• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

பிரசவத்திற்கான மருத்துவமனையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

என்னுடைய தோழி கர்ப்பமாக இருக்கும் போது பரிசோதனைக்கு ஒரு மருத்துவமனையை தேர்ந்தெடுத்தார். ஆனால் அங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதி கிடையாது. அங்குள்ள மருத்துவர்கள் சொல்லும் மருத்துவமனையில் பிரசவிக்கும் நேரத்தில் அட்மிட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் தோழிக்கும் 8 மாதம் இருக்கையில் திடீரென வயிறு இழுத்துப் பிடித்து வலிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த மருத்துவமனைக்கு அழைத்துப் பேசினால் உடனே நீங்கள் (அதிக செலவாகும்) மருத்துவமனையின் பெயர் சொல்லி அங்கே சேர்த்து விடுங்கள் என்றார்கள். தோழிக்கோ அதைவிட குறைவாக செலவாகும் மருத்துவமனையாக இருந்தால் வசதியாக இருக்கும் என்று எண்ணினார். ஆனால் அந்த மருத்துவமனையில் மருத்துவரின் போன் நம்பர் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இறுதியில் பெரிய சிக்கலாகிவிட்டது. ஆரம்பத்திலேயே மருத்துவமனையின் வசதிகள் பற்றியும், நமக்கு இது சரியாக இருக்குமா என்ற முன்னெச்சரிக்கையும் இருந்தால் சிக்கலான தருணங்களை சமாளிக்க முடியும்.

 

அதனால் கர்ப்ப காலத்தில் முன்கூட்டியே பிரசவத்திற்கான மருத்துவமனையை திட்டமிட்டு தேர்ந்தெடுப்பது மிக முக்கிய விஷயமாகும். இதில் மருத்துவமனையில் உள்ள சூழல், சேவை கட்டமைப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், செலவுகள், மருத்துவ காப்பீடு போன்ற தகவல்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நல்ல சேவை மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனையை தேர்ந்தெடுப்பதன் மூலம் பிரசவ நேரத்தில் பதட்டம் கொள்ள தேவையில்லை. ஒரு பாதுகாப்பும், சொளகரியமும் இருக்கும் போது தாய் தைரியமாகவும், நம்பிக்கையாகவும் பிரசவத்தை எதிர்கொள்வார்.

தாய் மற்றும் குழந்தைக்கு சிறந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்

தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமாக இருக்கும் சரியான மருத்துமனையை தேர்ந்தெடுக்க சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

வசிப்பிடத்திற்கு அருகாமையில் இருப்பது நல்லது

பிரசவ நேரத்தில் வீட்டின் அருகாமையில் மருத்துவமனை இருப்பது சிறந்தது. பிரசவ வலி எடுத்த உடனே அருகாமையில் இருந்தால் உடனே மருத்துவமனையை அடைந்துவிடலாம். அடிக்கடி பரிசோதனைக்காக செல்வதும் எளிது. தொலைதூர பயணத்தை தவிர்க்கலாம். பிரசவ நேரத்தில் வீட்டின் அருகே இருப்பவர்கள் அல்லது உறவினர்கள் உதவி செய்யவும் வசதியாக இருக்கும்.

பிரவசத்திற்கும் பிறந்த குழந்தைக்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய மருத்துவ வசதிகளும் இருக்க வேண்டும்

பிரசவ வார்டு, பிரசவத்திற்கு பிறகு தாயிம் சேயும் தங்கும் அறை, நியோ-நேட்டல் வசதிகள்( பிறந்த குழந்தைகளுக்கான வசதிகள்), ICU மற்றும் NICU வார்டு, அறுவை சிகிச்சை தியேட்டர்கள், அதிக ஆபத்து நேரும் போது தேவையான வசதிகள், சிறப்பு பராமரிப்பு வசதிகள், சுகாதாரம் இவை அnaiத்தும் ஒரு பிரசவத்திற்கான மருத்துவமனையை தேர்ந்தெடுக்கும் போது அவசியம் கவனிக்க வேண்டும். அவசர தேவைக்கான வசதிகள் இருக்கும் போது தாய் மற்றும் சேயின் நலத்தை பற்றி நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியிருக்காது.

24*7 நேரமும் மருத்துவ நிபுணர்கள் இருக்கும் வசதிகள்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனையில் 24*7 மருத்து நிபுணர்கள் இருக்குபடி பார்த்து கொள்ளுங்கள். திடீரென்ற அவசர காலம் மற்றும் ஆபத்து நேரங்களில் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. அவசரகால சூழ்நிலைகளை கையாள்வதற்கு முழுநேர மருத்துவ நிபுணர்கள் அதாவது மகப்பேறு மருத்துவர் மயக்க மருந்து நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள், நியோனாட்டாலஜிஸ் மற்றும் பல சிறப்பு மருத்துவர்கள் ஆகியோரின் உதவி அவசியம்.

மகப்பேறு மருத்துவரின் அணுகுமுறை

மருத்துவ வசதிகள் இருந்து மகப்பேறு மருத்துவரின் அணுகுமுறை சரியாக இல்லையென்றாலும் பிரச்சனை தான். மகப்பேறு மருத்துவரை பற்றி முன்கூட்டியே விசாரித்து வைப்பது நலம். ஆரம்பத்தில் இருந்தே பரிசோதனைக்கு மட்டுமில்லாமல் பிரசவத்திற்கும் இந்த மருத்துவர் ஏற்றவராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு சுகப்பிரசவம்/ சிசேரியன் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்க உதவியாக இருக்கும். ஆபத்தே இல்லாமல் இருந்தாலும் இபொதெல்லாம் சர்வ சாதரணமாக சிசேரியன் செய்கிறார்கள். அல்லது ஏதாவது சொல்லி பயமுறுத்தி செய்யும் மருத்துவமனைகளும் உண்டு. அனுபவமுள்ள, பொறுமையாக மற்றும் கருணையோடு அணுகும் மகப்பேறு மருத்துவர் கிடைத்தால் எல்லாம் நலமே.

ஸ்டெம் செல் வங்கி   

ஸ்டெம் செல் சேகரிப்பு செயல்முறை அந்த மருத்துவமனையில் திறம்பட நடக்கிறதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அதை பற்றிய விளக்கங்களை முன்கூட்டியே விசாரித்து வைப்பது சிறந்தது.

காப்பீடு கவரேஜ் வசதிகள்

அந்த மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு வசதிககள் உள்ளதா? என்னென்ன விதிமுறைகள் உள்ளது ? என்பதை விசாரிப்பது நல்லது. வெவ்வேறு பிரசவத்திற்கு வெவ்வேறு செலவீனங்கள் இருக்கும் அதனால் மருத்துவ கவரேஜ் பற்றிய விவரங்களை அறிந்து வைத்து கொள்வதன் மூலம் அந்த நேரத்தில் பதட்டப்பட தேவையில்லை.

மகப்பேறு செலவுகள்

இப்போது மகப்பேறு மருத்துமனைகள் ஏராளம் பெருகியுள்ளது. உங்களின் நிதி வரவை பொறுத்து தேர்ந்தெடுக்கலாம். இதற்கான செலவுகள் மற்ற  மருத்துவமனைகளில் எவ்வளவு ஆகிறது என்பதை விசாரிப்பது சிறந்தது. பிரசவ செலவு, மகப்பேறு மருத்துவர் செலவு, அறுவை சிகிச்சை தியேட்டர் மற்றும் பிறந்தகுழந்தை பராமரிப்பு செலவு, ரூம் செலவு, மருந்து செலவு மற்றும் துணை செலவுகள் என ஒவ்வொரு மருத்துவமனைகளும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள்  நிர்ணயித்து வைத்திருப்பார்கள். அதனால் ஒட்டு மொத்த செலவீனமும், மருத்துவ காப்பீடு கவரேஜ் பற்றி விவரங்களை கேட்டு பணத்தை திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பிரசவத்தின்போது தெரிந்து கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்

பிரசவ நேரத்தில் இன்ன பிற விஷயங்களையும் திட்டமிட்டு கொள்வது நல்லது. தாயுடன் குடும்ப உறுப்பினர் யார் தங்கப் போகிறார்கள். பிரசவித்த தாயையும், குழந்தையையும் எந்த நேரத்தில் உறவினர்கள் பார்க்கலாம், மருத்துவமனையில் நர்ஸ் – நோயாளி விகிதாச்சாரம் என்ன ? பாலூட்டுதலுக்கு தேவையான வசதிகள், புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக்க மற்றும் கையாள்வதற்கான பயிற்சிகளுக்கு எவ்வாறு உதவுகிறார்கள் போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 

பெண்களுக்கு ஒவ்வொரு பிரசவமும் இன்னொரு பிறவி என்று சொல்வார்கள். அந்த பிரசவத்தை சுகமான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான அனுபவமாக மாற்ற கணவர், குடும்பம் உறுப்பினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள் என இவர்களது அனைவரின் உறுதுணையும் தேவைப்படுகிறது. தாய் மற்றும் சேயின் நலம் காத்து இனிய பிரசவமாக அமைத்து கொடுக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| May 15, 2019

doctor explain VBAC please

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}