• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

நவராத்திரி ஏழாம் நாள் பிரசாத வகைகள் மற்றும் சிறப்பு

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Oct 13, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இந்த நாளில் சாம்பவித் துர்க்கையை வழிபடுதல் சிறப்பு. இவள் பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றத்துடன் காணப்படுவாள். உடன், 8 வயது சிறுமியை அம்பாளாக பாவித்து மரியாதை செலுத்துதல் சிறப்பு. சப்தமி திதி முடிவதற்குள் பூஜையை முடித்தல் சிறப்பு. அக்கணம் நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை போன்ற மலர்களைக் கொண்டு அம்பாளை பூஜிக்கலாம். எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டக் கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு போன்றவற்றை அம்பாளுக்கு நிவேதனம் செய்யலாம். இந்நாளில் அம்பாளை பிலஹரி ராகத்தில் பாடி பூஜித்தல் சிறப்பு. இதனால் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெறும்.

எழுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள்

 • புழுங்கல் அரிசி – 400 கிராம்
 • எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)
 • உப்பு – தேவையான அளவு
 • மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்

தாளிக்க

 • கடுகு – 1 ஸ்பூன்
 • கடலைப் பருப்பு – 3 ஸ்பூன்
 • பச்சை மிளகாய் – 3 (நடுத்தரமானது)
 • இஞ்சி – சுண்டு விரல் அளவு
 • கறிவேப்பிலை – 20 கீற்றுகள்
 • நல்ல எண்ணெய் – 50 கிராம்

செய்முறை

 1. முதலில் அரிசியை சாதமாக்கிக் கொள்ளவும். சாதமானது உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சாதத்தை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி உலர விடவும்.
 2. எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும். எலுமிச்சைச் சாற்றில் கொட்டைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பிழிந்து வைத்துள்ள எலுமிச்சைச் சாற்றில் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
 3. பச்சை மிளகாயை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். கறிவேப்பிலையை உதிர்த்துக் கொள்ளவும்.
 4. வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும். அதனுடன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கடலைப் பருப்பைச் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் பச்சை மிளகாய், சதுரங்களாக வெட்டிய இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
 5. கடலைப் பருப்பு பொன்னிறமானதும் எலுமிச்சைக் கலவையைச் சேர்க்கவும். உடனே அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது எலுமிச்சை ரசம் தயார்.
 6. பின் சாதத்துடன் எலுமிச்சை ரசக்கலவையைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார். இதனுடன் புளிக்குழம்பு, கொத்தமல்லி துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் சேர்த்து உண்ணலாம்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}