• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் குழந்தையை எவ்வாறு தயார் செய்வது?

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 30, 2021

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் அம்மாக்கள் இந்த குழந்தையையும் நல்ல முறையில் பெற்றுக் கொள்ள வேண்டுமே, என்ற கவலையில் முதல் குழந்தையை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இது அம்மக்களின் தவறு அல்ல. ஒரு பெண் கர்ப்ப காலத்தில் தன் வயிற்றில் இருக்கும் சிசு மீதே முழு கவனத்தையும் செலுத்துவாள். இது இயல்பான ஒன்று என்றாலும் முதல் குழந்தையும் முக்கியம் அல்லவா. முதல் குழந்தைடின் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும், ஆனால் இதற்ல்கு முன் அம்மா தன்னோட அதிக நேரம் செலவு செய்வது இல்லையே என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாத வயசு. முதல் குழந்தையின் ஏக்கமும், உணர்ச்சிகளும் சில நேரங்களில் அடம், கோபமாக வெளிப்படும், சில நேரங்களில் குழந்தைகள் தனக்குள்ளே மறைத்து அமைதி ஆகிவிடுவார்கள்.

முதல் குழந்தை இந்த மாற்றங்களை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இருந்தால் பிரச்சினை இல்லை. முதல் குழந்தையையும் சமாளித்து அதே நேரத்தில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது சற்று சிக்கலான சவால் தான்.  இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது வீட்டில் யாருக்கு பயம் அதிகரிக்கிறதோ இல்லையோ முதல் குழந்தை தான் பயத்தின் உச்சியில் இருக்கும்.ஏதோ தன்னை சுற்றி வித்தியாசமாக நடப்பதாக குழந்தைகள் மனதில் விவரிக்க முடியாத உணர்வுகள் தோன்றும்.

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும்?

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது எந்த மாதிரியான சூழ்நிலைகளை கர்ப்பிணிகள் சந்திப்பார்கள் என்பதை அவர்கள் முன்னரே தெரிந்து அதற்கு ஏற்றார் போல முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் அவர்கள் சந்திக்கும் சவால்களை சரியாக கையாளலாம். இரண்டாவது பிள்ளை பிறக்கும் போது கர்ப்பிணிகள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனைகளாக மாற்றலாம் என்பதற்கான சில வழிகளை பார்போம்.

 1. முடிந்தவரை முதல் குழந்தை பள்ளி செல்ல தொடங்கிய பின் இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளலாம். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் சரியான அளவில் கால இடைவெளி விடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
 2. முதல் குழந்தை பள்ளி செல்ல தொடங்கி விட்டால் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்ளும் வேலை கணிசமாக குறையும்.
 3. பள்ளி செல்லும் முதல் குழந்தைகளின் பள்ளி தோழர், தோழிகளுக்கு தம்பியோ, தங்கையோ இருப்பதினால் அது குறித்த பக்குவம் முதல் குழந்தைக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அதற்காகவே முதல் குழந்தை பெற்றெடுப்பதற்கும் இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதற்கும் போதிய கால இடைவெளி அவசியம்.
 4. இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதற்கு முன் போதிய அளவு பணம் வைத்து கொள்ள வேண்டும்.ஏனென்றால், இரண்டாவது குழந்தை எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம்.இரண்டாவது குழந்தை  சுய பிரசவமாகவோ, அறுவை சிகிச்சையிலோ பிறக்க வாய்ப்புகள் அதிகம்.
 5. இரண்டாவது குழந்தை பெற தயாராகும் முன் வீட்டில் பெரியவர்களின் துணையை உறுதி படுத்த வேண்டும். ஏனெனில், இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் போது பெரியவர்களின் ஆலோசனையும், அறிவுரையும்,ஆதரவும் முக்கியம்.
 6. இரண்டாவது குழந்தைக்கு தேவையான பொருட்களை முடிந்த வரை முன்னரே வாங்கி வைத்து விடலாம். முதல் குழந்தைக்கு இரண்டாவது குழந்தைக்கு என தேவையான பொருட்களை தனி தனியாக வைக்க வேண்டும்.
 7. இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருக்கும் போது முதல் குழந்தையானது ஏங்க தொடங்கும். காரணம், எங்கே தன் தாய், தந்தையின் பாசம் தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ! என பயம் கொள்வர்.இந்த உணர்வில் இருந்து முதல் குழந்தையை வெளி கொண்டு வர அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் என்றும் நீ எனக்கு முக்கியமே என முதல் குழந்தையை உணர வைக்க வேண்டும்.
 8. பள்ளி செல்லும் முதல் குழந்தைக்கு கர்ப்பிணி தாய்மார்கள் உணவு எடுத்து சென்று ஊட்டி விடுவதால்,  முதல் குழந்தைக்கு தாயின் மீதும் பிறக்க இருக்கும் சிசுவின் மீதும் பாசம் அதிகரிக்கும்.இது கர்ப்பிணி  பெண்களுக்கு ஒரு உடற்பயிற்சி போல இருக்கும்.
 9. முதல் குழந்தைக்கு பிறக்க இருக்கும் இரண்டாவது குழந்தை பற்றிய ஆர்வத்தை அதிகரிக்க செய்வது பெற்றோர்களின் கடமை. இது உன் குட்டி தங்கை, இது உன் குட்டி தம்பி என அடிக்கடி முதல் குழந்தையிடம் சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.
 10. முதல் குழந்தைக்கு இரண்டாவது குழந்தைக்கு அண்ணனாவதும், அக்கா ஆவதும் எவ்வளவு பெரிய சந்தோஷம் என்ற புரிதலை அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.

இது தவிர கர்ப்பிணிப் பெண்கள் தங்களது  முதல் குழந்தைக்கு இராமாயணம், மகாபாரதம் போன்ற நீதி கதைகளை சொல்லி அதில் இரத்த சொந்தங்களின் உறவு எத்தனை முக்கியமாக பார்க்கப்பட்டு உள்ளது என்பதை குழந்தைகளுக்கு புரியும் வகையில் கதைகளாக விளக்கி சொல்ல வேண்டும்.நாம் இதுவரை பார்த்த கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனைகள் யாவும் முத்தாய்ப்பாக பெற்ற முதல் குழந்தைக்கு இரண்டாவது குட்டி செல்ல குழந்தையின் வருகை இரட்டிப்பு மகிழ்ச்சியை பரிசாய் வழங்கும்.

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Jun 21, 2019

x

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}