• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி விவரங்கள்

Parentune Support
0 முதல் 1 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 20, 2018

பெற்றோர்களாகிய நீங்கள் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதே அவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். தடுப்பூசி அதற்கு உதவக் கூடிய முக்கியமான ஒன்றாகும். அது உங்கள் குழந்தையை பலவகை  ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாற்ற உதவும்.

அமெரிக்காவில் நோய்த் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் மையம்(சென்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்ட் ப்ரிவேன்ஷன்) எனும் அமைப்பு எந்தந்த வயத்துக்குட்பட்டவர்களுக்கு, என்னென்ன தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்க உதவுகிறார்கள். மேலும் அவர்கள் பலதரமான தடுப்பூசிகளை குழந்தைகளுக்காக சிபாரிசு செய்கிறார்கள். இந்த அமைப்பின் வழிமுறைகளை பற்றி படிக்க விரும்புபவர்கள் அவர்களின் இணையதளத்தை நாடலாம்.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே பல நோய்களை எதிர்த்துப் போராட வழி செய்கின்றது. ஆனால், இந்த எதிர்ப்புசக்தியானது ஒரு வருடத்திற்குள்ளேயே மறைந்து விடும்.மேலும் பல குழந்தைகளுக்கு தாய்ப்பாலானது ஆரம்பம் முதலிலிருந்தே கிடைப்பதில்லை.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தடுப்பூசியானது அவர்களை பாதுகாக்க எப்பொழுதும் தயாராகவே உள்ளது. மேலும் தடுப்பூசியானது ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் உதவி புரிகிறது.

முதலில் தடுப்பூசி ஒரு நோய்க்கானத் தொற்றை குழந்தை உடம்பில் போலியாகத் தோற்றுவிக்கும். இது உங்கள் குழந்தையின் உடலில் உள்ள நோய்எதிர்ப்பு மண்டலத்தை 'எதிர்மம்' எனும் ஆயுதத்தை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்த எதிர்மங்களானது, தடுப்பூசி எதை எதிர்க்க போடப்பட்டதோ, அந்த நோயை எதிர்த்து போராடவைக்கும். இந்த எதிர்மங்களை கொண்ட உங்கள் குழந்தையின் உடலானது எதிர்காலத்தில் வரும் நோயையும் எதிர்க்கும் ஆற்றலை பெற்றுவிடும்.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

தடுப்பூசியின் நன்மைகள்

உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் நோயை பரப்பும் கிருமிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றும். ஒன்று,நச்சுக்கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்றும் அல்லது அக்கிருமிகளைத் தொடர்ந்து எதிர்த்து அவைகளிடமிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கும். இருப்பினும்,சில சமயங்களில் இத்தகைய ஆற்றல்மிக்க நோய்எதிர்ப்பு மண்டலத்தையும் தாண்டி கிருமிகள் செயல்படுகின்றன. இவ்வாறு நடக்கும் பொழுதே நாம் பல சிக்கலான நோய்க்கு ஆளாகிறோம்.

இந்த கிருமிகள் பெரும்பாலும் பிரச்சினைகளை உண்டாக்குவன. அவை, நம் உடலில் அறியாத வண்ணம் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தடுப்பூசியானது நமது நோய்எதிர்ப்பு மண்டலத்திற்கு கிருமிகளை எப்படி அறிந்து கொண்டு வெளியேற்ற வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது.பிறகு அதை பின்பற்றி நமது உடலானது நம்மை பாதுகாக்கின்றது.

தடுப்பூசி அட்டவணை

தடுப்பூசியானது குழந்தை பிறந்த உடனே கொடுக்கப்படுவதல்ல. ஒவ்வொன்றும் வெவ்வேறு நேரங்களில் கொடுக்கப்படுகிறது. ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 24 மாதங்களிலும் வெவ்வேறு இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. பல தடுப்பூசிகள் பல்வேறுபட்ட கட்டங்களாகவும், பல்வேறு மருந்தளவிலும் அளிக்கப்படுகிறது.

கவலை கொள்ளாதீர்கள் - இந்த தடுப்பூசி அட்டவணையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குழந்தைகள்நல மருத்துவர் இதில் உதவிபுரிவார்.

தடுப்பூசிகளின் விவரங்கள்

தடுப்பூசிகள் பற்றி தேவையான விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

 1. ஹெப் பி(Hep b) - ஹெபாட்டிட்டிஸ் பி (கல்லீரல் நோய்)- யை எதிர்த்து போராடும். ஹெப் பி மூன்று கட்டங்களில் கொடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக குழந்தை பிறந்தவுடன் அளிக்கப்படும். பெரும்பாலான மாநிலங்களில் குழந்தையை பள்ளியில் அனுமதிக்க ஹெப் பி தடுப்பூசி அளித்தமையை பற்றி விசாரிக்கின்றனர்.
 2. ஆர்வி(RV) - இது 'ரோட்டோ' நச்சுயிரியை எதிர்த்து போராடும். இக்கிருமி வயிற்றுப்போக்கை உண்டாக்க கூடியது. ஆர்வி இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் கொடுக்கப்படுகிறது. இது எந்தவகை தடுப்பூசி பயன்படுத்துக்குகிறோம் என்பதை பொறுத்துள்ளது.
 3. டீடிஏபி(DTAP)- இது டிப்தெரியா,தட்டம்மை, கக்குவான் இருமல்(பேர்டுஸிஸ்) போன்றவற்றை எதிர்த்துப் போராட வல்லது. இது குழந்தைப்பருவத்தில் ஐந்து கட்டங்களில் கொடுக்கப்பட வேண்டும்.
 4. ஹிப்(Hib) -  இது எமோப்பிலஸ் இன்ஃப்ளுயன்ஸா - வகை 'பி' யை எதிர்த்து போராடும். இது மூளைக்காய்ச்சலுக்கு முதன்மை காரணமாக இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும். இந்த 'ஹிப்' தடுப்பூசி மூன்று அல்லது நான்கு கட்டங்களில் கொடுக்கப்படும்.
 5. பிசீவி(PCV) - இது நிமோனியா என்னும் கொடூரமான நோயை எதிர்த்து போராடும் சக்திப் பெற்றது. இந்த தடுப்பூசியானது தொடர்ச்சியாக நான்கு கட்டங்களில் கொடுக்கப்படுகிறது.
 6. ஐபிவி(IPV) - இது போலியோவை எதிர்த்து போராடும். மேலும், இது நான்கு கட்டங்களில் கொடுக்கப்படுகிறது.
 7. இன்ஃப்ளூயன்ஸா(Influenza) - இது ஃப்ளூவை எதிர்த்து போராடவல்லது. இது வருடா வருடம் அளிக்கப்படும் தடுப்பூசியாகும்.இது குழந்தை பிறந்த ஆறாவது மாதத்திலிருந்து வருடா வருடம் தவறாமல் அளிக்கப்பட வேண்டும். ஆவணி முதல் மார்கழிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் அளிக்கலாம்.
 8. எம்எம்(MM) - இது தட்டம்மை, வீக்கம், போன்றவற்றிற்காக போடப்படும். இது இரண்டு கட்டங்களில் கொடுக்கப்படுகிறது. முதல் கட்டம், ஒரு வயது அல்லது அதற்கு மேல்லுள்ளவர்களுக்கு கொடுக்கப்படும்.இரண்டாவது கட்டம், நான்கு முதல் 6 வயது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும்.
 9. ஒரு தாயின் கேள்வி: "என்னுடைய தோழி ஒருத்தி, தடுப்பூசியால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்கிறாள். நான் அதை ஏற்றுக்கொள்வதா?"
 10. மருத்துவர்களின் கருத்து: " நிச்சயமாக இல்லை. தடுப்பூசி குழந்தைகளுக்கு நன்மையையே அளிக்கின்றது. அது தீங்கு விளைவிக்கும் என்பதற்கு ஆதாரமில்லை. மேலும், அது குழந்தையை பலவகையான நோய்களிலிருந்து காப்பாற்றவல்லது. தடுப்பூசி சிறிதளவே பக்க விளைவை ஏற்படுத்தும் (வீக்கம் போன்றன).இந்த விளைவுகள் ஓரிரு நாட்களில் மறைந்துவிடும். எனவே பயங்கொள்ள வேண்டாம்.

மருத்துவர்களுடன் பேசுங்கள்

தடுப்பூசியைப் பற்றி எதேனும் சந்தேகம் எழுந்தால், குழந்தைகள்நல மருத்துவரிடம் கண்டிப்பாகக் கேளுங்கள்.அவர்களிடம்,

 • எப்படி தடுப்பூசியின் பக்கவிளைவில் இருந்து குழந்தையை விடுவிப்பது?
 • இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதால் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா?

போன்றவற்றை நிச்சயம் கேளுங்கள். பெற்றோர்களாகிய நீங்கள் சரியான நேரத்தில் குழந்தைக்கு இந்த தடுப்பூசியை போடத் தவறாதீர்கள். இது உங்கள் குழந்தையின் வாழ்வு சம்பந்தப்பட்டது. எனவே, கவனமாக செயல்படுங்கள்.

 • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Dec 01, 2018

yanthu kulanthiku 12 months aguthu avanuku ena ena youse poda vandum yapothu poda vandom

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}