• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

மழலையர் கல்வியில் பெற்றோர் எப்படி உதவலாம்?

Monika
3 முதல் 7 வயது

Monika ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 11, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

ஒரு குழந்தையின் வாழ்கையில் முதல் இரண்டு ஆண்டுகள்  முதல் "சுய அறிவினால்" கழிக்கப்படுகின்றன. இருந்த போதிலும், பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய இரண்டாவது வயது மூலம் தனக்கும் பிறருக்கும் இடையே வேறுபடுத்தி அறியும் ஆற்றல் பெறுகின்றனர். இந்த திறனால் அவர்கள் மற்ற உறவுகளை அடையாளம் காண முடியும். அத்தகைய பருவத்தில் பெற்றோர் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் மற்றும் ஆரம்ப வழிக்காட்டியாக இருப்பது மிகவும் அவசியமாகும்.எனவே குழந்தைப் பருவத்தில். இந்த இணைப்பு செய்யப்படவில்லை என்றால், அவர்களின் எதிர்கால உறவுகள் மற்றும் ஒழுங்கு சீர்குலையும்.பெற்றோர்களின் அரவணைப்பு மற்றும் கவனிப்பு முறை குழந்தைகள் தங்கள் சுற்றுச்சூழலை ஆய்வு செய்து வாழ வழிவகை செய்கிறது. பள்ளியில் எம்முறையானக் கல்வியைப் பெற்றாலும், பெற்றோர்களின் வழிகாட்டுதல் உள்ள குழந்தையே ஒழுக்கங்களாலும், கல்வியினாலும் சிறந்து விளங்கும்.

3 முதல் 4 வயது:

முன்னோக்கி நடக்கப் பழக்குங்கள். ஏனெனில் அப்பழக்கம் அவர்களின் தன்னம்பிக்கையை வளரச்செய்யும். மேலும்,அவர்களிடம் உள்ள பயத்தை நீக்கி தன்னாற்றலை வளரச் செய்யும். பிள்ளகள் கல்வியின் மூலம் அனைத்து ஒழுக்கங்களையும் கற்றுக் கொள்ள பெற்றோர்களே அவசியமாவர்.

4 முதல் 6 வயது:

சீர்மிகு சூழ்நிலையை ஏற்படுத்துவது அவசியமாகும். நன்றாக ஓடப் பழக்குங்கள். அவர்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்யுங்கள். ஏனெனில், ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்பதே உண்மை. மேலும், (தெருவில் கார்கள் போன்றவை) விழிப்புணர்வைக் கற்றுக் கொடுங்கள் மற்றும் கண்காணிப்பு மற்றும் சுயநிலையை பாதுகாக்க உதவி புரியுங்கள். இவ்வயதானது பள்ளி்க்கல்வியைத் தொடங்கும் வயதாகும். 

7 வயது மற்றும் அதற்கு மேல்:

பள்ளிக்கூடமானது அதிக நேரம் செலவழிக்கப்படும் ஒரே இடமாக இருப்பதால் பள்ளிக்கூடத்திலே கல்வி கற்பதற்கு மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும்படி உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். கல்வி கருத்தில், நமது கலாச்சாரத்தை கற்பிப்பதும் பயிற்சி செய்வதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இது மாணவர்கள் எதிர்காலத்திற்கான சரியான வழிகாட்டியாக இருக்கும்.

3-7 வயதிலான கல்வியின் அடிப்படை:

கல்வி என்பது ஒரு உறுதிமிக்க மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான  முதல் நிலை ஆகும். தொடக்கப் பள்ளிகளில் சிறுவர்களுக்குத் தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது.தற்காலத்தில், சிறுவர்கள் தொடக்கக் கல்விக்கான வயதை அடையுமுன்பே முகிழிளம்பருவக் கல்வி கற்க அனுப்பப்படுகின்றனர். இத்தகைய சூழல்களில், தொடக்கக் கல்வி, முகிழிளம்பருவக் கல்விக்கும், இடைநிலைக் கல்விக்கும் இடைப்பட்டகாலக் கல்வி ஆகும். கல்வியானது இவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது,

 • மொழி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துதல் - கல்வியின் முதல் நோக்கம் மொழி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துதலாகும். ஏனெனில், ஒரு குழந்தையின் அறிவின் தொடக்கம், மொழியிலேயேப் பிறக்கிறது. பின்னர், எழுத்துவடிவமாக உருப்பெறுகிறது.

 • மூளை திறனை மேம்படுத்துதல் - குழந்தைகள் தனக்கான உலகில், சிந்தனை ஆற்றலை கல்வியின் மூலமாகவே வளர்த்துக் கொள்கிறது.

 • சமூக மற்றும் உறவு ரீதியாக கற்பித்தல் - படிப்படியான வளர்ச்சி நிலையில், உறவு மற்றும் சமூக ரீதியான எண்ணங்களை கல்வியின் மூலம் கற்றுக் கொள்கிறார்கள்.

 • ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் - கல்வியானது நல்ல பழக்க வழக்கங்களையும், ஒழுக்கங்களையும் கற்பிப்பதன் மூலம் தூய்மையையும் பின்பற்றி வளர்வார்கள். அதுவே, ஆரோக்கியமான உடலிற்கும், மனதிற்கும் வழிவகுக்கும்.

பெற்றோர் பங்கு:

கற்றல் என்பது வாழ்வின் முன்மாதிரியாக இருக்கும். உங்கள் குழந்தைகள் எவற்றை நேசிக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிள்ளை எப்படி கற்றுக்கொள்கிறார்கள் என்பதை கவனித்தறியுங்கள். பள்ளியில் உங்கள் பிள்ளை என்ன கற்றுக்கொள்கிறார்களோ அதை ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். ஒன்றாக வாசிக்க நேரம் ஒதுக்குங்கள். அன்றாட வாழ்க்கையில் உங்கள் பிள்ளை என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பள்ளி கல்வியுடன் ஒன்றுபடுத்தி காட்டுங்கள். உங்கள் குழந்தைகளிடம் உலகம் இருவகை மனிதர்களைக் கொண்டுள்ளது என்பதையும் கற்றுக் கொடுங்கள்.அதில் அனைவரிடமும் அன்பும், பணிவும், துணிந்து போராடும் இயல்பையும் ஊட்டுங்கள். 

உங்கள் பிள்ளைகள் படிப்பது எப்படி முக்கியம் என்பதை உணரவும். சில உதாரணங்களைக் காட்டுங்கள். பிள்ளையைப் படிக்கும்படி முயற்சி செய்ய வேண்டாம். ஒரு நல்ல உதாரணம் அமைத்து கற்பனை திறனை வளரச்செய்யுங்கள். உங்கள் குழந்தையின் ஆசிரியர்களிடம், சகமாணவர்களிடமும் எப்படி பழகவேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். நல்ல நண்பர்கள் தேர்வு செய்ய உதவுங்கள். ஏனெனில் நல்ல நண்பர்கள்தான் பிற்காலத்தில் நல்ல வாழ்வின் வழிகாட்டி ஆகிறார்கள்.

குழந்தைகள் எப்படிகற்பிக்க வேண்டும் (வயது 3 முதல் 7வரை):

 • பிள்ளைகள் சொல்வதைக் கேளுங்கள் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் செய்யுங்கள்.

 • உங்கள் குழந்தைகளுக்கு சத்தமாக வாசிக்கவும் கற்றுக் கொடுங்கள். 

 • ஒரு வகையான மரியாதையுடன் பேசுங்கள்.

 • குழந்தைகள் உங்களிடம் கேள்விகளைக் கேட்கவும் புத்தகத்தைப் பற்றி பேசவும் அனுமதிக்கவும் செய்யுங்கள்.

குழந்தைகள் மலர் போன்ற இருதயம் படைத்தவர்களே. அதனால் தான் , குழந்தைகள் கடவுளுக்கு இணையாக கருதப்படுகிறார்கள். அவர்களை கடுமையானச் சொற்களால், காயப்படுத்தாதிருங்கள். குழந்தைகளை ஒரு அழகான சிற்பமாக மாற்றுவது பெற்றோர்கள் கையிலே உள்ளது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

எனவே, ஒவ்வொரு தாயாரும் தனது குழந்தைகளுக்கு நல்ல குருவாகவும் இருக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}