• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

பருமன் ஆரோக்கியம் அல்ல: உடல் பருமன் காரணங்கள் & அபாயங்கள்

Santhana Lakshmi
1 முதல் 3 வயது

Santhana Lakshmi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 12, 2018

சமீபத்தில் தோழியின் குழந்தை பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன். பிறந்தநாள் விழாவில் குழந்தைகள் இல்லாமலா! ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தைகள் என்ற கணக்கில் அந்த விழா குழந்தைகளால் நிரம்பியிருந்தது. அப்பொழுது, என் பக்கத்தில் வந்து அமர்ந்த தோழி ஒருத்தி எதார்த்தமாக சொன்னால், பாருங்க ஒவ்வொரு பாப்பாவும் எப்படி இருக்கு, நல்லா ”கொழுக்கு மொழுக்குன்னு” என்னத்த தான் கொடுப்பாங்களோ!. நானும்தான் என் குழந்தைக்கு எல்லாம் கொடுக்கிறேன். ஆனா கொழு கொழுன்னு ஆகமாட்டேங்கிறான் என்று வாஞ்சையுடன் வருத்தப்பட்டு சொன்னாள்.

தோழி சொன்னதுபோல், அங்கு வந்த பாதி குழந்தைகள் குண்டாகத்தான் இருந்தார்கள். ஆனால், ஒரு பந்தை தூக்கி போடவோ, ஓடவோ கஷ்டப்பட்டார்கள். தோழியின் வாஞ்சையில் வேண்டுமானில் வருத்தம் இருக்கலாம். ஆனால், அவள் சொன்ன, ”கொழுக்கில்தான் ஏதேனும் கொழுப்பு இருக்குமோ!” என்ற சந்தேகம் எட்டிப்பார்த்தது.

இந்த கொழு கொழு பேபி கவலை என் தோழிக்கு மட்டுமல்ல. குழந்தை வைத்திருக்கக்கூடிய எல்லோருக்குமே இருக்கக்கூடியது. ஏனெனில், குழந்தைகள் பார்க்க மொழுமொழுன்னு சப்பியாக இருப்பதுதான் அழகு என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம் விரும்புகிறோம். ஆனால், அந்த அழகு ஆரோக்கியமா? என்று நினைக்க தவறுகிறோம்.

’ஒபிஸிட்டி” இந்த வார்த்தையை சொல்லவும் என்னது, ’எந்திரன் ரோபோ சிட்டி’யா என்று காமெடியாய் கலாய்க்கவேண்டாம். இன்று நம்மையும், நம் குழந்தைகளையும் வதைப்பது. கொஞ்சம் நம்மூர் மொழியில் சொன்னால், உடல் பருமனாக இருப்பது.

அதென்ன, உடல் பருமன். கொஞ்சம் குண்டா இருந்தா உடனே அதை நோய்ன்னு சொல்வீங்களா? என்று சண்டைக்கு வரவேண்டாம். இன்று, நம் நாட்டில் மட்டுமல்ல உலகிற்கே மிகப்பெரிய உடலியல் பிரச்சனையாக இந்த உடல் பருமன் வடிவெடுத்துள்ளது. முன்பெல்லாம், ஒல்லியாக இருந்தால் ’நோஞ்சான்’ என்று சொல்வார்கள். அப்படித்தான், இப்பொழுது, சற்றே அதிகமாக சதை என்றால் ’ஒபிஸிட்டி’ என்கிறார்கள்.

அப்ப, ஒரு மனுசன் எப்படித்தாங்க இருக்கிறது என்று கேட்டீங்கனா, ஆரோக்கியமாக இருப்பது. நாமெல்லாம் ஆரோக்கியமாத்தான் இருக்கிறோமா என்ற கேள்வியை முதலில் நமக்கு நாமே கேட்போம்.

உடல் பருமன் அளவீடு:

எதை வைத்து நமது உடல் பருமனாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளத்தான், ’பாடி மாஸ் இண்டெக்ஸ்(BMI)’ என்று சொல்லக்கூடிய உடல் பருமன் அளவீடு என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது.

அதாவது, ஒருவரின் சராசரி உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையை வைத்து கணக்கிடப்படுகிறது. இந்த உடல் எடை கூடுதலாக இருக்கும்பட்சத்தில், அது ஒருவரின் உடல் பருமனாக உள்ளதாக இருக்கிறது.

உடல் பருமனும் குழந்தை நலமும்:

முன்பெல்லாம், பெரியவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த பிரச்சனை, தற்பொழுது இளம் தலைமுறைகளை மட்டுமின்றி, நாளைய தலைமுறையான விட்டுவைக்காமல் வளர்ந்து வருகின்றது.

பரம்பரை பிரச்சனை என்று இருந்த உடல் பருமன், தற்பொழுது பாலிசியில் சேர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆம், முன்பு, குடும்பத்தில் யாருக்கேனும் ஒபிசிட்டி பிரச்சனை இருந்திருந்தால், மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு வந்தது.

தற்பொழுது, இதற்கு முக்கிய காரணமாக நமது வாழ்க்கைமுறையும், உணவு மற்றும் பழக்கவழக்கங்களும் தான் காரணம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

உடல் பருமனுக்கான காரணங்கள்:

அமெரிக்காவைச் சேர்ந்த உடல்நலம் மற்றும் மனிதவளம் நடத்திய ஆய்வில் உடல் பருமனுக்கு முக்கிய காரணமே, நமது உணவுமுறைதான் என்று கூறியிருக்கிறது. அதாவது, அதிகமான ஜங்க் புட் மற்றும் சோடா நிறைந்த பானங்களை அருந்துவதே உடல் பருமனுக்கு முக்கிய பிரச்சனை என்று அந்த நிறுவனம் ஆய்வில் கூறியிருக்கிறது.

 1. உணவே மருந்து என்று வாழ்ந்த நாம் இன்று மருந்தே உணவே மாற, நம் உணவுமுறைகளும், வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாகும்.
 2. குழந்தை கருவிலிருக்கும்போதே குழந்தைக்கான உணவில், கவனம் செலுத்தவேண்டும். தாய் அதிகமான துரித உணவுகளை உட்கொண்டாலும், தாயும் சேயும் இதனால் பாதிக்கப்படுவர்.
 3. அதிகமான இனிப்பு நிறைந்த சாக்லேட்கள், சோடா பானங்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சரியான நேரத்திற்கு உணவருந்தாமல் இருப்பது, போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவை.
 4. அதிகமான வெண்ணெய் மற்றும் மாவு உணவுப்பொருட்கள். இரவு நேரங்களில் தொடர்ந்து சாப்பிடுதல், செரிமானமின்மை போன்றவையும் உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம்.
 5. தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பின்மை ஆகியவை மிகப்பெரிய காரணமாகும்.இன்றைய காலகட்டத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து டிவி, போன் பார்ப்பது அதிகமாகவிட்டது. இதுவும் முக்கிய காரணம்.​​பருமனால் வரக்கூடிய நோய்கள்:ஒரு பிரச்சனை என்றால், வெயிட்டால் பல பிரச்சனைகள் நம் உடலுக்குள் வந்துவிடுகிறது.நோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், தூக்கமின்மை, மன அழுத்தம், எலும்பு பிரச்சனை. மூட்டுவலி போன்ற நோய்கள் வர பெரும்பான்மை காரணமே இந்த உடல் பருமன் தான். அதுமட்டுமல்ல, இளம் வயதில் வரக்கூடிய இருதய நோய்க்கு முக்கிய காரணமே உடல் பருமனே! என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

உணவே மருந்தும், உடற்பயிற்சியும்:

என்னைக்கு நடப்பதையும், நல் உணவையும் கைவிட்டோமோ, அன்றே நம் உடம்பில் இதுபோன்ற அந்நியர்கள் உடம்பில் வந்து உட்கார ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பழக்கங்களை அடுத்த தலைமுறையான நம் குழந்தைகளுக்கும்  கற்றுத்தருகிறோம்.

 • எலும்போடு சதையொட்டி இருந்தால்தான் உடம்புக்கு நல்லது’ என்று நம் பாட்டிகளும், அம்மாக்களும் சொல்வதை மறந்துவிடுகிறோம். அதனால்தான், குழந்தைகளுக்கு கை, கால்களை நன்கு பிடித்துவிட்டு, கால்சியம், இரும்பு நிறைந்த உணவுகளை ஆரம்பத்திலே கொடுக்கச் சொல்வார்கள்.
 • குழந்தைப்பருவத்திலே பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்களை பழக்கப்படுத்தி விடவேண்டும். ஒருவயது வரை இனிப்புகளை அறிமுகப்படுத்தக்கூடாது. அதிலும், குழந்தைகள் சுவைக்கும் இனிப்பும் புளிப்பும் பழங்களாகவே இருத்தல் வேண்டும்.
 • உடற்பயிற்சியும் விளையாட்டும் தான் பாட்டிகளையும் தாத்தாவையும் தளராமல் நடைப்போட வைத்தது. நாமோ, நம் குழந்தைகளை வீடியோ கேமில்தான் விளையாட வைக்கிறோம்.
 • சேற்றில் விளையாடி செந்தாமரை பறித்தவர்கள் நம்மவர்கள். அட்லீஸ்ட், நம்வீட்டு குழந்தையை பார்க்கிலாவது விளையாட விட வேண்டும். ஓடட்டும், விழட்டும், விறுவிறுக்க வேர்க்கட்டும் அக்கறையோடு அனுமதியுங்கள்.
 • வாரத்தில் ஒருமுறையாவது குடும்பத்தோடு விளையாடுங்கள். நடைப்பயிற்சியை பழக்குங்கள். குழந்தைகளுக்கேற்ப குனிந்து நிமிரும் அளவிற்கு சிறுசிறு வேலையை கொடுங்கள்.
 • தடை சொல்லாமல் பள்ளிகளில் விளையாட அனுமதியுங்கள். ஏதேனும், ஒரு விளையாட்டில் சேர்த்து விடுங்கள். நீச்சல் கற்றுக்கொள்ளட்டும். விளையாட்டே உடல்பருமனுக்கான முதல் மருந்து. மாறாக, மாத்திரைகளும் மருந்துகளும் அல்ல.

நம் உணவையும் வாழ்க்கைமுறையையும் நாம்தான் வகுக்க வேண்டும். சில நொடிகளில் கடந்து போகும் விளம்பரங்களும், நாகரீகம் எனும் மாயையும் அல்ல!

”உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!” என்று திருமூலர் பாடியது. இந்த உயிரை பாதுக்காக்கத்தான் உடம்பே தவிர, உடம்பை அல்ல. ஆதலால், நமது உயிரான குழந்தைகளை உடல் பருமனிலிருந்து காப்போம்!

 • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Dec 12, 2018

அருமையான பதிவு. இன்றும் குழந்தைங்க கொழு கொழுன்னு இருந்தால் தான் நம்முடைய அம்மாமார்கள் சத்தாக இருப்பதாக ஏற்றுக்கொள்வார்கள்..

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}