• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

கொரோனோவிற்கு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்

Jeeji Naresh
1 முதல் 3 வயது

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 15, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

முதலாம் அலையில் குழந்தைகளை இந்த நோய்த்தொற்று பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற நிலையில், தற்போது இந்த இரண்டாம் அலை கொரோனா தொற்றும் அதன் பிறகும் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கூட வைரஸ் தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கொரோனாவுக்கு பின் ஏற்படுத்தும் விளைவுகள், குழந்தைகளின் உடலுறுப்பை பெரிதும் பாதிப்படைய செய்கிறது. எனவே கொரோனோவால் குறைந்த அறிகுறிகளுடன் பாதிக்கபட்ட குழந்தைகள் மற்றும்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர் கண்காணித்து, ஏதேனும் அறிகுறி இருந்து, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

யாருக்கு அதிக பாதிப்பு:

இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் ரத்தசோகை, உடற்பருமன் உள்ளவர்கள், நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், ஆஸ்துமா, சிறுவயது நீரிழிவு (Childhood diabetes), பிறவி இதயக் கோளாறு, பிறவி சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் உள்ளவர்கள் தான் கொரோனா ஆபத்து மிகுந்தவர்களாக இருக்கின்றனர். அதனால் இந்த உடல் பாதிப்புள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றிற்குப் பிறகு குழந்தைகளை எவ்வாறு கவனிப்பது:

 • தொற்றிற்குப் பிறகு குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடல் சோர்வடையாமல் இருக்க ஊட்டச்சத்துள்ள உணவுகள் கொடுக்க வேண்டும். நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வீட்டில் தொற்று பாதித்தவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது
 • உடல் சோர்வாகவும், பலவீனமாகும் இருப்பார்கள். சரியாகி விட்டது என்று எண்ணி குழந்தையை வெளியில் விளையாட அனுமதிப்பது, பக்கத்து வீட்டுக்கு அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள்.
 • முடிந்தவரை நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது

மனரீதியாக உங்கள் குழந்தையை எவ்வாறு ஊக்குவிப்பது:

 • இந்த பெருந்தொற்று காரணமாக குழந்தைகள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மன ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்
 • உங்கள் குழந்தை சோகமாகவோ அல்லது சோர்வாகவோ காணப்பட்டால் உடனே அவர்களிடம் அது பற்றி பேசுங்கள். "தொற்றுநோய் என்றென்றும் நீடிக்கப் போவதில்லை என்பதையும் சீக்கிரமே நம்மை விட்டு இந்த வைரஸ் சென்றுவிடும் என்பதையும் குழந்தைகளுக்கு நினைவூட்டுவது முக்கியம்," வார்த்தைகள் மற்றும் அன்பு மூலமாக தைரியப்படுத்துங்கள்.
 • பள்ளி, நண்பர்கள், நெருங்கிய சொந்தங்களை இழந்திருகலாம். உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாமல் குழந்தைகளிடம் பதட்டமும், பயமும் ஏற்படலாம். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலான விஷங்களை கூறலாம்.
 • வீட்டிற்குள் அவர்களுக்கு விருப்பமான பொழுதுப் போக்கில் ஈடுபடுத்தலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். நல்ல எண்ணங்களின் முக்கியத்துவத்தையும், இந்த தொற்றைப் பற்றின அறிவை கற்றுத் தரவும் செய்யலாம்.
 • குழந்தைகளை திசைதிருப்புவதன் மூலம் அவர்களை மன ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். புத்தகம் படிக்க, படம் வரைய, கைவினை, கி போர்டு, கிட்டார் வாசிப்பு, செஸ், கேரம் ஆடுவது போன்றவற்றில் ஈடுபடுத்தபபடுத்தலாம்.

எந்த மாதிரியான உணவு பழக்கங்களை பின்பற்றுவது:

 • நல்ல உணவு பழக்கம் நீண்ட காலமாக ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது.
 • அதிகமாக தண்ணிர் எடுத்து கொள்ள வேண்டும்
 • பழங்களும் பழச்சாறுகளும் கொடுக்கப்பட வேண்டும். பால், பருப்பு, முட்டை, மீன், சுண்டல் போன்ற புரதச் சத்துள்ள உணவு வகைகள் கொடுக்க வேண்டியது முக்கியம்.
 • வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை, ப்ரக்கோலி, கீரை, தக்காளி, ஆரஞ்ச், கிரேப் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்
 • சோடா, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு பயன்பட்டைக் குறைப்பதும், சத்தற்ற, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம், பிரிட்டிஷ் டயட்டெட்டிக்ஸ் சங்கம், மற்றும் யுடி உணவு மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.
 • வாந்தி, வயிற்றுப் போக்கு இருந்தால் குழந்தைகளுக்கு தேங்காய் பாலில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தினமும் கொடுக்கலாம். அது வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி-யிலிருந்து குணமாக உதவும்.
 • மஞ்சள், மிளகு, இஞ்சி, துளசி, சீரகம், இலவங்க பட்டை, கிராம்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
 • குழந்தைகளின் உடலில் ஒருநாளில் குறைந்தபட்சம் அரைமணியில் இருந்து ஒரு மணிநேரமாவது சூரிய வெளிச்சம் படுவது அவசியம். எப்போதும் குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருந்தால் உடலின் சமன்பாடு பாதிக்கப்படும். வியர்ப்பது நல்லது.
 • பதப்படுத்தப்பட்ட உணவு, கடையில் உணவு, பேக்கெட் நொறுக்குத் தீனி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது

குழந்தையின் உடல்நலத்திற்கும் மனநலனிற்கும், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், நல்ல வெளிச்சம், நல்ல காற்று, ஆடிப்பாடி விளையாடுவது என்று குழந்தைகளின் உடல்நலத்திற்கு தேவையானதை  அமைத்து கொடுப்பதன் மூலம் கொரோனோவிலிருந்து குழந்தைகளை பாதுகாப்போம். கொரோனாவுக்கு பிறகும் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்க முடியும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}