• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

0-12 மாத குழந்தைகளுக்கு வயது வாரியான ஊட்டச்சத்து உணவுகள்

Parentune Support
0 முதல் 1 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 28, 2019

0 12

புதிய பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்தை பற்றி அனைத்து விதமான அறிவுரைகளும் கேட்டிருப்பீர்கள். குழந்தை பிறந்த முதல் வருடம் என்பது  உடலில் வளர்ச்சிக்காக ஏற்படப்போகும் மாற்றங்களுக்கும் முதன்மையான காலம். நாம் குழந்தைப்பருவத்தில் என்ன உணவு உட்கொள்ளகிறோமோ அதுவே நமது நீண்டகால உடல் எடை, உடல் நலம், எதிர்ப்பு சக்தி, வயதுக்கேற்ற மாற்றங்கள் போன்றவற்றை தீர்மானிக்கும்.

புதிதாகப் பிறந்தவரின் ஊட்டச்சத்து தேவைகள் என்ன?

ஆனால்,எளிமையான சில வழிமுறைகள் மற்றும் தேர்ந்த நிபுணர்களின் அறிவுரைகளை கருதில் கொண்டு நீங்கள் உங்கள் குழந்தையின் வளமிக்க உடல்நலத்திற்கான வழிகளை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

முதல் 6 மாதங்களில் பிறந்த குழந்தைகளின் உணவு

தாய்ப்பலூட்டலே தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும். பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால்தான் அத்தியாவசிய உணவாகும்.

தாய்ப்பாலே தகுந்த ஊட்டச்சத்து மிக்க கலவை ஆகும். அதில்  முழுக்க முழுக்க எதிர்புரதம், நுண்ணுயிர் எதிர்ப்பி, நொதிகள் மற்றும் கொழுப்பு ஆசிடுகள் இருக்கின்றன (அவை மூளை வளர்ச்சிக்கு உதவுவன).

தாய்ப்பால் குழந்தையின்   சீரான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் (சுவாச நோய் மற்றும் இரைப்பை நோய்)  தற்காலத்திலும் பிற்காலத்திலும் உதவக்கூடியது. குழந்தை பிற்காலத்தில் நல்ல உணவை தேர்ந்தெடுக்க இதுவே வழிவகுக்கும்.

தாய்ப்பாலில் நன்மை பயக்கும் ஹார்மோன்களான ஆக்சிடாஸின் மற்றும் ப்ரொலக்டின் வெளிவருகின்றன. இதன்மூலமாக தாயின் உடல் எடை சுலபமாக குறைகிறது. மேலும், அவளது குழந்தையுடன் கூடிய பிணைப்பு அதிகரிக்கிறது.

6-12 மாத குழந்தை உணவு

4-6 மாதங்கள் வரை குழந்தைகளால் சரிவர செரிக்க இயலாது. குழந்தைகளின் உடல் எடை பிறந்த பொழுது இருந்ததை விட இரட்டிப்பாகும் பொழுது  திட உணவை ஏற்றுக்கொள்ள தயாராவர். இது 6 மாதத்திற்குள் நடக்கும்.

முதலில்,அவர்களுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திடஉணவை வழங்குங்கள் (தாய்ப்பாலுக்கு பதிலாக அல்ல). முதன் முதலில் அளிக்கும் திட உணவு சற்றே நீர்மமாக இருத்தல் நல்லது. அவசரப்பட வேண்டாம். புது உணவை அறிமுகப்படுத்த சிறிது காலாவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒரு புது உணவை அளியுங்கள். இதனால் குழந்தையின் எதிர்விளைவை காண அவகாசம் கிடைக்கும். ஏதாவது எதிர்மறையாக காணப்பட்டால் அடுத்த புது உணவை அளிக்க 1-3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். 

திட உணவு அட்டவணை

1. அரிசிச்சோறு

முதல் தாய்ப்பாலுடன் சாதத்தை அளிக்கலாம். இது அலர்ஜி ஏற்படாமல் தடுக்க கூடியது. இது தானிய வகைகளைவிட சிறந்தது (நிரூபிக்கப்படவில்லை). மேலும்,பருப்புச்சோறு மிக நல்லது.முயற்சித்து பாருங்கள்.

2. காய்கறிகள்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை அளிக்க வேண்டும். பழங்களை போல் அவை இனிக்க கூடாது. இனிப்பான உருளைக்கிழங்கு, கிழங்குவகை,பழச்சாறு, கேரெட் போன்றன சமைப்பதற்கும் மசிப்பதற்கும் சுலபமானதாக இருக்கும்.

3. பழங்கள்

காய்கறிகளுக்கு பின் பழங்களை அறிமுகப்படுத்துங்கள்.முதலில் பழங்களை கொடுத்தால் குழந்தைகள் இனிப்பு சுவையையே அனைத்து உணவிலும் நாடுவார்கள்.  இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

 • தாய்ப்பாலுடன் மசித்த வாழைப்பழம்

 • வேகவைத்த பழங்கள் (ஆப்பிள்,பேரிக்காய் போன்றன)

4. புரதம் நிறைந்த உணவு

குழந்தைகளுக்கு புரதம் அதிகம் உள்ள உணவான பட்டாணி, பீன்ஸ், அவரை வகைகள் போன்றவற்றை நன்கு வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம்.இதனால் அவர்களின் உடல்நலம் சீராகும். அதிக எதிர்ப்பு சக்தி பெறுவர்.

 

12 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைக்கான உணவு

இந்த உணவு உணவு விருப்பங்களை கவனமாக வழங்கவும்.

 1. மீன் வழங்குங்கள் - மீன்வகைகளை குழந்தைகள் எளிதில் ஏற்றாலும், சிறிது காலத்திற்கு பின் வழங்குவதே மிக சிறந்தது. 'மத்தி' போன்ற மீன்வகை பொதுவான அலர்ஜி உள்ள உணவாகும்.
 2. கொட்டைகள் மற்றும் பால் உணவுகள் - மேலும், முட்டை, வேர்க்கடலை,பசும்பால்,கோதுமை, சோயா போன்றவையும் அலர்ஜி ஆகும்.
 3. உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் மிளகுத்தூள் கொடுத்தால் என்ன - உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகு போன்றவற்றை கவனத்துடன் கையாள வேண்டும். இதை குழந்தையின் உணவில் சேர்த்த பிறகு  அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனரா என்று கண்காணிக்க வேண்டும்.
 4. புதிய உணவுகளை கொடுத்தால் என்ன - புது உணவை குழந்தை மிகுந்த பசியில் இருக்கு ம்பொழுது அறிமுகப்படுத்தலாம். உதாரணமாக, காலை உணவில் அவற்றை அளிப்பதே புத்திசாலித்தனமாகும்.
 5. இனிப்பை சிறிதளவு சேர்க்கலாம் - மனிதர்கள் இயற்கையாகவே இனிப்பு பிரியர்கள். எனவே, இனிப்பு உருளை மற்றும் பழவகைகளை அளியுங்கள் (இனிப்பு குறைவாக).
 6. வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும் - பழச்சாறு மற்றும் பழங்களை (வெள்ளை  சர்க்கரை உள்ளவற்றை) தவிர்க்கவும். இது முதல் வருடம் ஆகையால் தேனை தவிர்ப்பது நல்லது. நாட்டு சர்க்கரை, கருப்பட்டி என இனிப்பு சுவைக்காக சேர்க்கலாம்.
 7. முழு திட உணவுவகைகள் - குழந்தைகள் நன்றாக உண்ண கூடியவர்கள் ஆவர். எனவே, அவர்களுக்குக்கு எவ்வளவு உண்ண வேண்டும் என்பது நன்கு தெரியும். எனவே,அவர்களை வற்புறுத்தி உணவளித்தல் கூடாது. அவர்கள் தங்கள் பசியின் அளவிற்கேற்ப உணவருந்துவார்கள். மேலும், அவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட எவ்வகை உணவையும் அளிக்க கூடாது.

குழந்தைகளுக்கு திட உணவானது செரிமானம் ஆக சில கால தாமதம் ஆகும். இதனால் செரிக்காத உணவானது அவர்களின் மலத்தில் காணப்படும். அதனால் கவலை கொள்ள வேண்டாம்.

தீர்மானம்

ஒவ்வொரு குழந்தையும்  ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். சில குழந்தைக்கு எளிதில் உடல் எடை அதிகரிக்கும். சில குழந்தைகள் மெதுவாக உடல் எடையை அதிகரித்து க்கொள்ளும். குழந்தைகள் அதன் பசி அளவினை பொறுத்து உணவு உட்கொள்ளும். நாளுக்கு நாள் அதன் பசி அளவு மாறும். ஒரு நாள்  மிகுந்த பசியில் இருக்கும். ஒரு நாள் மசித்த வாழைப்பழம் கூட அதற்கு பிடிக்காது. எனவே, இதனால் கவலை கொள்ள வேண்டாம். மேலும், குழந்தையின் உடல் எடையை அடிக்கடி சரி பார்த்துக் கொள்வது நல்லது. 

குழந்தை ஒரு உணவை விரும்பவில்லை அல்லது அதை மறுத்தால் அதை தவிர்த்து விடுவதே சாலச்சிறந்தது. அது ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கூட சிறிது காலத்திற்கு பின் மீண்டும் அதை முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடிந்தவற்றை முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு புது உணவை அறிமுகப்படுத்தும் போது விழிப்புணர்வோடு, கவனத்தோடும் இருந்தாலே போதும். குழந்தை மீது  உங்களை விட அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேறு யாரும் இல்லை.

மருத்துவர்களிடம் அழைத்து செல்லும் பொழுது உடல் எடையை அறிந்து கொள்ளலாம். எனவே, கவலைப்பட வேண்டாம். மேலும், குழந்தையின் எடையை தவறாமல் பரிசோதிப்பது நல்லது. 

 

 

 • 13
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Dec 02, 2019

My baby 6 mnth old one day ku 4 times motion pora lean ah iruka kundave illa tholatholanu iruka

 • அறிக்கை

| Nov 24, 2019

Four month baby ku solid food kuduklama

 • அறிக்கை

| May 26, 2019

my baby cow milk kudikamatukiran

 • அறிக்கை

| May 24, 2019

Four month baby ku enna kudukalam sollunga

 • அறிக்கை

| May 16, 2019

ennoda girl babyku 6th month started ennum kuparavilla and ennoda milk pothuma alavukku eruku but baby propera kudika matingranga

 • அறிக்கை

| May 15, 2019

thank u so much useful tips.

 • அறிக்கை

| Apr 26, 2019

Yennoda ponnukku 2 months achu thaipal suthama ila mattu pal tha kudukkaram koda vera yedhachu food kudukkalama pls tell me

 • அறிக்கை

| Feb 25, 2019

thanks for ur tops

 • அறிக்கை

| Jan 31, 2019

oru vayadhitku meytpatta kulandhaiku weight adhikarikka kodukka wendiya satthana unavu patrina vilakkam thara mudiyuma?

 • அறிக்கை

| Jan 31, 2019

Baby weight increase Panna... yanna pannanum

 • அறிக்கை

| Jan 31, 2019

Enaku twins baby poranthu oru masasam akuthu ..Thai paal kuda matu paal kudukalama.

 • அறிக்கை

| Jan 27, 2019

en magaluku 4 vayathakirathu. weight kamiyaga igaral enaseivathuirukiral. Entha unavu koduthalum sapadamat

 • அறிக்கை

| Jan 03, 2019

என் மகன் பிறக்ம் ேபாக௶ 3 கி ே௶ இ௹ந்தான்.. இப்ேபா 8 மாதம் ஆகிற௶.. 6. 700 கி ேலா தான் இ௹க்கான்.. ஆனால் பாா்க்க ெராம்ப ஒல்லியாக இ௹க்கான். .. நான் என்ன ெசய்ய ேவண்ம்

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}