• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குழந்தைகள் பயணம்

பிறந்த குழந்தையை எப்போது வெளிச்சூழலுக்கு அழைத்து செல்லலாம்?

Sagar
0 முதல் 1 வயது

Sagar ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 29, 2019

இந்த தலைமுறை பெற்றோர்களுக்கு அறியாமையும் சரி விழிப்புணர்வும் சரி இரண்டுமே அதிகமாக இருப்பதை என்னால ஒரு தந்தையாக உணரமுடிகிறது. நகரங்களில் இருக்கும் பெரும்பாலான பெற்றோர்களின் பாட்டிகள் இல்லாத குறை எங்கும் குழந்தை வளர்ப்பில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தவிக்க வைக்கின்றது. குழந்தைகள் பிறந்த நொடியிலிருந்தே குழந்தை பராமரிப்பை கவனத்துடன் செய்து வருகிறோம்.

குழந்தை பிறந்து வெகு நாட்கள் வரை வெளியே அழைத்து வராமலும் சில குழந்தைகளை பார்த்திருக்கிறேன், பிறந்த சில தினங்களிலேயே குழந்தையுடன் சுற்றுலா செல்லும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். எப்போதுமே எல்லாலோர்குள்ளும் இருக்கும் கேள்வி பிறந்த குழந்தையை எப்போது வெளியில் அழைத்து செல்லலாம் என்பதே.. அதற்கான உதவிக்குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்.

குழந்தைகளுக்கு வெளியே அழைத்து செல்வதற்கான சரியான தருணம் எது?

குழந்தையை அழைத்து செல்ல வயது வரம்பு ஏதும் கிடையாது, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் வெளியே அழைத்து செல்வதற்கு எந்த தடையும் இல்லை, ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவர்கள் சிறிது காலம் வெளியே அழைத்து செல்ல வேண்டாம் என்பார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும் என்பதனால் கவனம் தேவை. குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சில உறுப்புகள் வளரும் சமயத்தில் வெளியில் செல்வது தவிர்க்கப்படவேண்டும்.

உங்கள் பிறந்த குழந்தையை வெளிச்சூழலுக்கு அழைத்து செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

பச்சிளம் குழந்தையை முதன் முதலில் வெளியில் அழைத்து செல்லும் போது கடினமாகவும், பதட்டமாகவும் இருக்கலாம். கவலை வேண்டாம், பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்..

வெளிச்சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடை

பிறந்த குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் முன் குழந்தைக்கு சரியாக ஆடை உடுத்தி இருக்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஆடை சொளகரியமாக இல்லையென்றால் குழந்தை அழத் தொடங்கும். குளிர் காலம் என்றால் அடர்த்தியாக இருக்கும் ஆடைகள் அணியுங்கள். குழந்தையின் கைகள், பாதங்கள், தலை மூடியிருக்க வேண்டும். கோடை காலம் என்றால், சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது குழந்தையை வெளியே அழைத்து செல்வதை தவிர்த்து விடுங்கள். தளர்வான பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைக்கு அணியுங்கள். அதிகமான ஜம்கி, நைலான் துணி ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது,     

சிறிய தூர பயணம்

முதன் முதலாக உங்கள் குழந்தையை வெளியில் அழைத்து செல்ல திட்டமிடும் போது அருகில்  உள்ள பார்க், கோவில் அல்லது நடைபயணம் போன்று சிறிய தூரப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் குழந்தை வெளிச்சூழலில் எப்படி உணர்கிறது மற்றும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகபப்டுத்தலாம். ½ மணி நேர பயணமாக இருந்தாலும், குழந்தைக்கு தேவையான விஷயங்களை ஒரு பையில் எடுத்துக் கொள்வது நல்லது.

நேரடி சூரிய ஒளியை தவிர்க்கவும்

புதிதாக பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் சென்ஸிடிவ்வாக இருக்கும். சூரிய ஒலீ குழந்தையின் மீது நேராக படும் போது குழந்தைக்கு வேனக்கட்டி, சூட்டுக் கொப்புளங்கள் வரும். அதனால் உங்கள் குழந்தையின் தோலில் கடுமையான வெயில் படாதபடி பார்த்துக் கொள்ளவும். உச்சி வெயிலில் குழந்தையை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்கவும்.

குழந்தையின் அத்தியாவசியமான பொருட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்

எங்கு, எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் வெளியில் சென்றாலும் உங்கள் குழந்தைக்கு அவசியமாக தேவைப்படுகிற பொருட்களை ஒரு பையில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். டயப்பர், மாற்றுத் துணி, துண்டு, பால் பாட்டில் மற்றும் அதன் கவர், ரப்பர் ஷீட், கை கால் உரை என குழந்தைக்கு தேவையான அடிப்படைப் பொருட்களை எடுத்து செல்லுங்கள். இதன் மூலம் நீங்கள் வெளியில் சென்றாலும் குழந்தையோடு ரிலாக்ஸாக இருக்கலாம்.

நெரிசல் மிகுந்த பகுதியை தவிர்க்கவும்

பச்சிளம் குழந்தைகளுக்கு சில மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் இருக்கும் இடத்தில் இருப்பதால் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும். பிறந்த ஒரு சில மாதங்களுக்கு நெரிசல் மிகுந்த பகுதி, அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் சூழல் போன்ற இடங்களை தவிர்க்கவும். அப்படியே கூட்டி செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதிக நேரம் கூட்டத்திற்குள் குழந்தையை வைத்திருக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

நோயுற்றவர்களோடு தொடர்பு வேண்டாம்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காரணத்தால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்களிடம் இருந்து குழந்தையை தள்ளி வைத்திருப்பது நல்லது. வழக்கமாக மருத்துவமனைக்கு உங்கள் குழந்தையை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் போதும் கூட உடல் நலம் சரியில்லா குழந்தைகளிடம் நெருக்கமான தொடர்பை தவிர்க்கவும்.

 

குழந்தையை வெளியே எடுப்பதன் நன்மைகள்

குழந்தையை ஒரு நடை அல்லது பயணத்திலிருந்து வெளியே எடுப்பதன் நன்மைகள் பின்வருமாறு. இங்கே படியுங்கள்

  • குழந்தைகள் பாதுகாப்பாக்கவும் அரவணைப்புடன் வசிக்கும் இடத்திலேயே இருப்பது சிறந்தது என்று நம்மில் பலரும் நினைக்கின்றோம், ஆனால் பல நன்மைகள் வெளியே செல்லும் போதும் கிடைக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.
  • வெளியே செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்து குழந்தைக்கு சென்றடைகிறது, இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
  • குழந்தையுடன் தாயும் வெளியே வருவதனால் பிரசவத்திற்கு பிறகு அம்மாவுக்கு வரும் மன அழுத்தம் குறைந்து நல்ல மனநிலை உண்டாகிறது. அது குழந்தையை மேலும் சிறந்த முறையில் வளர்க்க உதவும். இதனை மேலோட்டமாக பார்க்காமல் உணர்ந்து தாயின் மனநலத்தை சீர்படுத்தி விரைவில் உடளவிலும் மனதளவிலும் பிரசவ வலிகளில் இருந்து மீண்டு வர உதவுகிறது.

நல்ல காற்றோட்ட சூழலில் அழைத்து சென்று தாயையும் சேயையும் புத்துணர்வு பெற செய்யுங்கள்.

 

  • 3
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Feb 24, 2019

8 மாத குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான். 3 நாட்கள் வரைக்கும் திருசெந்தூர், இராமேஸ்வரம் கோயில்களுக்கு சொந்த காரில் சுற்றுலா அழைத்து செல்லலாமா?

  • அறிக்கை

| Feb 24, 2019

asdf

  • அறிக்கை

| Feb 13, 2019

en 8 month kulandhaya velila thukitu ponavey ala aarambichuduva adhuku ena reason

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}