• உள்நுழை
 • |
 • பதிவு
கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் COVID - 19 பற்றி அவசியம் அறிய வேண்டியது

Dr Pooja Mittal
கர்ப்பகாலம்

Dr Pooja Mittal ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 22, 2021

 COVID 19
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பொதுமக்களை காட்டிலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இருப்பினும், கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் , வைரஸ் தொற்றிற்கான அறிகுறியிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது எப்போதாவது கோவிட் -19 க்கான அதே அறிகுறிகளை மிகவும் கடுமையாக ஏற்படுத்தலாம்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் covid-19 நிமோனியவின் பாதிப்பானது லேசானதாகவும் மற்றும் மீண்டுவர கூடியதாகவும் உள்ளது.

கர்ப்பகாலத்தில் கோவிட் 19  விளைவுகள்:

கோவிட் 19 உள்ள பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிக்கைகள் உள்ள நிலையில், தாயின் உடல் நிலை பாதிப்பால் தான் குறை பிரசவம் ஆனது என்றும் அல்லது இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கிறது என்பதற்கு எந்த தெளிவான சான்றுகளும் இல்லை.

இதய நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பனி பெண்களுக்கு அதிக விளைவை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் தொற்று பற்றின மனரீதியான பயம், சோர்வு, மன அழுத்தத்தை அதிகரிக்கும்.அவர்கள் தங்களது மருத்துவரிடம் இது பற்றி ஆலோசிக்கலாம்.

தாயின் மூலம் குழந்தைக்கு நோய் தொற்று பரவுதல் (குழந்தை பிறப்புக்கு முன் மற்றும் பிறந்த குழந்தை)

தற்போதுள்ள நிலையில் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் தொற்று பரவுவதற்கு சான்றுகள் உள்ளன. இருப்பினும் பாதிக்கபட்ட கற்பத்தின் விகிதம் மற்றும் புதிதாக பிறந்த குழந்தையின் முக்கியத்துவம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

தற்போது தாய்ப்பால் மற்றும் யோனி சுரப்பியில் covid-19 சோதனை செய்யப்பட்டதாக எந்த சான்றிதழ்களும் இல்லை.(இதையும் படிக்க - கொரோனா (COVID-19) - கர்ப்பிணிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? -http://www.parentune.com/parent-blog/corona-covid-19-karppinikal-thangkalai-evvaaru-paathukaaththuk-kolla-vendum/5345)

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்:

 • Covid-19 தொடர்பாக கருச்சிதைவு அல்லது கர்ப்பத்தின் ஆரம்பகால இழப்பு அதிகரிக்கும் அபாயம் பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.
 • இந்த வைரஸ் குழந்தையின் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை.(நீண்ட கால சோதனைக்கு காத்திருக்க வேண்டும்)
 • கோவிட் - 19 நோய் மூலம் கர்ப்பம் தரிப்பது தடைபடாது.

கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்:

 • பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து முழுமையாக குணமடைவார்கள்.
 • 100.4F க்கும் அதிகமான காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், மூச்சு திணறல், சுவாச பிரச்சனைகள் போன்ற தொடர்ச்சியான மற்றும் கடுமையான அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. உடனே மருத்துவரை அணுகவும்.
 • Covid 19 பாசிட்டிவ் உள்ள கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தை மற்றும் மகப்பேறு பிரச்சினைகளை சமாளிக்கும் பிரத்யேக மையத்தில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும்.

ஒரு கர்ப்பிணிப் பெண் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தால் அடுத்த படிகள் என்ன:

 1. முதலில் பயபட வேண்டாம், உடனடியாக உங்கள் சுகாதார பராமரிப்பு வழங்குநர் / மருத்துவமனை அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள்.
 2. பெரும்பாலான பெண்களுக்கு லேசான அறிகுறிகளால் மட்டுமே பாதிப்படைகிறார்கள் அதிலிருந்து முழுமையாக குணமடைகிறார்கள். பாதிக்கபட்ட  பெண்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் தங்கள் உடல்நிலையை covid அறிகுறிகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
 3. சமூக விலகல், முகமூடிகள் அணிவது, அடிக்கடி கை கழுவுதல், கைகளில் சானிடைசர் பயன்படுத்துதல் மிகவும் முக்கியம்.
 4. ஆரோக்கியமான சீரான உணவை உட்கொள்வது, அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது முக்கியம்.
 5. கர்ப்பகாலததில் எடுக்க வேண்டிய மருந்துகள் மற்றும் தேவையான சோதனைகள் குறித்த வழிகாட்டுதலுக்காக மருத்துவருடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுங்கள்.
 6. கடுமையான / நீடித்த அறிகுறிகள் (அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல், கடுமையான இருமல்) ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், உங்களுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்படலாம், மேலும் தீவிரமான கவனிப்பு மற்றும் கண்காணிப்பு தேவைப்படலாம்.
 7. COVID-19 ஐ சோதிக்க மகப்பேறியல் மேலாண்மை தாமதமின்றி செயல்படுகிறது
 8. நிச்சயமாக உங்கள் பிரசவத்திலோ, எப்போது எடுக்க வேண்டிய குழந்தை வளர்ச்சி பரிசோதனைகளிலோ எந்த மாற்றமும் இருக்காது. தேவைப்பட்டால் மருத்துவரை அடிக்கடி ஆலோசிப்பதை குறைக்கலாம்.
 9. கர்ப்ப அறிகுறிகளின்படி டெலிவரி பற்றி திட்டமிடுவதை  உங்கள் மருத்துவரே வழிநடத்துவார், இது குறித்து உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.
 10. தாய் பாசிட்டிவாக இருந்தால், குழந்தை 14 நாட்கள் / அல்லது உங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலால் தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}