• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

ஒழுக்க அளவு - பெற்றோர்கள் முன்மாதிரியாக செயல்படக்கூடிய வழிகள்

Radha Shree
1 முதல் 3 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Oct 07, 2019

அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை ஒழுக்கமாகவும் நல்லவராகவும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக பல முயற்சிகள் செய்வர். ஆனால், ஒரு குழந்தை ஒழுக்கமாக வளர முக்கிய முன்னுதாரணமாக திகழ வேண்டியது பெற்றோர்கள் மட்டுமே. குழந்தைகள் ஒவ்வொரு செயல்களையும் அதன் பெற்றோரை பார்த்து தான் கற்றுக்கொள்கின்றனர்.

பெற்றோர்கள் ஒரு குழந்தையை ஊக்குவிக்க வேண்டிய வழிகள்

எனவே பெற்றோர்கள் அவர்கள் நடவடிக்கையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய வழிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

 1. குழந்தையின் முன் தினமும் புதிது புதிதாக தன்னை வெளிப்படுத்துங்கள். உங்களை தினமும் மேம்படுத்திக்  கொள்ளுங்கள். அது உங்கள் குழந்தைகளின் சுய முன்னேற்றத்தை வளர்க்கவும் தனித்துவத்தை அதிகரிக்கவும் உதவும்.  
 2. உங்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்லுங்கள், உங்கள் திறமையையும் வழக்கமான பழக்கத்தையும் வெளிப்படுத்துங்கள். இது குடும்ப ஒற்றுமை, குழுப்பணி திறமை, மற்றும் எல்லாவற்றிற்கும் தாராளமாக சேவை செய்யும் தன்மையை உருவாக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
 3. நீங்கள் எப்படிப்பட்ட ஒரு நபர் என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துங்கள். தவறோ வெற்றியோ உங்களுடைய கடந்த அனுபவங்களைப் பொருத்தமான நேரங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். பாதிப்பு என்பது வலிமையின் நிலையில் இருந்து வரும் ஒரு நல்லொழுக்கம் என்று அவர்களுக்கு புரிய வையுங்கள்.
 4. நீங்கள் உங்கள் தினசரி வேலைகளை செய்யும்போது உங்கள் குழந்தைகளை அருகில் வைத்திருங்கள். அது அவர்களுக்கு அவர்கள் வேலையை செய்யவேண்டும் என்ற ஒரு கடமை உணர்ச்சியை தூண்டும். ஒவ்வொரு வேலைகளையும் எதற்காக செய்ய வேண்டும் என்று விளக்கம் அளியுங்கள்.
 5. பெற்றோர்கள் தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல், குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் பிற்காலத்தில் குழந்தைகளும் நம்மை போல் தொலைபேசிக்கு அடிமையாகி விடுவார். தொலைபேசியை மட்டுமே பார்த்து வளரும் குழந்தைகள் விரைவில் உடல்நலம் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.
 6. நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மிகவும் ஆரோக்கியமானது, அது மன அழுத்தத்தை குறைக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், என்பது பெரிய விளைவுகளைக் கொண்டிருக்கிறது. நம் குழந்தைகள் முன் முடிந்தவரை சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவசியம். அவர்கள் முன்பு கோபப்படுவது முழுமையாக தவிக்கவேண்டிய ஒன்று.
 7. குழந்தையின் முன் உங்களுக்கு பிடிக்காதர்வர்களை பற்றியோ அல்லது நீங்கள் கோபமாக இருப்பவர்களை பற்றியோ இழிவாக பேசாதீர்கள். அனைவரை பற்றியும் நல்ல கருத்துக்களை மட்டுமே கூறுங்கள். குழந்தைகள் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனிப்பர். எனவே , இது பிற்காலத்தில் அவர்கள் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தடுக்க நாம் எடுக்கும் ஒரு பெரிய முயற்சி.
 8. நம்பிக்கையை வளர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் - நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எப்படி நம்பிக்கையை வளர்ப்பது என்று கற்பிக்க விரும்பினால், அவர்கள் பேசுவதை மதித்து கவனியுங்கள்.  இது அவர்களுக்கு தலைமை பொறுப்பை உருவாக்கும். அவர்கள் கூறுவதை உங்கள் மனதையும் உங்கள் காதுகளையும் திறந்து கேளுங்கள். அதன்பிறகு, வாழ்க்கையில் இதுபோன்று நடந்துகொள்ள அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
 9. வாழ்க்கையில் நமக்கு இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள் - நாம் வாழ்வில் முன்னேற இலக்குகளை அமைப்பது மிகவும் முக்கியம். இந்த இலக்குகளை அமல்படுத்துவது மற்றும் அடைவது சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் சரியாக திட்டமிட்டபடி நகரும் போது, அது அவர்களின் அன்றாட வாழ்வின் சுய ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது. இலக்கை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு பயிற்சியுங்கள், அதேபோல் இலக்குகளை அடையும்போது அவர்களை பாராட்டுங்கள்.
 10. குழந்தைகளிடம் ஒரு விஷயத்தை செய்வேன் என்று வாக்களித்த பிறகு அதை செய்யாமல் விடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வது குழந்தைகள் வளரும் பொது அவர்களுக்கு ஏமாற்றும் பழக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் பெற்றோரிடம் முக்கியமான விஷயங்களையோ அல்லது அவர்கள் செய்யும் தவறுகளையோ மறைக்க முக்கிய காரணமாக அமையும்.
 11. தோல்வி வெற்றிக்கு முக்கியமாகும் - விளையாட்டில் வெற்றி தோல்வி இரண்டும் சகஜம் என்றும் தோல்வியே வெற்றிக்கு அடிப்படை என்றும் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். தோல்வி அடையும்போது அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அதேபோல் பிறர் வெற்றிபெறும்போது அதை பாராட்டவும் கற்றுக்கொடுங்கள்.

 

ஊடக ஈர்ப்புகளிலிருந்து குழந்தைகளை திசை திருப்பவும்

இன்றைய சமுதாயத்தில் நமது குழந்தைகளுக்கு எதிர்மறையான முன்மாதிரிகளுக்கு பற்றாக்குறை இல்லை. வீடியோ, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களின் செயல்களையும் தோற்றங்களையும் பின்பற்றுகிறார்கள். இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் குடும்ப மதிப்புகள் அல்லது குழந்தைகளுக்கான சமூக சார்புடைய மாதிரியை மேம்படுத்துவதில்லை. எனவே, இதுபோன்ற ஈர்ப்புகளிலிருந்து குழந்தைகளை திசை திருப்பி நல்லொழுக்கங்களை மட்டுமே காண்பியுங்கள்.

பெற்றோர்களுக்கான அறிவுரை:

பெற்றோராக யோசிப்பதில் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று, நம் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்கும்போது வரும் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை அடைய முடியாதபோது அதை தோல்வியாக உணர்ந்து விலகுவது மிகவும் தவறு.

ஒழுக்கத்தை நாம் தான் கற்பிக்க வேண்டும் ஏனெனில் குழந்தைகள் ஒவ்வொரு வயதினிலும் வித்தியாசமாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஒன்று மற்றும் இரண்டு வயதானவர்களுக்கு உடல் வரம்பு கற்றுக்கொடுப்பது அவசியம், ஆனால் மூன்று வயதிற்கு மேல், வாய்மொழி வரம்பையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒன்பது மாதங்களில் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க தொடங்குங்கள். குழந்தைகளை நல்ல வழிக்கு திசை திருப்புங்கள்.

“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”

 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}