கர்ப்ப காலத்தில் அடிக்கடி செய்யப்படும் 8 தவறுகள்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Feb 16, 2021

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு. கர்ப்பம் தரித்ததை உறுதி செய்த முதல் நாளில் இருந்தே பெண்கள் அதிக கவனத்தோடு இருக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எத்தனை கவனமாக இருந்தாலும் பொதுவாக எல்லா பெண்களும் ஒரு சில தவறுகளை அது தவறு என்று தெரியாமலேயே செய்து விடுகிறார்கள்.
இதை படிச்ச உடனே நாமளும் அப்படி ஏதாவது செஞ்சிருப்போமோ அப்படின்னு யோசிக்கறீங்களா? இதை படிச்சு முடிக்கும்போது அது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு நன்புறேன். இப்போ கர்ப்ப காலத்துல பெண்கள் இயல்பாக செய்ற 8 தவறுகள் என்னன்னு பார்க்கலாமா?
குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுவது:
கர்ப்ப காலத்துல 4 மாதங்களுக்கு மேல் வழக்கமா இருக்கிறதை விட அதிகமா பசி இருக்கும். இதை பலர் தவறாக புரிந்து கொள்வார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து இரண்டு பேர் சாப்பாடு சாப்பிடணும்னு நினைப்பாங்க.
சாதாரணமா நமக்கே 1800 முதல் 2000 கலோரிகள் வரை தான் தேவைப்படும். இதே அளவா கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவைப்படும்? குழந்தைக்கு 300 கலோரிகளே தாராளம். அதனால இரண்டு பேருக்கு சாப்பிடணும்னு எந்த அவசியமும் இல்லை. அப்படி அதிகமா சாப்பிட்டு அதிக எடை ஏறிட்டா டெலிவரியின் போது ஒரு சில பிரச்சனைகள் வரலாம். இதனால சுகப்பிரசவம் ஆக முடியாம போறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு.
இதுக்காக கவலைப்படாதீங்க இப்போ தெரிஞ்சுடுச்சுல்ல, இப்போ இருந்தே இதை பின்பற்ற ஆரம்பிச்சுடுங்க.
சுய மருத்துவம்:
தலைவலியோ, காய்ச்சலோ கர்ப்ப காலத்தில் எது வந்தாலும் உடனே டாக்டரை பார்த்து தான் மருந்து சாப்பிட வேண்டும். பொதுவா சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு எல்லாம் நாம ஹாஸ்பிடலுக்கு போக மாட்டோம். நாமே மாத்திரை வாங்கி போட்டு தூங்கினா சரியாயிடும்னு நினைப்போம். ஆனா கர்ப்ப காலத்தில் இதை கண்டிப்பாக செய்ய கூடாது. அது உள்ளே வளரும் கருவை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் சின்ன உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் நீங்களா எந்த மருந்தும் எடுத்துக்காம உங்களோட டாக்டரோட ஆலோசனைய கேளுங்க.
தூக்கமின்மை:
கர்ப்ப காலத்தில் தூக்கம் மிகவும் முக்கியமானது. நம்மோட வேலையும், வீட்டையும் சரியாக கவனிக்கணும்ங்கிற எண்ணத்துல தூக்கத்தை குறைக்கக் கூடாது. கர்ப்ப காலத்துல நம்ம உடல்ல நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதனால நம்மோட உடம்புக்கு அதிக ஓய்வு தேவைப்படும். அதை கொடுக்க வேண்டியது நம்மோட கடமை. குறைந்த பட்சம் கர்ப்ப காலத்தில் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கம் குறைவாக இருந்தால் உடல் சோர்வடைந்து விடும். பின்னால் பிரசவத்தின் போது உடல் நமக்கு ஒத்துழைக்காது.
குழந்தையுடன் பேசாமல் இருப்பது:
கருத்தரித்த காலத்தில் நாம ரொம்ப சோர்வா இருப்போம். இதனால மற்ற விஷயங்கள்ல நம்ம கவனம் அதிகமா இருக்காது. இதுமட்டுமில்லாம கரு உருவான சமயம் குழந்தையுடன் பேசுவது புரியாது என்று நினைப்போம். அல்லது குழந்தை உள்ளே இருந்து உதைக்கும் போது தான் நாம அவங்களோட பேசவே ஆரம்பிப்போம். ஆனா, குழந்தைகிட்ட கரு உருவானதுல இருந்தே பேச ஆரம்பிக்கலாம். இதனால குழந்தைக்கும் அம்மாவுக்குமான உறவு இன்னும் வலுவாகும்.இதோட வெளிப்பாடை உங்க குழந்தை பிறந்த பிறகு உணர்வீங்க.
உணவு கட்டுப்பாடு:
6 மாதத்திற்கு மேல் கண்டிப்பா இனிப்பு சாப்பிடுறதை குறைச்சே ஆகணும். கர்ப்பமா இருக்கிறவங்க என்ன கேட்டாலும் நம்ம வீட்டுல வாங்கி கொடுத்துடுவாங்க. ஆனா ஆறு மாசத்துக்கு மேல ஜெஸ்ட்டினேஷனல் டயபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கிறதால கண்டிப்பா ஸ்வீட்ஸ் மற்றும் எல்லா விதமான இனிப்பு வகைகளையும் சாப்பிடுறதை கட்டுப்படுத்தணும்.
உடற்பயிற்சி/தியானம்:
உடற்பயிற்சி செய்ய சொன்னா வேலைக்குப் போகும் பெண்கள் தினமும் டிராவல் பண்றேன், ஆஃபிஸ்ல படி ஏறிப்போறேன், அதனால அதற்கு மேலயும் உடற்பயிற்சி வேணாம்னு சொல்லுவாங்க. வீட்டுல இருக்குற பெண்கள் வீட்டு வேலை எல்லாம் செய்றேன், இதுவே போதும்னு சொல்வாங்க. ஆனா உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். உடற்பயிற்சி ஹார்மோன்ஸ் மற்றும் இரத்தத்தை புத்துணர்ச்சியாக்கும். அது பிரசவத்துக்கு ஏற்ற மாதிரி உடல் ஒத்துழைக்க உதவும். அதுமட்டுமில்லாம குழந்தையோட வளர்ச்சிக்கும் இது உதவும். கர்ப்ப காலத்துல உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்யறது மூலமா நாமும் குழந்தையும் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாவும், சந்தோஷமாவும் இருக்க முடியும்.
தூங்கும் நிலை:
இது தான் இருக்கிறதுலயே ஃபாலோ பண்றதுக்கு கஷ்டமான விஷயம். தூங்கும் போது வலது பக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ தான் படுத்து தூங்க வேண்டும். மல்லாந்தோ அல்லது குப்புறப் படுத்தோ கட்டாயமாக தூங்கக் கூடாது. அதுவும் கட்டாயமாக 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தை பெருசா ஆகிட்டு இருக்கிறதால மூச்சு விட குழந்தைக்கு சிரமம் ஆயிடும். அது குழந்தையோட வளர்ச்சியை பாதிக்கும். இடது பக்கமாக ஒருக்கலித்து படுப்பது சிறந்தது. இன்னொரு பக்கம் உடனே திரும்பி படுக்காமல் எழுந்து மெதுமாக திரும்பி மற்றோரு பக்கம் படுப்பதால் குழந்தைக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.
காலணிகள்:
கர்ப்ப காலத்தில் கட்டாயமாக தரமான மற்றும் சொளகரியமான காலணிகளை தான் அணிய வேண்டும். ஹீல்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். ஹீல்ஸ் அணிவதால் கர்ப்பத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கண்டிப்பாக அதை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவு உங்களுக்கு உதவியா இருந்தா கீழே கமெண்ட் ல சொல்லுங்க.
இதே மாதிரி உங்களுக்கு நடந்த அனுபவங்களையும், உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் நீங்க ஷேர் பண்ணா அது எல்லாருக்கும் உதவியா இருக்கும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.