• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

ப்ளே ஸ்கூல்கள் திறப்பு: உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு எவ்வாறு தயார்ப்படுத்துவது?

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 16, 2022

தமிழகத்தில் நர்சரி மற்றும் ப்ளே ஸ்கூல்கள் 2 ஆண்டுகளுக்கும்  மேலாக மூடியிருந்தது. பிப்ரவரி 16, 2022 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து நர்சரி மற்றும் ஸ்கூல்களும் திறக்கலாம்  என்று தமிழக அரசு அனுமதித்துள்ளது. மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நிலைமையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இப்போது மாநிலத்தில் கோவிட்-19 வழக்குகள் குறைந்து வருவதால், படிப்படியாக பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 1, 2022 முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு சொல்லலம்.

நர்சரி மற்றும் ப்ளே ஸ்கூல்கள் திறக்க உள்ள நிலையில் பெற்றோர்களுக்கு என்னென்ன கேள்விகள், கவலைகள் வரும். அதற்கான பதில்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நானும் ஒரு பெற்றோராக என் குழந்தையை இப்போது இருக்கும் சூழ்நிலையில் எப்படி பள்ளிக்கு அனுப்புவது? எப்படி தயார்ப்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். நான் என் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது எந்தெந்த விஷயங்களில் ஆதரவாக இருக்க முடியும் என்று திட்டமிடும் போது எனக்கு தோன்றிய சவால்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

முதலில் என்னென்ன சவால்கள் உண்டு என்பதை பட்டியலிடுவோம்:

 • நர்சரி மற்றும் ப்ளே ஸ்கூல்களுக்கு செல்லும் என் குழந்தையை எந்தெந்த விஷயங்களில் தயார்ப்படுத்த வேண்டும் (உதாரணத்திற்கு உணவு, டாய்லெட் பயிற்சி, தேவைகளை கேட்பது, அம்மா அப்பாவை பிரிந்து புது சூழலுக்கு எப்படி பழகுவார்கள்)
 • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (அடிக்கடி கை கழுவுதல், உடல் ரீதியான தூரம் போன்றவை) பின்பற்ற என் குழந்தையை நான் எப்படி ஊக்குவிப்பது?
 • லாக்டவுனின் போது என் குழந்தையின் தூக்க முறைகள் மாறிவிட்டன, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது அவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று நான் கவலைப்படுகிறேன். நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்?
 • என் குழந்தை மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது அவரிடமிருந்து விலகி இருப்பதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். என்னை அமைதிப்படுத்த  நான் என்ன செய்ய வேண்டும்?
 • கல்வி கற்பதற்கு எப்படி தயார்ப்படுத்தலாம்? (உதாரணத்திற்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கவனிப்பது, எழுத்து, வாசிப்புக்கு தயார்ப்படுத்துதல், கேள்வி கேட்பது, பதில் சொல்வது)
 • உடல் ஆரோக்கியம், கற்றல், உணர்ச்சிகள் மற்றும் நடத்தை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நர்சரி மற்றும் ப்ரீ-ஸ்கூலுக்கு செல்ல என் குழந்தையை நான் எவ்வாறு தயார்படுத்த வேண்டும்:

பள்ளிக்கு செல்வது உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய மைல்கல். இந்த மாற்றம் குழந்தைக்கு பெரிய மாற்றம் தான். ஆனால் குழந்தைகள் முறையான கற்றல் பயணத்தை தொடங்குவதும் உற்சாகமானது. இந்த மாற்றத்தை சீராகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற உதவும் 12 வழிகள் இங்கே உள்ளன.

உங்கள் குழந்தையை பள்ளிக்கு தயார்படுத்துவதற்கான வழிகள்

பெரும்பாலான குழந்தைகள் புதிய இடத்திற்கு செல்வதையும், இதுவரை பார்த்திராத மக்களை சந்திப்பதையும் நினைத்து கவலைப்படுகிறார்கள். பள்ளியைப் பற்றிய உற்சாகமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையை வளர்ப்பதன் மூலம் குழந்தையிடம் பள்ளி குறித்த கவலையை போக்கலாம்.

1. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற  குழந்தைக்கு எப்படி ஊக்குவிப்பது?

கோவிட்-19 மற்றும் பிற நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, சோப்புடன் அடிக்கடி கை கழுவுவதை ஊக்குவிப்பதாகும். பள்ளியில் குழந்தைகள் தங்கள் வகுப்பறைகளுக்கு அருகில் கை கழுவ  ஊக்கப்படுத்துங்கள். இது ஒரு பயமுறுத்தும் உரையாடலாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  கற்றலை வேடிக்கையாக மாற்ற, அவர்களுக்குப் பிடித்த பாடலுடன் சேர்ந்து பாடுங்கள் அல்லது ஒன்றாக நடனமாடுங்கள்.

இருமல் அல்லது தும்மலை அவர்களின் முழங்கையால் மறைப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு நீங்கள் காட்டலாம், மேலும் அவர்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருப்பது போல் உணரத் தொடங்கினால் வகுப்பு ஆசியரிடம்  சொல்ல சொல்லுங்கள்.

2. குழந்தைகள் கற்றலில் பின் தங்கியிருப்பதாக உணர்ந்தால் என்ன செய்வது?

கொரோனா காரணமாக குழந்தைகள் 3 முதல் 5 வயது வரை ) அதிகமாக வீட்டிலிருந்தே படித்தார்கள், சில குழந்தைகள் வகுப்பில் மற்ற குழந்தைகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைப் பற்றி கவலைப்படுகிறிர்களா!

கவலை வேண்டாம்.. பல குழந்தைகள் லாக்டவுன் காலத்தில் தொடர்ந்து கற்க சிரமப்படுகின்றனர். அவர்கள் பள்ளிக்குத் திரும்புகையில், இதை எதிர்கொள்வதைப் பற்றி அவர்கள் பயப்படலாம், குறிப்பாக மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில். இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் அவர்களின் கற்றல் விளைவுகளை விட புதிய இயல்புநிலைக்கு அவர்களை மாற்றுவது முக்கியம். குழந்தைகள் நேசிக்கப்படுவதையும் ஆதரவையும் உணரும்போது அவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்வார்கள். உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் கலந்து பேசி உங்கள் குழந்தையின் கற்றல் திறன் சிறப்பாக அமைய உதவலாம்.

3. அட்டவணையை விளக்குங்கள்

பள்ளியின் முதல் நாளுக்கு எப்படி தயாராவது என்பதை அறிய, பள்ளி நாள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் குழந்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளியின் வழக்கமான அட்டவணையைப் பற்றி உங்கள் பிள்ளைக்கு விளக்கவும். உங்கள் குழந்தையுடன் வகுப்பில் யார் இருப்பார்கள், நீ என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்பார்கள் என்று குழந்தையிடம் சொல்லுங்கள். உங்கள் பிள்ளை உட்கார்ந்து அறிவுரைகளை கேட்பதைப் பழக்கப்படுத்துங்கள். இது வகுப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து ஆசிரியரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதற்கு தயார்ப்படுத்தும்.

4. வீட்டில் பள்ளியில் இருப்பது போல் ரோல் ப்ளே விளையாடுங்கள்:

உங்கள் குழந்தை வகுப்புகளுக்குள் இருக்க பழகுவதற்கு உதவ, ரோல் ப்ளே விளையாட்டைப் பயன்படுத்தவும். கதை நேரம், ரைம்ஸ் பாடுதல் மற்றும் தூக்க நேரம் போன்ற பல்வேறு நடைமுறைகளை மாறி மாறி நடிக்கவும். நீங்கள் பாத்திரங்களை மாற்றி உங்கள் குழந்தையை ஆசிரியராக அனுமதிக்கலாம். இது உங்கள் பிள்ளைக்கு பள்ளியை ஒரு வேடிக்கையான இடமாக நினைக்கவும், முதல் நாள் கவலையை குறைக்கவும் உதவும்.

5. உங்கள் குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி கொடுக்கவும்:

பள்ளியில் குழந்தைகள் தாங்களாகவே கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தையை வீட்டிலேயே பழக்குங்கள்.  டாய்லெட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்,  கதவு பூட்டுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை கற்றுக் கொடுங்கள். டாய்லெட்டை விட்டு வெளியேறும் முன் உடை  சரியாக இருக்கிறதா என்று  உறுதி செய்ய சொல்லுங்கள். மேலும், கழிப்பறையை கழுவவும், பயன்பாட்டிற்குப் பிறகு கைகளை கழுவவும் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

6. தூக்க வழக்கத்தை முறைப்படுத்தவும்

குழந்தைகளின் தூக்கப் பழக்கம் மற்றும் தூக்கத்தின் தரம் ஆகியவை லாக்டவுனின் போது மாறியிருக்கலாம். இதனால் பள்ளி வழக்கத்திற்கு திரும்புவது கடினமாக இருக்கலாம். பள்ளி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, உங்கள் குழந்தையை சீக்கிரம் தூங்க செய்து, சீக்கிரம் எழுந்திருக்க பயிற்சி அளிக்கவும். இந்த வழியில், குழந்தையின் தூக்கம் வழக்கமானதாக மாறும், மேலும் பள்ளிக்குச் செல்லும் போது எரிச்சல், வம்பு மற்றும் சோர்வு  இல்லாமல் இருப்பார்கள்.

7. உங்கள் குழந்தைக்கு தங்களுடைய விஷயங்களை கவனித்துக் கொள்ள பயிற்சி அளிக்கவும்

உங்கள் குழந்தை தனது உடைமைகளை கவனித்துக்கொள்வது முக்கியம் என்பதை புரிய வைக்கவும். புத்தகங்கள், பென்சில்கள், அழிப்பான்கள், கிரேயான்கள் போன்றவற்றைப் பயன்படுத்திய பிறகு மீண்டும் அவளது பையில் வைக்க கற்றுக்கொடுங்கள். மேலும், ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிறகு, பாக்ஸை எப்படி பேக் செய்து பைக்குள் வைப்பது என்று கற்றுக் கொடுங்கள்.

பள்ளிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் லேபிளிடுவதற்கு உங்கள் குழந்தை உங்களுக்கு உதவட்டும். இதன் மூலம், குழந்தை தனது பெயரை அச்சில் அடையாளம் காணப்பழகிக் கொள்ளும், மேலும் எந்தப் பொருட்கள் தனக்கு சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளும்.

8. கல்வி கற்க பயிற்றுவிக்கவும்

உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கு செல்லும் முன் கிடைத்த அனுபவம் வேறு. அவர்கள் வீட்டீல் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை தெரிந்து கொள்வது  சவாலாக இருக்கலாம்.

 • பள்ளி தொடங்கும் முன், உங்கள் குழந்தையின் பெயரைப் படிக்கவும் எழுதவும் ஊக்குவிக்கவும்.
 • எண்கள், வண்ணங்கள் மற்றும் எழுத்துக்களின் அடிப்படைகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
 • விரல் ஓவியம் அல்லது மாடலிங் களிமண்ணைப் பயன்படுத்தி வடிவங்களை உருவாக்குவது போன்ற கலை வேலைகளை உங்கள் பிள்ளை செய்யட்டும்.
 • இது உங்கள் பிள்ளைக்கு எழுதுவதற்கு தேவையான சிறந்த மோட்டார் திறன்களை வளர்க்க உதவும்.
 • ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையுடன் புத்தகம் படியுங்கள். புத்தகங்களில் அனுபவம் உள்ள குழந்தைகள் படிக்க கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும். உங்கள் பிள்ளைக்கு வாசிப்பது கேட்கும் திறனை வளர்க்க உதவுகிறது.
 • பள்ளியில் சேர்க்கை நேர்காணலுக்கு செல்லும்போது கூட இது அவர்களை தயார்படுத்தும்.
 • உங்கள் குழந்தையுடன் கேம்களை விளையாடுங்கள், அதில் அறிவுரைகளை கேட்பது மற்றும் அவள் பேசுவதற்கு காத்திருக்கிறது. இது பள்ளியில் பின்வரும் வழிமுறைகளுக்கு அவர்களை தயார்படுத்தும்.

9. உங்கள் குழந்தை எப்படி உணர்கிறார்கள் என்று கேளுங்கள்

பள்ளிக்குச் செல்வதைப் பற்றி உங்கள் பிள்ளை எப்படி உணர்கிறாள் என்று கேளுங்கள். பயம் அல்லது கவலைகளை நிராகரிக்க வேண்டாம். பள்ளியைப் பற்றிய உரையாடல்கள் இருக்கும்போது உங்கள் குழந்தையின் எதிர்வினையை குறித்துக்கொள்ளவும். உங்கள் குழந்தை உற்சாகமாக அல்லது ஆர்வத்துடன் செயல்படுகிறதா என்பதைப் பார்க்கவும். உங்கள் குழந்தையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும்.  

10. பாஸிட்டிவ்வான அனுபவங்களை குறிப்பிட்டு சொல்லுங்கள்

பள்ளியைப் பற்றி மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான முறையில் சுட்டிக்காட்டுங்கள். புதிய நண்பர்களை உருவாக்குவது மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது எப்படி மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு பள்ளியில் எப்படி வேடிக்கையாக இருந்தது என்பதைப் பற்றிய கதைகளையும் உங்கள் குழந்தைக்கு சொல்லலாம்.

11. குட்-பை திட்டத்தை வைத்திருங்கள்

எல்லா பெற்றோருக்கும் மிக பெரிய கவலையாக இருப்பது முதல் முறை அவர்களின் குழந்தையை பள்ளிக்குள் விட்டு விடைபெறும் போது தோன்றும் உணர்வு. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கடினமாக இருக்கலாம்! தயவு செய்து உங்கள் குழந்தையைப் பள்ளியில் விட்டு செல்லும்போது, ​​விடைபெறாமல் வெளியே பதுங்கிச் செல்லாதீர்கள், ஏனெனில் இது உங்கள் குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

அதற்கு பதிலாக, அந்த நேரம் வரும்போது, ​​உங்கள் பிரிவை விரைவாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க முயற்சிக்கவும் - விரைவில் நீங்கள் ஒருவரையொருவர் சந்திப்பீர்கள் என்று உங்கள் குழந்தைக்கு உறுதியளிக்கவும். உங்கள் குழந்தைக்கு ஆறுதல் அளிக்க உதவும் ஒரு சிறப்பு வழக்கத்தை நீங்கள் செய்யலாம்: ஒன்றாக ஒரு பாடலைப் பாடுங்கள் அல்லது சிறப்பு கைகுலுக்கலை செய்து குட் -பை சொல்லுங்கள்

12. பெற்றோர்களின்  மன அழுத்தத்தை கையாள்வதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன.

குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உணர்ச்சிகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள். எனவே உங்கள் தனிப்பட்ட மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம்.

 • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும். சரியான உணவு, தரமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்யவும்.
 • உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருங்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள் (குறிப்பாக உங்கள் குழந்தை பள்ளியில் இருக்கும் நேரங்களில்).
 • உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட நீங்கள் நம்பும் நபர்களுடன் பேசுங்கள். உங்களால் முடிந்தால், தினமும் அவர்களுடன் பேசுங்கள்.
 • உங்கள் உணர்ச்சிகளை சமாளிக்க புகைபிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள் அல்லது பிற மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்.
 • கோவிட்-19 பற்றிய உண்மை தகவல்கலை சரியான இடத்திலிருந்து அறிந்து கொள்ளங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும் தகவலை சேகரிக்கவும்.
 • உள்ளூர் அல்லது மாநில பொது சுகாதார நிறுவனம், WHO, UN ஏஜென்சிகள் போன்ற நீங்கள் நம்பக்கூடிய நம்பகமான தகவல் இனைப்புகளைக் கண்டறியவும்.
 • கடந்த காலத்தில் நீங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்திய திறன்களை வாழ்க்கை சிக்கல்களை கையாள, இந்த சவாலான நேரத்தை சமாளிக்க பயன்படுத்தவும்
 • தேவைப்பட்டால் மனநல ஆலோசனைக்கு நீங்கள் எங்கு உதவி பெறலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் முதல் முறையாக பள்ளிக்குச் செல்வதால் பதற்றமடையும். சில குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபோபியா கூட இருக்கும். பெற்றோரின் சிறிய உதவியால், குழந்தைகள் இந்த பயத்தைப் போக்கலாம் மற்றும் கற்றலை வேடிக்கையாக மாற்றலாம். பெரியவர்கள் அல்லது மற்றொரு குழந்தை அசௌகரியத்தை ஏற்படுத்தும் போது விஷயங்களை எவ்வாறு கையாள்வது என்பதை உங்கள் குழந்தைக்கு விளக்குங்கள்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}