• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுவதால் என்ன பயன்?

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 24, 2019

காலங்காலமாக குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது. ஆனால் அறிவியல் பூர்வமான இது நிரூபிக்கப்படவில்லை. ஒரு குழந்தையின் நிறம் என்பது மரபணு சார்ந்ததாகவோ அல்லது பரம்பரை சார்ந்ததாகவோ மட்டுமே இருக்கும். ஆனால் கர்ப்பிணிகளுக்கு இந்த குங்குமப்பூவினால் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றது. மசலாக்களின் ராஜா என்றழைப்படும் இந்த குங்குமப்பூவுக்கு கேசர், கூங், ஜபரான் எனப் பல பெயர்கள் உண்டு. நிறைய உணவுகளில் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் இந்த பொருள் கர்ப்ப கால பெண்கள் இதை சேர்த்துக் கொள்ளும் போது நிறைய நன்மைகளை பெறுகின்றனர்.

தூய குங்குமப்பூவை அடையாளம் காண்பதற்கான வழிகள்

4-5 குங்குமப்பூக்களை சூடான தண்ணீரில் போட்டால் அது தங்கமாக மின்னும், வாசனை வரும். 24 மணி நேரத்திற்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருந்தால் அது ஒரிஜினல் என்று அர்த்தம். சூடான் தண்ணீரில் பூவை போட்டவுடன் சிவப்பாக மாறிவிடும், வாசனை வராது, சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்றுவிட்டால் ஒது ஒரிஜினல் கிடையாது. வாங்கும் போது அதன் நிறத்தையும் கவனியுங்கள். அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ப்ரஷ்ஷாக இருக்கும் குங்குமப் பூவை வாங்கி பயன்படுத்துங்கள். 

கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்துவது ?

குங்குமப்பூவினால் கருவுற்ற பெண்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றது. பாலுடன் இரண்டே இரண்டு குங்குமப் பூக்களை போட்டு பருகுவதால் உங்கள் தசைகள் ரிலாக்ஸ் அடையும், சீரண சக்தியை மேம்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் காலையில் எழும் போது மார்னிங் சிக்னஸ் இருக்கும். தலைசுற்றல், குமட்டல், சோர்வு போன்றவற்றை தினமும் அனுபவிப்பார்கள். எனவே இதற்கு ஒரு கப் குங்குமப் பூ டீ போட்டு குடித்தாலே இதமாக இருக்கும்.

இதயத்தை பலப்படுத்த உதவும். ரத்தம் சுத்தமடையும். இதை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. இதன் துவர்ப்பு தன்மை ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. அதனால் அனைத்து உணவிலும் சிறிது தூவி விடலாம். இதன் வாசனையும், ருசியும், மருத்துவ குணமும் நன்மையை தரும்.

கருவுற்ற பெண்கள் 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை சாப்பிடலாம்.
ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். பசியை நன்கு தூண்டுகிறது.
குறைந்த அளவு எடுக்க வேண்டும். அதிமாக உட்கொள்வதால் கருவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்கான அதிக அளவு சாப்பிடக்கூடாது. இதுவே நஞ்சாகவும் மாறலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடல் ரீதியாக, மன ரீதியாக சோர்வு, மன அழுத்தம் இவற்றை சந்திக்க நேரிடும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் குங்குமப் பூவை எடுத்து வந்தால் மூளையில் உள்ள செரோடோனின் ஹார்மோனை தூண்டி உங்கள் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்கி உற்சாகமாக்கும்.

கர்ப்ப காலத்தில் 3 - 4 குங்குமப் பூவை பாலில் போட்டு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தசைகளை ரிலாக்ஸ் செய்து கர்ப்பபை செயல்பாட்டை தூண்டுகிறது.

இரும்புச் சத்து இருப்பதால் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹூமோகுளோபின் அளவை பராமரிக்க குங்குமப் பூ பயன்படுகிறது. 
இயல்பாக கர்ப்ப காலத்தில் தூக்க வராது. தூக்கத்தை சீராக்க குங்குமப்பூ உதவுகின்றது.

குங்குமப் பூ இயற்கையிலேயே ஒரு ஆன்ட்ஆசிட் ஆகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினையை சரி செய்தல் போன்றவற்றையும் செய்கிறது.
எதிலிருந்து கிடைக்கிறது குங்குமப்பூ

குரோக்கஸ் சட்டிஸ் பூவின் உலர்ந்த மகரந்த முடிகள் தான் இந்த குங்குமப் பூ. இது அந்த பூவின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படுகிறது. ஒரு பூவிலிருந்து மூன்று குங்குமப் பூ முடிகள் மட்டுமே கிடைக்கின்றன. இந்தியாவில் காஷ்மீர் மலைப்பிரேசத்தில் அதிகமாக உற்பத்தி ஆகின்றது.

சரியான குங்குமப்பூவை தேர்ந்தெடுத்து, குறைந்த அளவை உட்கொள்ளும் போது உங்கள் கர்ப்ப காலத்தில் இந்த குங்குமப்பூ பல நன்மைகளையும், பயன்களையும் கொடுக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

  • 3
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Nov 18, 2019

We are urgently in need of Kidney donors with the sum of $500,000. 00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail. com Call or whatsapp +91 9945317569

  • அறிக்கை

| Jun 05, 2019

Hai mam. enaku 6 month aaguthu .but entha movement tum theriyala

  • அறிக்கை

| May 13, 2019

இரண்டாவது மாத கர்ப்பகாலத்தில் வாய் கசப்பாக உள்ளது ஏன் 🙏🙏🙏

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}