• உள்நுழை
  • |
  • பதிவு
கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

பாதுகாப்பான பசுமை தீபாவளி

Parentune Support
கர்ப்பகாலம்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 06, 2018

பட்டாசு இல்லாமல் தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாட முடியாது என்றே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுகின்றோம். ஆனால், தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட எவ்வளவோ அருமையான விஷயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. எல்லா பண்டிகைகளுக்கும், விழாக்களுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். ஒரு வடிவம் இருக்கும். ஒரு பழமை இருக்கும். இன்றைய நவீன காலம் அந்தப் பண்டிகையின் குறையத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகக் குழந்தைகளை அதிகமாகப் பட்டாசுகளுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவத்தைக் கொடுக்க வைத்துப் பழக்கிவிட்டோம்.
இந்த வருடம் தீபாவளி திருநாளை நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து விபதில்லாத, மாசில்லாத வகையில் பசுமையாகக் கொண்டாடித்தான் பார்ப்போமே…

தீபம் ஏற்றுவோம்
தீபாவளியின் உயிர் நாடியே தீபம் தான், பட்டாசு இல்லை. தீபாவளி நாளன்று வீட்டு வாசலில் வரிசை வரிசையாய் தீபங்கள் ஏற்றி இருண்டு இருக்கும் வீட்டைப் பிரகாசமாக ஆக்குவது என்பதே அந்நாளின் தொன்மையான பழக்கம். தீபத்தின் அழகியலை நம் குழந்தைகளுக்குப் புரிய வைப்போம். இப்போது மண்ணிலான விளக்குகள் விதவிதமான வண்ணங்களில், வடிவங்களில் வருகின்றது. குழந்தைகளை அழைத்துச் சென்று விளக்குகள் வாங்கி, அவர்களோடு சேர்ந்து விளக்கேற்றுவோம். வீடெங்கும் ஒளிரச்செய்வோம்.

வண்ண வண்ண கோலங்கள்
தீபாவளி பண்டிகையைச் சிறப்பிக்கும் மற்றொன்று கோலம். அடுக்கு மாடி குடியிருப்பில் எங்கே போய் வண்ண வண்ண கோலம் போட என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் கோலம் என்பது ஆண்/ பெண் இருக்குழந்தைகளுக்கும் பிடிக்கும். அவர்கள் அலங்கோலமாக ஆக்கிவிடுவார்கள் என்று நாம் தான் வாய்ப்பு கொடுப்பதில்லை. கோலம் தேர்ந்தெடுப்பது முதல் முடியும் வரை உள்ள வேலையில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கலாம்.

வண்ணங்கள் மற்றும் அலங்காரம் டிபார்ட்மெண்டை குழந்தைகளிடம் ஒப்படைத்து விடுங்கள். பல நிறங்களிலான மண், அரிசி, கோதுமை, கடலை மாவு, செங்கற் பொடி, குங்குமம், காபி பொடி, டீ தூள், தானியம், பருப்பு வகைகளை வண்ணம் தீட்டப் பயன்படுத்தலாம். பல்வேறு நிறங்களிலான இயற்கையான மலர்கள், இலைகள், மொட்டுகள் பயன்படுத்தலாம். பிறகு பாருங்கள், கோலத்தை அவர்களுடைய படைப்பாற்றலை வைத்துக் கோலாகலம் ஆக்கிவிடுவார்கள்.

ப்ளாஸ்டிக் இல்லாத அலங்காரம்
சிறு வயதிலிருந்தே குழந்தைகளை வீட்டில் உள்ள அன்றாட வேலைகளில் பங்கெடுக்கப் பழக்குவதன் மூலம் அவர்களுக்கும் இந்த வீட்டைச் சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் பொறுப்பு இருக்கிறது என்று உணர்வார்கள். அதுவும் தீபாவளி போன்று பண்டிகைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எவ்வளவோ வீட்டு அலங்கார பொருட்கள் பார்ப்பதற்கு புதுமையாக இருப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

மா இலைகள், பூக்கள், காகிதங்கள், மண், மூங்கில் மற்றும் மரப்பொருட்கள் போன்றவைகளை கொண்டு வீட்டை அலங்காரம் செய்யலாம். குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் பிறகு அவர்களே அலங்கார பொருட்களைத் தயார் செய்துவிடுவார்கள். உதாரணத்திற்கு இந்தத் திபாவளிக்கு ஏதாவது புதுமையாக அலங்காரம் செய்ய யோசனைகளை மட்டும் அவர்களிடம் கேளுங்கள். பிறகு, நம்மைத் திகைக்க வைக்கும் அளவிற்கு யோசனைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

விருந்தோடு தீபாவளி
இப்போதெல்லாம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் சாப்பிடுக்கிறோம் என்று கணக்கிட்டால் மிகக் குறைவு. தீபாவளியன்று விருந்தின் முக்கியத்துவத்தை அறிய வைக்கலாம். சேர்ந்து தான் சப்பிடுகிறோமே என்பதில்லை விஷயம். ஒரு நாளாவது, ஒரு வேளையாவது விருந்தினரோடு, நண்பர்களோடு, உறவினர்களோடு அல்லது ஊரில் உள்ள தாத்தா பாட்டியோடு குழந்தைகளை விருந்து சாப்பிட வைத்தால் இந்த நாளின் இன்னொரு சிறப்பை அனுபவமாகக் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளை பெரியவர்களுக்கு சாப்பாடு பரிமாறச் சொல்லுங்கள். உண்ணும் நேரம் முழுவதும் அவர்கள் பம்பரம் போல் சுற்றி வேலை செய்வதை நாம் பார்க்க முடியும்.

பகிர்ந்து உண்ணும் பழக்கம்
இந்த மாதிரிப் பண்டிகைகள் மூலம் நம் குழந்தைகளுக்குப் பகிர்ந்து உண்ணுவதை கற்றுக் கொடுப்பதோடு. அவர்களின் நேரம் இந்நாளில் தரமாகச் செலவாகும். நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கம் வீட்டார், ஆசிரியர் மற்றும் வசதில்லாதவர்கள், காப்பகங்கள் போன்ற இடங்களுக்குக் குழந்தைகளை இனிப்பு வகைகளை வழங்க வைக்கலாம். கொடுக்கும்போது ப்ளாஸ்டிக் பொருட்கள், கவர்களை தவிர்த்து விடுங்கள். வாழை இலை, மூங்கில், சில்வர் போன்றவற்றை பயன்படுத்தலாம். பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதோடு சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாகக் கொடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கற்றுக் கொள்வார்கள்.

E-crackers
பட்டாசு இல்லாமல் எப்படிங்க தீபாவளி கொண்டாட முடியும் ? என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிர்ச்சியடைகிறோம். ஆனால் பட்டாசு வெடிக்கும்போது அதில் பயன்படுத்தப்பட்ட பலவிதமான நச்சுப்பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும். இவற்றை சுவாசிப்போருக்கு சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் கேன்சர், சரும வியாதி, கண் நோய், தைராய்டு கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

பட்டாசு இல்லாத தீபாவளியை எண்ணி பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து இப்போது சந்தைகளில் விற்கப்படும் e-crackers வாங்கி வெடிக்கலாம். அதவது இந்த ரக வெடிகள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்திலிருந்து தயாரிக்கப்பட்டவை. மேலும் Vacuum combustion தொழில்நுட்பம்மூலம் தயாரிக்கப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பில்லை. மற்றும் இதிலிருந்து அதிகளவு புகை, நச்சுப்பொருட்கள் வெளியேறுவதில்லை. சத்தமும் குறைவாகவே இருக்கும்.

பட்டாசு வெடிக்கும் கவனிக்க வேண்டியது…

பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடவே முடியாது என்று நினைப்பவராக இருந்தால் கீழ் கண்டவற்றை உங்கள் குழந்தைகளை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்துங்கள். விபத்து வந்தபின் வருந்துவதை விட, வராமல் காப்பதே சிறந்த பாதுகாப்பாகும்.


• பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடை அணிய வேண்டும். முடிந்தவரை காட்டன் ட்ரெஸ்ஸாக இருக்கட்டும்.
• பட்டாசுகள் வெடிக்கும்போது காலணிகள் கணிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
• குழந்தைகள் சட்டைப் பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.
• திரியில் தீ வைத்தும் வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. அருகின் சென்று உற்றுப் பார்க்கக் கூடாது.
• நீண்ட வத்திகளை கொண்டே பட்டாசு வெடிக்க வேண்டும்.
• தேங்காய் ஓடு, பாட்டில்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்க கூடாது. பெரியர்வகள் முன்னிலையில், பட்டாசுகளை சிறுவர்கள் வெடிக்க வேண்டும்.
• வெடிக்காத பட்டாசுகளில் உள்ள கரி மருந்தை எடுத்துக் கொளுத்தக் கூடாது.
• பட்டாசு கொழுத்தும்போது அருகில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், மணல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
• எரிந்து முடிந்த மத்தாப்பு வகைகள், வெடிக்காத பட்டாசுகளை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும்.
 

முதலுதவி கொடுப்பது எப்படி
எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிப்பவர்கள் மீது தீ விபத்து ஏற்பட்டால் உடனே ஓடக் கூடாது. உடனே தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். அல்லது தரையில் படுத்து உருள வேண்டும். தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும். பேனா மை, எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}