• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து

ஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைகளுக்கான உணவுகள்

Canisha Kapoor
1 முதல் 3 வயது

Canisha Kapoor ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 04, 2018

ஒரு வயதைப் பூர்த்தியடைந்த குழந்தையானது தவழும் நிலையில் இருந்து தத்து நடைப் போடும் வளர்பருவத்தை நோக்கிய நிலையில் இருக்கும். இவ்வேளையில் குழந்தையின் உடல் எடையானது முன்பைவிட மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். ஒன்று முதல் மூன்று வயதிலான காலமே குழந்தையின் ஆரோக்கியத்திற்கான அடித்தளமாகும். இக்காலங்களில் மசித்த உணவுகளின்றி குடும்ப உறுப்பினர்கள் உண்ணக்கூடிய உணவுவகைகள் அனைத்தும் குழந்தையும் உண்ணலாம். இக்காலக்கட்டத்தில் தரப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால் பெறப்படும் சக்தியானது அவர்களின் வாழ்நாள் வரை நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைகளுக்கான உணவுகள்

 • ஆரோக்கியம் மிகுந்த குழந்தைகளுக்கான சூப்களில் ஒன்று. பருப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளின் சாறினால் தயாரிக்கப்பட்ட “பருப்பு மற்றும் காய்கறி சூப்” ஆகும்

 • அரிசி தண்ணீர் மட்டும் பருகின சிறு குழந்தைகளுக்கு, அடுத்ததாக நெய் விட்டு செய்த “மசித்த சோறு” உணவிலிருந்து ஆரம்பிக்கலாம்.

இது போன்ற உணவுகளைத் தயாரிக்கும் முறையைக் காணலாம்.

பருப்பு மற்றும் காய்கறி சூப்

தேவையான பொருள்கள்:

1 டேபிள்ஸ்பூன் பாசிப்பயிறு ( கழுவி மற்றும் தண்ணீர் வடிக்கப்பட்டது )

¼ கப் அரிந்த தக்காளி

¼ கப் அரிந்த முட்டைக்கோஸ்

1 டேபிள்ஸ்பூன் அரிந்த பசலைக்கீரை

தேவையான அளவு உப்பு

செய்முறை:

 1. அனைத்து பொருள்களையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2-3 விசில் வர வேக வைத்து விசில் அடங்கின பிறகு வேறு கப்பிற்கு மாற்றவும்

 2. பின் மிக்சியில் இதனை மைய அரைக்கவும்.

 3. பின் வாணலியில் ஊற்றி உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

 4. ஆறிய பின் மிதமான சூட்டில் வழங்கவும்.

வறுக்கப்பட்ட வாழைப்பழம்

தேவையான பொருட்கள் :

2 வாழைப்பழம்

1 டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்

எண்ணெய் (வறுக்க)

செய்முறை :

 1. வாழைப்பழத்தை உரித்து அரித்து கொள்ளவும்

 2. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வாழைப்பழத்தை வறுக்கவும்

 3. நெய் மேலாக தெளிக்கலாம்.

 4. பின் ஏலக்காய் பவுடரை தெளிக்கவும்

சோறு மசியல்

தேவையான பொருட்கள் :

2 டேபிள்ஸ்பூன் அரிசி ( கழுவி , தண்ணீர் வடிக்கப்பட்டது )

½ டீஸ்பூன் நெய்

செய்முறை :

 1. ¾ கப் தண்ணீர் சேர்த்து அரிசியினைக் குக்கரில் இட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்

 2. விசில் அடங்கிய பின், நெய் விட்டு, மத்து கொண்டு நன்கு மசிக்கவும்.

 3. மிதமான சூட்டில் வழங்கவும்.

வெல்ல அவல்

தேவையான பொருட்கள் :

½ கப் அவல்

¼ கப் பொடிக்கப்பட்ட வெல்லம்

1 டீஸ்பூன் துருவிய தேங்காய்

சில உலர் திராட்சை

செய்முறை

 1. அவலை நீரில் கழுவி, பின் மிருதுவாக மாறும் வரை நீரில் ஊற வைக்கவும்.

 2. வாணலியில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நீரில் கரைந்து, குமிழிகள் வரும் போது அடுப்பினை அணைக்கவும்

 3. வடிகட்டி வழியே இக்காய்ச்சிய நீரை ஊற்றி வடிக்கட்டவும்

 4. வடிகட்டிய வெல்லப்பாகுவில் அவலைச் சேர்க்கவும்.நன்கு கலக்கவும்.

 5. துருவிய தேங்காய் மற்றும் சில உலர் திராட்சைகள் சேர்க்கவும்

 6. இது உங்கள் குழந்தைக்கான ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கலோரி அதிகம் உள்ள உணவாகும்.

ராகி கஞ்சி

தேவையான பொருள்கள் :

ராகி விதைகள் – 3-4 டேபிள்ஸ்பூன்

தண்ணீர்

பால் + வெல்லம் (அல்லது)  தயிர் + உப்பு

செய்முறை

 1. ராகி விதைகளைத் தண்ணீரில் கழுவி , வெயிலில் உலர்த்தவும். பின் இரவில் ஊற வைக்கவும்

 2. ஊறவைத்த ராகியை தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

 3. அரைத்த ராகியை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

 4. கெட்டியாகி வரும் போது, இனிப்பு சுவைக்கு  பால் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.

 5. மாறாக தயிர் மற்றும் உப்பு இரண்டையும் ஆறிய பின் சேர்த்து கிளறலாம்

தக்காளி மற்றும் கேரட் சூப்

தேவையான பொருட்கள் :

கேரட் – 1

தக்காளி – 1

வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 1 பல்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

சீரகம் – ¼ டீஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை

தண்ணீர் – 1.5 கப்

உப்பு

செய்முறை

 1. காய்கறிகளை நன்றாக கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

 2. குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, சீரகத்தைப் போடவும்

 3. வெங்காயம் மற்றும் பூண்டினை வதக்கவும்

 4. கேரட் மற்றும் தக்காளியினை சிறிது தண்ணீருடன் சேர்க்கவும்.மேலும் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்

 5. கொதிக்க விடவும்

 6. பின் குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்

 7. பின் இதனை மிக்ஸியில் அரைத்து பின் வடிக்கட்டவும்.

 8. மிதமான சூட்டில் வழங்கவும்

பருப்பு கறி

தேவையான பொருட்கள்

பாசிபயறு - ½ கப்

துவரம் பருப்பு - ½ கப்

மஞ்சள்  - 1 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

சீரகம்  - 1 டீஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

செய்முறை

 1. பருப்புகளை கழுவி , மஞ்சள் மற்றும் உப்பு சேர்க்கவும்

 2. குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

 3. நெய்யில் சீரகத்தை பொரிக்கவிட்டு , பின் வேக வைத்த பருப்பினை சேர்த்து கிளறவும்.

 4. மிதமான சூட்டில் வழங்கவும்

இவ்வாறு பல வகையான புரதம் , கார்ப்போஹைட்டிரேட் நிறைந்த உணவுவகைகள் உள்ளன. மிக எளிமையான செய்முறைகள் கொண்டவை. எனவே குழந்தைகளுக்கு 1-3 வயதிலான பருவத்தில் அளிக்கப்படும் உணவுகள் அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமான ஸ்திரத்தன்மையைத் தரும் என்பதை நினைவில் கொண்டு இக்காலக்கட்டத்தைக் கவனமாக கையாண்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

 • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Jan 29, 2019

Very useful app

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}