• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து

திட உணவு சாப்பிடும் குழந்தைக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுமுறைகள்

Shreiya Aggarwal Gupta
0 முதல் 1 வயது

Shreiya Aggarwal Gupta ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 27, 2020

புதிய பெற்றோர்களாகிய நீங்கள்,பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்தை பற்றி அனைத்து விதமான அறிவுரைகளுக்கும் ஆளாகியிருப்பீர்கள்.ஆனால், எளிமையான சில வழிமுறைகள்-மற்றும் சோர்ந்த நிபுணர்களின் அறிவுரைகளை கருதில் கொண்டு- நீங்கள் உங்கள் குழந்தையின் வளமிக்க உடல்நலத்திற்கான ஆரம்பத்தை உறுதிபடுத்திக்கொள்ளலாம்.

பிறப்பு -வாழ்க்கையின் முதல் வருடம்-வளர்ச்சிக்கும் உடலில் ஏற்படப்போகும் மாற்றங்களுக்கும் முதன்மையான காலம்.

நாம் குழந்தைப்பருவத்தில் என்ன உணவு உட்கொள்ளகிறோமோ அதுவே நமது நீண்டகால உடலெடை,உடல் நலம்,எதிர்ப்பு சக்தி,வயதுக்கேற்ற மாற்றங்கள் போன்றவற்றை தீர்மானிக்கும்.

முதல் 6 மாதம்

தாய்ப்பலூட்டலே தாய்க்கும் குழந்தைக்கும் நான்மை பயக்கும்.

பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால்தான் அத்தியாவசிய உணவுப்பொருள்.

தாய்ப்பாலே தகுந்த ஊட்டச்சத்து மிக்க கலவை ஆகும்.அதில்  முழுக்க முழுக்க எதிர்புரதம்,நுண்ணுயிர் எதிர்ப்பி,நொதிகள் மற்றும் கொழுப்பு ஆசிடுகள் இருக்கின்றன(அவை மூளை வளர்ச்சிக்கு உதவுவன).

தாய்ப்பால் குழந்தையின்   சீரான வளர்ச்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்திக்கும் (சுவாச நோய் மற்றும் இரைப்பை நோய்) ,தற்காலத்திலும் பிற்காலத்திலும் உதவக்கூடியது. குழந்தை பிற்காலத்தில்  நல்ல உணவை தேர்ந்தெடுக்க இதுவே வழிவகுக்கும்.

தாய்ப்பாலில் நன்மை பயக்கும் ஆர்மோன்களான ஆக்சிடாஸின் மற்றும் ப்ரொலக்டின் வெளிவருகின்றன.இதன்மூலமாக தாயின் உடல் எடை சுலபமாக குறைகிறது.மேலும்,அவளது குழந்தையுடன் கூடிய பிணைப்பு அதிகரிக்கிறது.

மதங்கள் 6-12

திட உணவை அறிமுகப்படுத்துங்கள்

4-6 மாதங்கள் வரை குழந்தைகளால் சரிவர செரிக்க இயலாது.குழந்தைகளின் உடல் எடை பிறந்தபொழுது இருந்ததைவிட இரட்டிப்பாகும் பொழுது  திடஉணவை ஏற்றுக்கொள்ள தயாராவர். இது 6 மாதத்திற்குள் நடக்கும்.

முதலில்,அவர்களுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திடஉணவை வழங்குங்கள்(தாய்ப்பாலுக்கு பதிலாக அல்ல).முதன் முதலில் அளிக்கும் திட உணவு சற்றே நீர்மமாக இருத்தல் நல்லது.

புதுஉணவை அறிமுகப்படுத்த சிறிது காலாவகாசம் எடுத்துக்கொள்ளலாம்

அவசரப்பட வேண்டாம்.ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒரு புது உணவை அளியுங்கள். இதனால் குழந்தையின் எதிர்விளைவை காண அவகாசம் கிடைக்கும்.ஏதாவது எதிர்மறையாக காணப்பட்டால்,அடுத்த புது உணவை அளிக்க 1-3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

திடவுணவுக்கான கால வரிசை:

1. அரிசிச்சோறு

முதல் தாய்ப்பாலுடன் சாதத்தை அளிக்கலாம்.இது அலர்ஜி ஏற்படாமல் தடுக்க கூடியது .இது தானிய வகைகளைவிட சிறந்தது(நிரூபிக்கப்படவில்லை).மேலும்,பருப்புச்சோறு மிக நல்லது.முயற்சித்து பாருங்கள்.

2. காய்கறிகள்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை அளிக்க வேண்டும். பழங்களை போல் அவை இனிக்க கூடாது. இனிப்பான உருளைக்கிழங்கு, கிழங்குவகை,பழச்சாறு, கேரெட் போன்றன சமைப்பதற்கும் மசிப்பதற்கும் சுலபமானதாக இருக்கும்.

3. பழங்கள்

காய்கறிகளுக்கு பின் பழங்களை அறிமுகப்படுத்துங்கள்.முதலில் பழங்களை கொடுத்தால், குழந்தைகள் இனிப்பு சுவையையே அனைத்து உணவிலும் நாடுவார்கள்.

 • தாய்ப்பாலுடன் மசித்த வாழைப்பழம்

 • வேகவைத்த பழங்கள்(ஆப்பிள்,பேரிக்காய் போன்றன)

 • இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

4. புரதம் அதிகமுள்ள உணவுவகை

குழந்தைகளுக்கு புரதம் அதிகம் உள்ள உணவான பட்டாணி,பீன்ஸ்,அவரை வகைகள் போன்றவற்றை நன்கு வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம்.இதனால் அவர்களின் உடல்நலம் சீராகும். அதிக எதிர்ப்பு சக்தி பெறுவர்.

12 மாதங்களுக்கு பிறகு

கவனமாக உணவை வழங்குங்கள்

மீன்வகைகளை குழந்தைகள் எளிதில் ஏற்றாலும்,சிறிது காலத்திற்கு பின் வழங்குவதே சாலச்சிறந்தது.'மட்டி' போன்ற மீன்வகை பொதுவான அலர்ஜி உள்ள உணவாகும்.

மேலும், முட்டை, வேர்க்கடலை,பசும்பால்,கோதுமை, சோயா போன்றவையும் அலர்ஜி ஆகும்.

உருளைக்கிழங்கு,தக்காளி,மிளகு,போன்றவற்றை கவனத்துடன் கையாளவேண்டும்.இதை குழந்தையின் உணவில் சேர்த்த பிறகு ,அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனரா என்று கண்காணிக்க வேண்டும்.

புதுஉணவை குழந்தை மிகுந்த பசியில் இருக்கும்பொழுது அறிமுகப்படுத்தலாம்.உதாரணமாக,காலை உணவில் அவற்றை அளிப்பதே புத்திசாலித்தனமாகும்.

இனிப்பை சிறிதளவு சேர்க்கலாம்

மனிதர்கள் இயற்கையாகவே இனிப்பு பிரியர்கள் ஆவர்.எனவே,இனிப்பு உருளை மற்றும் பழவகைகளை அளியுங்கள்(இனிப்பு குறைவாக).

பதனிடப்பட்ட சர்க்கரையை தவிர்க்கவும்

பழச்சாறு மற்றும் பழங்களை(பதனிடப்பட்ட சர்க்கரை உள்ளவற்றை) தவிர்க்கவும்.இது முதல் வருடம் ஆகையால்,தேனை தவிர்ப்பது நல்லது.

முழு திட உணவுவகைகள்

குழந்தைகள் நன்றாக உண்ண கூடியவர்கள் ஆவர். எனவே, அவர்களுக்குக்கு எவ்வளவு உண்ண வேண்டும் என்பது நன்கு தெரியும். எனவே,அவர்களை வற்புறுத்தி உணவளித்தல் கூடாது.அவர்கள் தங்கள் பசியின் அளவிற்கேற்ப உணவருந்துவார்கள்.மேலும், அவர்களுக்கு பதனிடப்பட்ட எவ்வகை உணவையும் அளிக்க கூடாது.

குழந்தைகளுக்கு திட உணவானது செரிமானம் ஆக சில கால தாமதம் ஆகும். இதனால் செரிக்காத உணவானது அவர்களின் மலத்தில் காணப்படும். அதனால் கவலை கொள்ள வேண்டாம்.

உடல் எடை

ஒவ்வொரு குழந்தையும்  ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். சில குழந்தை எளிதில் உடல் எடை அதிகரிக்கும். சில குழந்தைகள் மெதுவாக உடல் எடையை அதிகரித்துக்கொள்ளும்.குழந்தைகள் அதன் பசி அளவினை பொறுத்து உணவு உட்கொள்ளும்.நாளுக்கு நாள் அதன் பசி அளவு மாறும்.ஒரு நாள் ,மிகுந்த பசியில் இருக்கும், ஒரு நாள் மசித்த வாழைப்பழம் கூட அதற்கு பிடிக்காது. எனவே,இதனால் கவலை கொள்ள வேண்டாம். மேலும், குழந்தையின் உடல் எடையை அடிக்கடி சரிபார்த்துக்கொள்வது நல்லது.மருத்துவர்களிடம் அழைத்து செல்லும் பொழுது உடல் எடையை அறிந்து கொள்ளலாம்.

குழந்தை ஒரு உணவை விரும்பவில்லை அல்லது அதை மறுத்தால்,அதை தவிர்த்து விடுவதே சாலச்சிறந்தது. அது ஆரோக்கியமான உணவாக இருந்தால்,சிறிது காலத்திற்கு பின் மீண்டும் அதை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள்.குழந்தை மீது, உங்களை விட அதிக அக்கறை எடுத் கொள்ள, வேறு யாரும் இல்லை.

சரியான நேரத்தில் தடுப்பூசி விழிப்புணர்வு

தடுப்பூசி விழிப்புணர்வு என்பது GSK முன்னெடுத்த சிறந்த முயற்சியாகும்.

குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தடுப்பூசி ஒரு முக்கிய பங்க வகிக்கின்றது. தடுப்பூசி மூலம் உங்கள் குழந்தையை பாதுகாக்கக்கூடிய பல்வேறு தீவிர நோய்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தடுப்பூசி மூலம் தடுக்கப்படக்கூடிய நோய்களின் பட்டியல் கீழே:

• தட்டம்மை

• சிக்கன் பாக்ஸ்

• போலியோ

• டிப்தீரியா

• மெனிங்கோகோகல் நோய்

• ஹெபடைடிஸ் ஏ

•ஹெபடைடிஸ் B

• ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை B (Hib)

• ப்ளூ

• ரோட்டா வைரஸ்

• பெர்டுசிஸ் (கக்குவான் இருமல்)

• டெட்டனஸ்

• ரூபெல்லா

• சளி

• HPV (மனித பாப்பிலோமா வைரஸ்)

சரியான நேரத்தில் தடுப்பூசி உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது மற்றும் பல்வேறு தடுப்பூசி தடுக்கப்படக்கூடிய நோய்களால் நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனையின்படி, உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றி தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும், தடுப்பூசி அட்டை உங்கள் குழந்தையின் ‘உடல் நலத்திற்கான பாஸ்போர்ட்’ என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Disclaimer:

A public awareness initiative by GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India.

The mere appearance of this article on this website/page does not constitute an endorsement by GSK or its affiliates of such website/page or any other articles, images or videos, if any, appearing on this website/page. Information appearing in this material is for general awareness only and does not constitute any medical advice. Please consult your Doctor for medical advice, any question or concern you may have regarding your condition. Please consult your Pediatrician for the complete list of vaccine preventable diseases and for the complete vaccination schedule for each disease.

CL codes: NP-IN-NA-OGM-200001, DOP Dec 2021

 • 7
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Apr 14, 2019

என் குழந்தை 8 நாளைக்கு ஒரு வாட்டி தான் மலம் கழிக்கும் 4 மருத்துவரை அணுகிவிட்டேன் தாய் பால் குடிச்சா அப்படி தான் இருக்கும்னு சொல்லரங்க சார் எனக்கு பயமாக இருக்கிறது சார்

 • Reply | 1 Reply
 • அறிக்கை

| May 08, 2019

நான் சொல்வதை கணடிப்பாக செய்யுங்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் மலம் கழிப்பார். சுடு தண்ணீர் முடிந்த அளவு சூடாக கொடுங்கள். குழந்தை தாங்கும் அளவிற்கு.. கொடுத்து பார்த்து commentசெய்யுங்கள்

 • Reply
 • அறிக்கை

| May 14, 2019

நன்றி

 • Reply
 • அறிக்கை

| May 17, 2019

hi! my baby ku ipo 11months ahuthu boy baby but inum averuku pallu varelle. athula ethum pblmahuma? enaku romba yoseneya iruku ithanale plz rply me

 • Reply | 1 Reply
 • அறிக்கை

| Jun 14, 2019

7 month baby food item

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}