• உள்நுழை
  • |
  • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து குழந்தைகள் பயணம்

பயணத்தின் போது 0 - 1 வயது குழந்தைக்கான உணவுமுறைகள்

Santhana Lakshmi
0 முதல் 1 வயது

Santhana Lakshmi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 29, 2018

 0 1

எல்லா அம்மாக்களுக்குமே குழந்தைங்க ரொம்ப ஸ்பெஷல். குழந்தைகளுக்கான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றதுல அம்மாகளை மிஞ்ச யாருமில்ல. அப்படிப்பட்ட செல்லங்களுக்கான உணவை ரெடி பண்றதுக்கு ரொம்பவே மெனக்கிடுவாங்க. அதிலும், 1 வயது வரை உள்ள குழந்தைக்கு சாப்பாடு தயாரிப்பது மிகப்பெரிய சவால். அப்படியிருக்கும்போது, பயணம் செல்லும்போது குழந்தைக்கான உணவை தயாரித்து எடுத்து செல்வது சவாலோ சவால்.

பொதுவாக, 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் அவசியமானது. ஆதலால், கண்டிப்பாக 6 மாத காலம் வரை தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கான திட உணவுமுறை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு புது புது உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான், அந்த உணவு குழந்தைக்கு ஒத்து கொள்கிறதா என்று பார்க்கமுடியும். அதுமட்டுமில்லாமல், குழந்தை எந்த மாதிரியான டேஸ்ட்டை விரும்புகிறது எனவும் தெரிந்து கொள்ளமுடியும்.

குழந்தைகளுக்கு வீட்டிலே செய்யக்கூடிய உணவுகள் தான் சிறந்தது. அதிலும், 1 வயதுக்குட்பட்ட குழந்தைக்களுக்கு வெகு விரைவில் செரிமானமாக கூடிய உணவுகளைத்தான் தருவார்கள். குழந்தையை தூக்கிக்கொண்டு எங்காவது டிராவல் செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து எடுத்து செல்லலாம் என்பதை பார்க்கலாம்.

குழந்தைக்கான உணவுகள்:

கைக்குழந்தை, 6 மாத குழந்தைக்கு தாய்ப்பாலே போதுமானது. ஏனெனில், இந்த மாத குழந்தைக்கு தாய்ப்பால்தான் சிறந்த ஊட்டச்சத்தாகும். டிராவலிலும் குழந்தைக்கு தாய்ப்பாலை எளிதாக கொடுக்கலாம்.

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை மிகவும் சுலபமாக வீட்டிலே தயாரித்து எடுத்துச் செல்லலாம்.

இந்தவயது குழந்தைகளுக்கு கூழ், கஞ்சி, மசித்த பழங்கள், காய்கறிகள், பால், போன்றவற்றை கொடுக்கலாம்.

பழங்கள்:

முலாம் பழம், வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற சதைப்பற்றுள்ள பழங்களை நன்கு மசித்து ஒரு டிபன்ஃபாக்ஸில் அடைத்து எடுத்துச் செல்லாம். இந்த பழங்களை குழந்தைகளுக்கு பயணத்தின்போது கொடுக்கலாம். இந்த பழங்கள் குழந்தைக்கு எனர்ஜியை தருவதோடு, எளிதில் செரிமானமாக கூடியது. ஆப்பிள் பழமும் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆப்பிள் பழத்தை எடுத்துச் செல்லும்போது பழத்தை தோல் சீவி வேக வைத்து மசித்து எடுத்துச் செல்லவும். இதேபோன்று பழங்களை ஜூஸாகவும் எடுத்துச்செல்லலாம்.

வேகவைத்த காய்கறிகள்:

பச்சை காய்கறிகள் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகாது. காய்கறிகளை குழந்தைக்கு வேகவைத்துதான் கொடுக்கவேண்டும். கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்களை தனித்தனியாக வேக வைத்தோ, அல்லது  பருப்புடன் வேகவைத்து நன்கு மசித்து கிச்சடி போலவும் செய்து, குழந்தைக்கு பயணத்தின் போது கொடுக்கலாம். இந்த உணவு குழந்தையின் வயிற்றை நிரப்புவதோடு, நல்ல ஊட்டச்சத்தாகவும் இருக்கும்.

கூழ் கஞ்சி வகைகள்:

நம்மூரில் இளம் குழந்தைக்கு அதிகமாக கூழ் கஞ்சிதான் கொடுப்பார்கள். இந்த வகை உணவு மிகவும் சத்து நிறைந்தது. குழந்தையின் எடை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த உணவாகும். அரிசி கஞ்சி, கூழ் போன்றவையும் டிராவல் செய்யும்போது தயாரித்து எடுத்துச்செல்லலாம். அரிசியை வறுத்து அது குளிர்ந்தபிறகு மிக்சியில் அரைத்து அதனை கஞ்சியாக கிளறி ஒரு பாக்ஸில் அடைத்துச் செல்லலாம். ராகிமாவு, கோதுமை மாவிலும் கூழ் மற்றும் களி செய்து எடுத்துச் செல்லாம். சத்துமாவு கஞ்சியும் பயணத்தின்போது கொடுக்கலாம்.

பால்:

பால் மற்றும் பால் பவுடரை குழந்தைக்கு கொடுக்கலாம். மாட்டுப்பாலை நன்றாக காய்ச்சி ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், சூடான தண்ணீரில் பால்பவுடரையும் கலந்துக் கொடுக்கலாம்.

இட்லி:

பெஸ்ட் உணவில் முதல் இடம் என்றால் அது இட்லிக்குதான். அதிலும், குழந்தைக்கு கஞ்சி, கூழுக்கு பிறகு முதல் உணவாக கொடுப்பது இட்லிதான். டிராவலின் போது வெறும் இட்லியை பாக்ஸில்  எடுத்து செல்லலாம். பால் உடனோ  அல்லது வெந்நீருடன் பிசைந்து ஊட்டலாம். அதுபோல், நன்கு குழைந்த சாதத்துடன் ரசம் கலந்து மசித்தும் எடுத்து செல்லலாம். 

பொதுவாக, குழந்தைகளுக்கு வெளி உணவுகள் ஒத்துக் கொள்ளாது, அலர்ஜி அல்லது வயிற்றுப்பிரச்சனைகளை கொடுத்துவிடும். இதற்கு பயந்தே       டிராவல் செய்ய யோசிப்பார்கள். வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டிலே குழந்தைக்கான உணவை தயாரித்து எடுத்து சென்றால் பயணம் சுகமே! குழந்தையும் நலமே!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}