• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

பால்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயார் செய்வதற்கான டிப்ஸ்

Radha Shree
1 முதல் 3 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 02, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

என் குழந்தை முதன்முதலில் பள்ளிக்கு சென்ற நாள் மறக்க முடியாதது. எனது குழந்தை வாழ்வின் முக்கியமான கட்டத்திற்கு நகரும் தருணமாக அவள் பாலர்வாடி செல்வதை பெருமிதமாக பார்த்த நாள் அது. எனக்கு மட்டுமல்ல அனைத்து பெற்றோர்க்கும் தனது குழந்தைகளின் முதல் நாள் பள்ளி அனுபவம் மறக்க முடியாத ஒன்று. தன் குழந்தை பிறந்த பிறகு அதிக நேரம் பிரிய போகிறது என்ற பதட்டம் கலந்த தாய்க்கும் என்னை தனியாக விட்டீர்களே என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது அழும் குழந்தைகள் ஒருப்புறம், தாத்தா பாட்டியின் அனைவருக்கும் ஒரு புது உணர்வை ஏற்படுத்தும் முதல் நாள் பள்ளி அனுபவம்.

எனது மகள் பாலர் வாடிக்கு  செல்வதற்கு தயார்படுத்த வேண்டும் என்று எண்ணி பள்ளி செல்வதற்கு முன்பே சில விஷயங்களை என் குழந்தைக்கு பழகத் தொடங்கி விட்டேன். வீட்டில் இருக்கும் நேரம் போக பெரும்பாலான நேரத்தை பள்ளிக்கூடத்திலேயே செலவு செய்யப் போகிறார்கள். அந்த பள்ளி சூழல் அவர்களுக்கு  நேர்மறையாக மாற்ற வேண்டும் என்பதற்காக சில முயற்சிகள் எடுத்தேன் அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குழந்தைகளை தயார்படுத்த அவசியமான நான்கு விஷயங்கள்:

 1. உணவுப்பழக்கம்

 2. டாய்லெட் பயிற்சி

 3. பள்ளியை பற்றி பாஸிட்டிவ்வாக பேசுவது

 4. உங்கள் குழந்தைக்கு ஏற்ற ஆரோக்கியமான பள்ளிச்சூழல்

உணவுப்பழக்கம்

 • பள்ளி செல்வதற்கு முன்பே வீட்டிலேயே தானாக உணவருந்தும் பழக்கத்தை கற்றுக்கொடுப்பது மிக அவசியம். முதன் முதலில் அவர்கள் தானாக சாப்பிட தொடங்கும் போதே உணவு சார்ந்த பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்கலாம். என் குழந்தைக்கு 11/2 வயதிலேயே தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் கீழே மேலே சிந்தி தான் கற்றுக் கொள்வார்கள். அதை அம்மாக்களாகிய நாம் பொறுமையாக கையாள வேண்டும்.
 • பழங்கள், காய் மற்றும் உலர் பல வகைகளை உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். யார் உதவியும் இல்லாமல் குழந்தைகளாலே எளிதாக சாப்பிடும் உணாவிலிருந்து ஆரம்பிக்கலாம்.
 • அதே போல் பள்ளிக்கு செல்லும் போது குழந்தைகள் எளிதாக திறக்கும் ஸ்நாக் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலை  பள்ளிக்கு கொடுத்து அனுப்புங்கள். உணவின் அளவு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் இருக்கவேண்டும், பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் நீங்கள் மீண்டும் உணவளிக்கலாம். உணவில் ஏதேனும் ஓவ்வாமை இருந்தால் ஆசிரியரிடம் முன்பே தெரியப்படுத்த வேண்டும்.

டாய்லெட் பயிற்சி

 • வீட்டிலேயே கழிப்பறை சென்றுவிட்டு  பள்ளிக்கு செல்வது நல்லப்பழக்கம். குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல பழகும். வற்புறுத்தி கற்றுக் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. ஆரம்பத்தில் பள்ளிக்கு சென்ற பின்னும் டாய்லெட் செல்வார்கள். பெற்றோர்கள் பள்ளி ஆசிரியரிடம் தனது குழந்தை ஒருநாளில் கழிப்பறையை எவ்வளவு முறை பயன்படுத்துவார்கள் என்று சொல்வது நல்லது. அதேபோல் கழிப்பறைக்கு செல்ல உதவும் ஆயாவிடவும் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் சொல்ல வேண்டும்.
 • முக்கிமாக சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க வீட்டில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் ஒரு பெயர் பழகி, பள்ளியில் அந்தப் பெயர் புரியாமல் அவதிப்படுவதும் நடப்பதுண்டு.
 • பள்ளிக்கு அனுப்பும் முன்னரே டயப்பர் பயன்பாட்டை நிறுத்தி குழந்தைகளை கழிப்பறையை பயன்படுத்த பழக்கலாம். கழிப்பறை செல்ல எந்த தயக்கமும் இன்றி ஆசிரியரிடம் அணுகும் தன்மையையும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். 

பள்ளியை பற்றி பாஸிட்டிவ்வாக பேசுவது

 • குழந்தைகள் சொன்ன பேச்சு கேட்க வேண்டும், சரியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக பள்ளியையும், ஆசிரியர்களையும் சொல்லி பயமுறுத்துவது தவறானது. பள்ளியை பற்றிய மகிழ்ச்சியான விஷயங்களை குழந்தைகளோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த இடம் அவர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும். என் குழந்தை பள்ளிக்கு செல்லும் போது மகிழ்ச்சியாக செல்வதற்கு இந்த விஷயம் பெரிய உதவியாக இருந்தது.  
 • பள்ளியில் நிறைய புது நண்பர்கள் கிடைப்பார்கள் என்றும், புது புது விளையாட்டுகளை, வேலைகளை நீ கற்றுக் கொள்வாய் என்றும் பாஸிட்டிவ்வாக பேசுவது சிறந்தது. பார்த்துக்கொள்ள பெரியவர்கள் இருப்பார்கள் என்றும், பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள போகும் அற்புதமான இடம் என்பதையும் பதிய வைக்கவேண்டும்.
 • பள்ளி செல்ல தேவையான யூனிஃபாட்ம், ஸ்கூல் பேக், ஸ்நாக் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களை காட்டுவதால் குழந்தைகளுக்கு பள்ளிமீது ஆர்வத்தை தூண்ட முடியும். இதே போல் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்லும் அக்கா அண்ணாக்களை குழந்தைகளுக்கு காட்டலாம். இதனால் பள்ளி மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும்.  

உங்கள் குழந்தைக்கு ஏற்ற ஆரோக்கியமான பள்ளிச்சூழல்

 • ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கம், செயல்திறன், படைப்பாற்றல், கற்றல் திறன், அணுகுமுறை இருக்கும். உங்கள் குழந்தைக்கு இருக்கும் தனித்தன்மை சார்ந்தும் பள்ளியை தேர்ந்தெடுக்கலாம். என் குழந்தையின் நடவடிக்கையை பார்த்து நான் மாண்டிசோரி கல்விமுறையை தேர்ந்தெடுத்தோம்.
 • குழந்தைகள் அந்த புதிய சூழலை புரிந்து கொள்ளவும், அதற்கேற்றவாறு பழகவும் சிறிது காலம் எடுக்கலாம். முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது அடம் பிடிப்பதும், கதறி அழுவதும் நாளைடைவில் சரியாகிவிடும். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு ஒரு குழந்தையின் செயல்திறனை கணக்கிட முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் புதிய சூழலில் பழகுவதில் வித்தியாசம் உண்டு.
 • வீட்டில் இருக்கும் போதே மொழித்திறன், பகிர்தல், பாதுகாப்பு, சின்ன சின்ன ஆக்டிவிட்டீஸ், போன்ற சில எளிய பழக்கங்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் புதிய சூழலை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.

எனவே, எப்போதும் குழந்தைகளுக்கு பள்ளியை பற்றி நல்ல விஷயங்களை சொல்வதன் மூலம் அவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லத் தொடங்குவார்கள்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}