• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

பள்ளிகளில் எம்.ஆர் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்

Radha Shree
0 முதல் 1 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 29, 2018

எம்.ஆர் தடுப்பூசி என்றால் என்ன?

இது ஒரு தட்டம்மை ரூபல்லா தடுப்பூசியாகும்.

எப்போது வழங்கப்பட வேண்டும்?

அங்கன்வாடி மையங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும். பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் வெவ்வேறு நாட்கள் இருக்கும். இதுவரை பள்ளியில் சேர்க்காத குழந்தைகளுக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் நகராட்சி அல்லது அரசு மருத்துவ மையங்களில் வழங்கப்படும்.

தட்டம்மையின் முக்கியத்துவம் என்ன?

தட்டம்மை, குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய நோய் தொற்றாகும். இதனால் அதீத காய்ச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்படும். நோய் வந்த பிறகு தீவிரமான வயிற்றுப்போக்கு,  நிமோனியா, மூளைக்காய்ச்சல், இரைப்பைக் கோளாறு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அதீத சிக்கல்களை உண்டாக்கும்

ருபெல்லாவின் முக்கியத்துவம் என்ன?

ருபெல்லாவை ஜெர்மன் தட்டம்மை என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய நோய் தொற்றாகும். காய்ச்சல் மற்றும் தடிப்புகளை உண்டாக்கும். கருவில் உள்ள குழந்தைக்கு பெரிதளாவில் தீங்கு விளைவிக்கக்கூடியது. அந்த குழந்தைகளுக்கு கண்புரை, பார்வையிழப்பு, காது கேளாமை, மன வளர்ச்சி குறைபாடு, இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இது பிறவிநோய் (congenital) தட்டம்மை ஸின்ட்ரோம் எனப்படும்.

இந்த தடுப்பூசி எவ்வளவு நாட்களுக்கு வழங்க வேண்டும்?

தேசிய திட்டத்தின்படி ஒரு முறை

இதற்கு முன் MMR தடுப்பூசி பெற்றவர்கள் பற்றி ?

இப்போதும் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஒன்பது மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தட்டம்மை -ரூபல்லா என்ற தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
தடுப்பூசி போடும் தினத்தில் குழந்தை நோய்வாய் பட்டிருந்தால், பள்ளிக்கு அனுப்ப இயலாது.

குழந்தையின் உடல்நிலை சரியான பின் அங்கன்வாடி அல்லது நகராட்சி மருத்துவ மையங்களில் வழங்கப்படும்.

எவ்வளவு செலவாகும்?

இது முற்றிலும் இலவசம்.

நாங்கள் எங்கள் குடும்ப நல மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவரிடம் போட்டுக் கொள்ள முடியுமா?

இல்லை, நியமிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே இது வழங்கப்பட வேண்டும்.

இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகின்றோம்.

இது மிகவும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி.

  • இது கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முன்னிலிருந்தே அனைத்து டாக்டர்களும் இந்த தடுப்பூசிகளை பயன்படுத்தினர்.
  • இதனை பயிற்சி பெற்ற செவிலியர்களே நிர்வகிப்பார்கள்.
  • ஒவ்வொரு மையத்திலும் பயிற்சி பெற்ற செவிலியர், டாக்டர்கள், அரசு அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இருப்பார்கள்.
  • இந்த ஊசிகள் ஒருமுறையே பயன்படுத்தப்படும். ஒரு பயன்பாட்டிற்கு பிறகு அவை முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன.
  • எதிர்பாராத விபத்துகளுக்கான அனைத்து அவசர தயாரிப்புகளும் தயார் நிலையில் இருக்கும்.
  • அனைத்து மையங்களிலும் குழந்தை நல மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் அவசர நிலையை கையாள தயாராக இருப்பார்கள்.

பக்க விளைவுகள் என்ன?

பொதுவாக பக்க விளைவுகள் மிகவும் லேசாகவே காணப்படும். அவை சாதரண வலி, வீக்கம், சிவந்து போதல் மற்றும் காய்ச்சல் ஆகியவையாகும். இதற்கு பாராசிட்டமால் மற்றும் ஐஸ் கட்டி ஒத்தடம் ஆகியவற்றால் சிகிச்சை அளிக்கலாம். இந்த பக்க விளைவுகள் அனைத்து தடுப்பூசிகளுக்கும் பொதுவானவை.

எனவே, தடுப்பூசியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறீர்களா?

ஆமாம், தயவுசெய்து இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள். இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

 

  • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Dec 01, 2018

எனது குழந்தைக்கு 12மாதம் ஆனால் அவனது எனட குனறவாக உள்ளது. அவனது எனட அதிகரிக்கா என்ன உணவு கொடுக்க வேண்டும் ?

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த பெற்றோர் Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}