• உள்நுழை
 • |
 • பதிவு
குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

ஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தையை எவ்வாறு பராமரிப்பது?

Supriya Jaiswal
0 முதல் 1 வயது

Supriya Jaiswal ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 03, 2018

பெற்றோர்களாக இருப்பது, உங்கள் வாழ்க்கையிலே இதுவரை அனுபவித்திராத ஒரு அற்புதமான மற்றும் வெகுமானம் அளிக்க கூடிய ஒன்றாகும்.ஆனால்,அது மிக கடினமான பணியும் கூட.ஒவ்வொரு குழந்தைக்கும் என்று தனிப்பட்ட குணாம்சங்கள் மற்றும் விசேஷகுணம் இருக்கும்.அதுவே அவர்களை,அவர்களாக அறிமுகப்படுத்துகின்றன. எனவே,அதை கருத்தில் கொண்டு,அவர்களின் காலத்திற்கு காலம் மாறக்கூடிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.எங்களின், தகவல்கள் மிக்க இந்த கட்டுரையானது, உங்களுக்கு உதவ தயாராக உள்ளது.இது தாய்மார்களாகிய உங்களுக்கும்,உங்களுடைய குழந்தைகளுக்கும்  ஆரம்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்.

குழந்தையை எவ்வாறு குளிப்பாட்ட வேண்டும்?

 1. குழந்தையை குளிப்பாட்டுவது வெறும் தினசரி நடக்கும் சுகாதாரப்  பணி மட்டும் அல்ல.அது அதற்கும் மேல்.இது அவர்களுடன் விளையாடவும்,அவர்களுக்கென நேரம் ஒதுக்கவும் ஒரு சந்தர்ப்பமாகும்-இருவருக்குமே வேடிக்கையான நேரம்.உங்கள் குழந்தைகளுக்கு குளியல்நேரத்தை பழகிக்கொள்ள சில காலம் தேவைப்படும்.குழந்தைகள் குளியலை வெறுப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக,நிர்வாணமாக்கப்படுவது,உடம்பு முழுவதும் தண்ணீராக இருப்பது,சோப்புக்கைகள் போன்றன இதற்கு காரணமாகின்றன.
 2. குளியலை வேடிக்கை விளையாட்டாக்க எளிமையான வழிமுறைகள் இதோ:-
 3. முதல் இரண்டு வாரத்திற்கு சோப்போ, ஷாம்புவோ உபயோகிக்க வேண்டாம்.ஏனெனில், தண்ணீரே. போதுமானதாக இருக்கும்.ஒவ்வொரு வாரத்திற்கும் 2-3 முறை குளிப்பாட்டுங்கள்.
 4. குழந்தையின் தொப்பிள்கொடி உதிர்ந்து குணமாகும் வரை,கடற்பஞ்சு(ஸ்பான்ஜ்) கொண்டு கூட குளிப்பாட்டலாம்.
 5. குழந்தையின் மார்புப் பகுதியைச் சுற்றி ஈரமான கம்பளித்துணியையோ அல்லது வேறு துணியையோ போடலாம்.இது அவர்களை இதமாக வைத்துக்கொள்ள உதவி புரியும்.
 6. பேசுதல்,பாடுதல்,குழந்தையுடன் விளையாடுதல் - இவற்றை செய்தால் , அவர்கள் அந்நேரத்தை சிறப்பானதாகக் கருதுவர்.அதுபோன்ற தருணங்கள் உங்களை குழந்தையுடன் அதிகமாக பிணைத்துக்கொள்ள உதவும்.
 7. உங்கள் கையின் மணிக்கட்டை கொண்டு, குளிப்பாட்டப் போகும் நீரின் வெப்பநிலையை அறியலாம்.மணிகட்டே கையின் மற்ற பாகத்தைவிட அதிகமாக சூட்டை உணர வல்லது.நீங்கள் வெப்பமானியைக்கூட ( தர்மாமீட்டரை) பயன்படுத்தலாம்.
 8. குளிப்பாட்டப்போகும் நீரை முதலில் குளிர்ந்த நீரால் நிரப்பிக் கொண்டு,பிறகு அதில் வெதுவெதுப்பான நீரை நிரப்பலாம்.
 9. உங்கள் குழந்தையை நிலையாகப் பிடித்துக்கொள்ளவேண்டும்.அவர்களை மடியில் வைத்து குளிப்பாட்டும் பட்சத்தில், அவர்களின் தோள்களை உங்கள் கைகளால் தாங்கிக்கொண்டால், அவர்களின் தலையை உள்ளங்கையில் பிடித்துக்கொள்ள வசதியாக இருக்கும்.தொட்டியில் வைத்துக் குளிப்பாட்டினால்,அவர்களின் கைகளுக்கு கீழ் பிடித்துக்கொள்ளுங்கள்.
 10. மிருதுவாக குழந்தையின் உடலை மசாஜ் செய்தலே, அவர்களின் உடலின் அமைப்பையும், அவர்களது விலைமதிப்பற்ற முகபாவத்தையும் கண்டுகொள்ள உதவும்.

குழந்தையின் கற்றறியும் ஆற்றல்

இன்றைய வேகமான உலகத்தில் குழந்தையை கரையேற்றுவது கடினமான ஒன்றாகும்.குழந்தைகள் மீது எப்பொழுதுமே ஒரு அளவற்ற அழுத்தம் இருந்துகொண்டேயிருக்கும். எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் சிறிது கூடுதலாக செய்யவேண்டும்.பொம்மைகள் உங்களை குழந்தையை சாமர்த்தியமாக ஆக்குவன. ஆனால்,எவ்வாறு ஒருவயதிற்கு கீழுள்ள குழந்தை, அடிப்படைகளைத் (உட்காருவது,மெல்வது, நடப்பது) தாண்டி கற்றுக் கொள்ளும்?

 • பிறக்கும்பொழுது,உங்கள் குழந்தையால் குறைவாகவே பார்க்க,பேச ,உணர முடிகிறது.

 • இந்த புலனுணர்வு, தூண்டுதலைப் பொறுத்து வளர்ச்சியடையும்.

 • இந்த புலனுணர்வு,விழியுணர்வுத்தூண்டல்,செவித்திறன்தூண்டல் போன்றன சரியான அளவில் ,உரிய காலத்தில் கிடைக்கும் பொழுது வளர்ச்சியடையும்.

 • உதாரணமாக,பிறந்த குழந்தைக்கு நல்ல கண்பார்வையின் அளவைவிட சிறிது குறைவாகத்தான் இருக்கும். வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படும் பொழுதே விழித்திறன் அதிகரிக்கும்.விரைவில் முதிர்ந்து நிலையாகிவிடும்.மேலும்,வேகமாகவும் நுணுக்கமாகவும் பார்க்கும் சக்தியை பெற்றுவிடும்.

குழந்தையின் மூளைவளர்ச்சி

 • உங்கள் குழந்தைக்கு விழியுணர்வுத்தூண்டல்,செவித்திறன்தூண்டல் போன்றவற்றை உரிய காலகட்டத்திலும்,சரியான அளவிலும் கொடுக்கும் பொழுது மற்ற புலனுணர்வு பகுதிகள் தானாக வளர்ச்சியடையும்.

 • இது அவர்களுக்கு,வெளி உலகத்தை அறிய அதிக அளவில் உதவிபுரியும்.மேலும்,குடும்பத்துடன் கூடிய இடையீட்டை அதிகரிக்கும்.

 • உங்கள் குழந்தையின் உடல்நலம்,மகிழ்ச்சி, நல்ல நடத்தை போன்றன தூண்டுதலால் மேன்மையடைய வாய்ப்புள்ளது.

பேச்சுத்திறன்

ஆராய்ச்சியின் படி,உங்கள் குழந்தை 8 முதல் 20 மாதத்திற்குள் தெளிவாக உரையாடத் தொடங்கிவிடுவர்.ஏனெனில், அவர்கள் இத்தனை காலமும், சொற்கள்,அதன் பொருள் மற்றும் உச்சரிப்புகளை உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.

செய்யக்கூடியவை

 • குழந்தைக்கு செவிசாயுங்கள்.

 • அவர்கள் சொல்லவருவதை நீங்கள் கவனிப்பது போல் அவர்களுக்குத் தோன்றவேண்டும்.

 • அவர்களின் பதிலுக்கு காத்திருங்கள்.

 • அவர்கள் பேச முயற்சிப்பதை பாராட்டுங்கள்.

 • அவர்கள் தொடர்ந்து உச்சரிக்கும் சொல்லுக்கு அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள்.

செய்யக்கூடாதது

எவ்வாறு உணவு மற்றும் விளையாட்டு குழந்தையின் உறக்கத்தை பாதிக்கும்

குழந்தைக்கு செய்யவேண்டியது

உங்கள் குழந்தையிடம் சோர்வுக்கான அறிகுறியை கண்டால்,அவர்கள் ஏற்கனவே உணவு அருந்தியிருக்கும் பட்சத்தில்,உடனடியாக தூங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்கலாம்.

சோர்வுக்கான அறிகுறிகள்

சோர்வாக இருக்கும் பொழுது அழுவதும்,பசியின் பொழுது அழுவதும் ஒன்றல்ல.நீங்கள்,உங்கள் குழந்தை உற்சாகமாக தரையில் சில நிமிடங்கள் விளையாடிவிட்டு, பிறகு கொட்டாவி விடுவதை காணலாம்.

அறிகுறிகள்

 • உணவை மறுப்பது

 • கண்களை தேய்ப்பது

 • தரையில் இறக்கி விட்டால் அழுவது

 • போன்றன உறக்கத்தை உறுதிப்படுத்துகிறது

குழந்தைகளை அவர்கள் போக்கில் சிறிது காலத்திற்கு(ஆரம்ப காலத்தில்) வளர விடுங்கள். அதுவே அவர்களுக்கும் உங்களுக்கும் பல சமயங்களிலும்,விஷயங்களிலும் கைகொடுக்கும். உண்மையை சொன்னால் அவர்களிடம் இருந்துதான் நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின்  ,எதற்கும் அஞ்சா நெஞ்சம், சுறுசுறுப்பான நடத்தை போன்றன பெற்றோர்களாகிய நம்மிடம் அவ்வளவாக இல்லை என்றே கூறலாம்.

மேற்கண்ட அறிவுரைகளை நினைவில் கொண்டு, பெற்றோர்களாகிய நீங்கள் ,குழந்தையை பராமரிக்க வேண்டும்.அவர்களின் நல்வாழ்வே உங்களின் சந்தோஷம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 • 2
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Apr 14, 2019

My baby ku 6 months start aaguthu. yeantha food kudukalam

 • அறிக்கை

| Feb 12, 2019

this app good

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}