• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து

பாலூட்டுவதற்கு தேவையான ஊட்டச்சத்து - தாய்மார்களுக்கான ஆலோசனைகள்

Canisha Kapoor
0 முதல் 1 வயது

Canisha Kapoor ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 29, 2019

பாலூட்டும்பொழுது எந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். எந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்,எதை தவிர்க்கவேண்டும், அது எப்படி குழந்தையை பாதிக்கும் என்றெல்லாம் நாம் சிந்திப்போம்.உங்கள் அனைத்து கேள்விகளுக்குமான விடை கீழ்வரும் கட்டுரையில் அடங்கும்.படித்து பயன் பெறுவீர்களாக.

நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டுகிறீர்கள் என்றால், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும்,உடல்நல மேம்பாட்டிற்கும்  உதவும் ஊட்டச்சத்தை அளிக்கிறீர்கள் என்று அர்த்தம். பாலூட்டும்போது என்ன மாதிரி உணவு வகைகள் உட்கொள்ளவேண்டும் ,எந்த உணவுமுறை நமக்கு தகுந்தது,  எது நன்மை பயக்கும்,எந்த பானவகைகள் அருந்தவேண்டும், அது எவ்வாறு குழந்தையை பாதிக்கும் என்று பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன.

அதை நீக்க ,முதலில் நாம் பாலூட்டலுக்கு தேவையான ஊட்டச்சத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்வோம்.

எனக்கு அதிக கலோரி தேவைப்படுமா?

ஆம், சாதாரணமாக உட்கொள்வதை விட 330-400 கலோரி  அதிகப்படியாக தேவைப்படும்- உங்களை பலமாக வைத்துக்கொள்ள. நமக்கு மட்டும் இன்றி இன்னொரு உயிருக்கும் நாம் உணவு படைப்பதனால் சற்றே அதிகமாக உணவருந்த வேண்டியுள்ளது.

இதற்கு நாம் தானிய வகை ப்ரேட், பீனட் பட்டர் மற்றும் தயிர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை எடுத்து கொள்ளவேண்டும்.நாம் பழங்களை உட்கொள்வதற்கு முன் அதை நன்றாக கழுவிய பிறகே உட்கொள்ளவேண்டும். ஏனெனில்,பூச்சி கொல்லியின் எச்சம் உணவோடு சேர்ந்தால் தாய் மற்றும் குழந்தை இரண்டுமே பாதிக்கப்படும்.எனவே ,நல்ல உணவுவகைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்

பாலூட்டும்போது  எந்தவகை உணவை உட்கொள்ளவேண்டும்?

நன்றாக பால் சுரக்க, நாம் இறைச்சி,முட்டை,பால்பொருட்கள்,பீன்ஸ்,அவரை வகைகள்,தானிய வகைகள் மற்றும் கடலுணவு (மெர்குரி) போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும். விதவிதமாக உணவு எடுத்துக்கொள்ளும்போது குழந்தைக்கு வெவ்வேறு  சுவைகள் கிடைக்கும்.இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாலூட்டுவதை நிறுத்துவது சுலபமாக இருக்கும்.

தண்ணீர் எவ்வளவு பருகவேண்டும்?

தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.முக்கியமாக நமது சிறுநீர் அதிக மஞ்சளாக தோன்றும்பொழுது தண்ணீர் அதிகம் பருகவேண்டும். பாலூட்டும்பொழுது அருகில் எப்பொழுதும் தண்ணீர் வைத்துக்கொள்வது நல்லது.

மேலும் பழச்சாறு நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சக்கரை அதிகமாக சேர்ப்பது கேடு விளைவிக்கும். மேலும், தேயிலை சார்ந்த பொருட்கள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையேல், குழந்தையின் உறக்கம் பாதிக்கப்படும்.

சைவர்களுக்கான உணவுத்திட்டம்

 1. கால்சியம், புரதம்,இரும்பு சக்தி அதிகம் உள்ள உணவை தேர்வு செய்யுங்கள். இரும்பு சக்தி அதிகமாக அவரை,கீரை,தானியம்,பட்டாணி,உலர்ந்த திராட்சை போன்றவற்றில் இருக்கும். புரதம் அதிகமாக பால்பொருட்கள்,முட்டை, சோயாபீன்ஸ் மற்றும்  கடலையில் உள்ளது. கால்சியம் கீரை,பால்பொருட்கள்,தயிர் மற்றும் தானிய வகைகளில் உள்ளது.
 2. வைட்டமின்-பி12 உணவில் சேர்க்கவேண்டும்.அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். மேலும் வைட்டமின்-டி மிக மிக அவசியம். ஏனெனில் ,அது குழந்தையின் எலும்பை வலுவாக்கும். எனவே , சூரிய ஒளி மற்றும் பசும்பால் அவசியமாகின்றன.

எந்தவகை உணவை உட்கொள்ளக்கூடாது?

 1. மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது பாலின்வழியே குழந்தையின் உடலில் கலந்து தீங்கு விளைவிக்கும்.நீங்கள் மது அருந்துவீர்கள்  என்றால் ,தங்கள் உடலில் இருந்து மது நீங்கும் வரை பாலூட்டக்கூடாது. மது முழுமையாக நீங்கிய பிறகே பாலூட்ட ஆரம்பிக்க வேண்டும்.
 2. தேயிலை சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக , ஒரு நாளைக்கு 2-3 முறைக்கு மேல் தேனீர்(காப்பி)  அருந்தக்கூடாது.இல்லையேல்,குழந்தையின் உறக்கம் பாதிக்கப்படும்.
 3. கடலுணவு வகைகளில் மெர்குரி அளவு அதிகம் இருந்தால் குழந்தையின் நரம்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.எனவே மெர்குரி அளவு அதிகம் உள்ள வஞ்சிரம்,வாளமீன் போன்றவற்றை உண்ணக்கூடாது.வாரத்திற்கு ஒருமுறை மீன்வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

நமது உணவுமுறை குழந்தையை எவ்வாறு பாதிக்கும்?

நாம் உட்கொள்ளும் உணவானது குழந்தைக்கு அருவருப்பையும் அல்லது அலர்ஜியையும் உண்டாக்க வாய்ப்புள்ளது.உதாரணமாக, அது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே அதற்கு தகுந்த சிகிச்சை செய்ய வேண்டும்.

நாம் உண்ணும் உணவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சந்தேகம் கொண்டால்,அதை ஒரு வாரத்திற்கு உண்ணாமல் இருக்கவேண்டும்.பிறகும் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட்டால் வேறு ஏதோ ஒன்றே காரணம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், நாம் பால்பொருட்கள்,மீன்,சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவேண்டும். மேலும் வாய்வு பொருட்களான வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சில தாய்மார்கள் வாய்வு உணவு அல்லது காரமான உணவே இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்கின்றனர். இது எந்தவரையில் உண்மை என்பது தெரியவில்லை.

நமது உணவுதிட்டத்தை நினைவில் கொள்ளவும்,பிரச்சனைகளை தவிர்க்கவும் ஒரு டைரியில், நாம் என்ன சாப்பிட்டோம் என்று தினம்தோறும் எழுதுவோம். இதன்மூலம் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாம் என்னென்ன உணவு உட்கொண்டோம் என்பதை வைத்து கண்டுபிடிக்கலாம். எதை தவிர்ப்பது என்று முடிவு எடுக்க சுலபமா இருக்கும். மேலும் ஒரு உணவை தவிர்பதால் எந்த வித பாதிப்பும் இல்லை என்றால் அதை திரும்ப சேர்த்துக்கொள்ளலாம்.

எனவே,நாம் பாலூட்டலின்போது எடுத்துக்கொள்ளும்   உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வதே உண்மையான உணவுதிட்டம் ஆகும்.இதை தாய்மார்கள் அனைவரும் நினைவில் கொண்டு பயன் பெருமாறு வேண்டுகிறேன்.

 • 7
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Oct 06, 2019

குழந்தைக்கு தலை முடி உதிர்கிறது

 • அறிக்கை

| Oct 06, 2019

என் குழந்தைக்கு 3 மாதம் நடக்கிறது பால் போதுமான அளவு குடிப்பதில்லை ஏன்?

 • அறிக்கை

| Oct 06, 2019

En kulanthai vaairu niriya paal kudika matikira ena karanam

 • அறிக்கை

| Sep 30, 2019

Ennoda ponnuku 9month aguthu 6kg than irukka ennaku food chart sollunga

 • அறிக்கை

| Jul 08, 2019

how does milk secret during pregnancy

 • அறிக்கை

| Jan 22, 2019

super. thank u.

 • அறிக்கை

| Dec 03, 2018

En kozhanthai ku thalai valathu puram amungi vittathu enna seivathu ippoluthu 6 maatham

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}