பால் குடி மறக்கடிப்பதற்கான வழி முறைகள்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Dec 12, 2019

ஒரு வயதை அடையும் குழந்தைகள் மற்ற உணவிலிருந்து ஊட்டச்சத்துக்களை பெற தொடங்குகின்றது. அந்தத் தருணத்தில் குழந்தைகள் தாய்ப்பாலை தானாகவே மறக்க தொடங்கிவிடுகிறது. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மறக்கடிக்கச் செய்வதற்கு சில வழிகளை நாம் கையாள வேண்டும். தாய்ப்பாலை மறக்கடிக்கும் செயலை மிகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் நிகழ்த்த வேண்டும்.
தாய்ப்பால் வெறும் உணவு மட்டுமின்றி குழந்தைகளுக்கு பாதுகாப்பையும் ஆறுதலையும் அவர்களுக்கு நெருக்கமான உணர்வையும் தருகிறது ஆகையால் இது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். குழந்தைகளை சிறந்த அணுகுமுறையால் பாலை மறக்க வைக்க என்னென்ன வழிகள் என்பதை இப்பதிவில் காணலாம்.
தாய்ப்பாலை மறக்கடிக்க மாற்று வழிகள் இதோ
இரவு நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க அந்த நாள் முழுவதும் மகிழ்சியான உணர்வுகளை வழங்கி மாலை நேரத்தில் கூடுதலாக தாய்ப்பால் கொடுத்து விடவேண்டும். இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது குழந்தை வயிறு நிறைந்து இருக்க வேண்டும். இரவில் குழந்தை அழும் பொழுது உங்களது கணவரை தூக்கி வைத்துக் கொண்டு ஆறுதல் படுத்த சொல்லுங்கள். ஆனால் முழுமையாகவும் அவர்களை விட்டு விலகாமல் தேவையின் போது மட்டும் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தை கொண்டு வருவது சிறந்தது.
மற்ற செயல்களில் ஈடுபாடு
உங்கள் குழந்தைக்கு மற்ற விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும் அப்போது தாய்ப்பால் குடிக்கும் நேரத்தை குறைத்துக் கொள்வார்கள். இந்தத் தருணமே அவர்களுக்கு தாய்ப்பால் மறக்கடிக்க ஏதுவான தாகும். அவர்களும் எளிதாக மறந்துவிடுவார்கள்.
தாய்ப்பால் என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பையும் ஏற்படுத்த பெரிதளவில் உதவுகின்றது அதனால் தாய்ப்பாலை மறக்க வைப்பது என்பது மெதுவாகவும் படிப்படியாகவும் நிகழவேண்டும். குழந்தைகள் தாய்ப்பாலை உடனே மறக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்ததில்லை நாம் எடுக்கும் இந்த முயற்சி அவர்களுக்கு வேதனையை தரக்கூடாது
முதலில் ஒரு தடவை பாலூட்டுவதை தவிர்ப்பது
உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு முதலில் ஒரு நாளில் ஒரு தடவை பாலூட்டுவதை நிறுத்துங்கள். ஆனால் நடுநடுவே அவர்களுக்கு கொடுக்கும் உணவு அவர்களின் வயிறு நிரம்பும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைக்கு வயிறு நிரம்ப வில்லை என்றால் அதற்கு பால் குடிக்கும் ஞாபகம் வந்துவிடும் உடனே அவர்கள் உங்களிடம் கேட்க தொடங்கிவிடுவார்கள். குழந்தைக்கு வயிறு நிரம்பி விட்டால் உங்களிடம் பால் கேட்டு நச்சரிக்க மாட்டார்கள்
பாலூட்டும் நேரம்
உங்கள் குழந்தைக்கு நீங்கள் தினமும் எந்த நேரத்தில் பாலூட்டுவீர்கள் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அந்த நேரம் வரும்போது அல்லது அந்த நேரம் வருவதற்கு முன்னாடி அவர்களின் வயிறு நிறையும்படி உணவளித்து விடுங்கள். அப்போது அவர்கள் பால் கேட்க மறந்து விடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு மற்ற உணவு வகைகளை அதாவது பல வண்ணங்கள் நிறைந்த புதுப்புது உணவுகளை அவர்களுக்கு அளித்துக் கொண்டே இருங்கள் அவர்கள் பசியோடு தொடர்ந்து இருப்பதை தவிர்த்துவிடுங்கள்.
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பவும்
நீங்கள் கொடுத்த உணவின் மூலம் உங்கள் குழந்தையின் வயிறு நிரம்பி அதை நீங்கள் அறிந்த பின்னும் அவர்கள் உங்களிடம் பால் கேட்டால் என்ன செய்வீர்கள்? அவர்களது கோரிக்கையை உடனே நிறைவேற்றாமல் மற்ற செயல்பாடுகளில் ஈடுபட வையுங்கள். அவர்களை எளிதாக திசைதிருப்பும் செயல்பாடுகளை நீங்கள் முன்னதாகவே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவளை திசைதிருப்ப உங்களுக்கு எளிதாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே உறங்க வைப்பது
உங்கள் குழந்தையை தூங்க வைக்க தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக அதை மாற்றுங்கள்.தாய்ப்பால் குடித்துக்கொண்டே தூங்கும் குழந்தைகளை தாய்ப்பால் மறக்க வைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். உங்கள் குழந்தையை தூங்க வைக்க உங்கள் கணவரிடமும் அல்லது உறவினர்களிடமும் உதவ சொல்லுங்கள். உங்கள் குழந்தை தூங்கும் வரை நீங்கள் அவர்கள் அருகில் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் உங்களது சப்தமோ, நிழலோ கூட அவர்களுக்கு தெரியாத படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பால் குடிக்க தூண்டும் செயல்
உங்களுடைய சில நடவடிக்கைகள் அவர்களுக்கு பால்குடிக்கும் ஞாபகத்தை வர வைக்கலாம் உதாரணத்திற்கு அவர்கள் முன் உடை மாற்றுவது குளிப்பது போன்ற விஷயங்களை தவிர்க்கவும். சில நேரங்களில் குழந்தைகள் எப்போதும் எந்த இடத்தில் பால் குடிப்பார்களோ அந்த இடத்தை பார்த்தாலும் அவர்களுக்கு ஞாபகம் வரலாம். அதனால் அவர்களுக்கு பால் குடிக்க தூண்டும்படி நடந்து கொள்ளாதீர்கள்.
இங்கே கொடுக்கப்பட்ட குறிப்புகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன் உங்களுக்கும் இதே போல் அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}