு உதவி செய்வதற்கு முன் கல்வித் திறன்களை உள்ளடக்கிய தினசரி செயல்பாடுகளுக்கு உதவ விரும்புகிறாரா என்று கேளுங்கள். குழந்தை அதை தானே கண்டுபிடிக்க விரும்பலாம்.
 6. செயல்களில் தவறு நேர்ந்தால் பரவாயில்லை என்பதற்கு நீங்கள் ஒரு மாதிரியாக இருங்கள். உதாரணமாக, ஒரு கடிதம் எழுதும் போது நீங்கள் தவறு செய்தால், “அச்சச்சோ! நான் அந்த வார்த்தையை தவறாக உச்சரித்தேன். அப்படியா நல்லது! நான் அதைக் குறித்து வைத்து மீண்டும் தொடங்குவேன். " இந்த அணுகுமுறையை குழந்தையும் கற்றுக்கொள்ளும். தவறு நடந்ததையே எண்ணி வருத்தப்படாமல் அதை எப்படி அடுத்த முறை சிறப்பாக செய்யலாம் என்பதை கற்க ஊக்குவிக்கலாம்.
 7. எதிர்மறை உணர்ச்சிகளை பாதுகாப்பான முறையில் வெளிப்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் நிறைய ஏமாற்றங்களை அனுபவிப்பார்கள், சகோதரர், சகோதரிகளுக்கு இந்த மாதிரி இல்லாதபோது அவர்களுக்கு மட்டும் கற்றல் குறைபாடு இருப்பதாக கோபப்படலாம். இந்த வழியில் உணருவது பரவாயில்லை என்பதை ஒப்புக்கொண்டு, இந்த உணர்ச்சிகளை பாதுகாப்பாக வெளிப்படுத்துவதற்கான வழிகளை உருவாக்கிக் கொடுக்கவும்.
 8. ஒவ்வொரு குழந்தையையும் தனி நபராகக் கருதுங்கள் மற்றும் குழந்தைகளின் திறன்களை மற்ற குழந்தையோடு ஒப்பிடாதீர்கள் அல்லது ஒரு குழந்தை மற்ற குழந்தையின் வயதில் எப்படி இருந்தது என்பதை ஒப்பிடாதீர்கள் (எ.கா. "சுசி உங்கள் வயதில் படிக்கும்போது").
 9. குழந்தையின் விருப்பமான செயல்பாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள். கற்றலில் சிக்கல் உள்ள  குழந்தைகளுக்கு கல்விப் பணிகளை முடிக்க நிறைய நேரம் தேவைப்படுகிறது. குடும்பத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளும் அதே வேளையில், குழந்தைக்கு விருப்பமான மற்றும் அவர் சிறந்து விளங்கும் பணியில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் தெரியும். இந்த செயல்பாடு உங்கள் குழந்தை திறனை உணரவும் சுயமரியாதையை மேம்படுத்தவும் உதவும்.
 10. உங்கள் குழந்தைக்கு பள்ளியில் ஆர்வம் காட்டும் "உந்துதலைக்" கண்டறியவும். கற்றலில் சவால்கள் உள்ள குழந்தைகள் கல்வி பற்றி விரக்தியாக எண்ணலாம். பாடம் படிக்கவே பிடிக்காமல் இருக்கலாம். அதிலும் ஆன்லைன் வழிக்கல்வி பிடிக்காத எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பெற்றோர் குழந்தைகளுக்கு உதவ வேண்டும். அதாவது அவர்களுக்கு கடினமாக தோன்றும் பாடங்களை பற்றி அறிந்து கொண்டு, அவர்கள் எளிமையாக படிக்க உதவலாம். ஆன்லைன் வீடியோ அல்லது வரைபடம் என அவர்களுக்கு ஏற்ற மாதிரி கற்பிக்கலாம்.
 11.  உங்கள் குழந்தையை  கல்வி மட்டுமில்லாமல் மற்ற துறைகளில் (எ.கா. பாடகர், இசைக்குழு, மாணவர் மன்றம், விளையாட்டு குழு, கலைக் கழகம், அறிவியல் கிளப் போன்றவை) ஒரு செயல்பாட்டில் ஈடுபடுத்தலாம் (எ.கா. பள்ளி நிதி திரட்டலில் பங்கேற்பது, நூலக உதவியாகப் பணியாற்றுவது போன்றவை). இது அவர்களின் தனித்தன்மையை வளர்ப்பதோடு, சுயமதிப்பீடு உயரும். தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.
 12. கற்றல் பிரச்சினைகளை கொண்ட ஒரு முன்மாதிரியை கண்டுபிடிப்பது, வெற்றி அடையக்கூடியது என்பதை குழந்தைகளுக்குக் காட்டலாம். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்கள் படிப்பில் ஈடுபாடில்லை. அதே நேரத்தில் தங்களின் தனித்திறமையை அடையாளம் கண்டு அதில் அடைந்தனர்.

ஒரு குழந்தை தனது கற்றல் பிரச்சினைகள் பற்றி  பேச பெற்றோர், ஆசிரியர், நண்பர் அல்லது கல்வி ஆலோசகர் என அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். மற்றவர்களோடு போட்டிக் கொண்டு பந்தயக் குதிரைப் போல் ஓடுவதை விட, அவர்களின் தனித்திறனோடு, புரிந்து கற்று நிதானமாக வளர்வது என்பது குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவும்.  கற்றல் சிரமங்கள் இருந்த போதிலும் ஒரு உயர்ந்த குறிக்கோளை அடைய ஒரு குழந்தையை ஊக்குவிக்க இது உதவக்கூடும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}