• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கர்ப்பிணிகள் கோவிட் -19 தடுப்பூசிப் போடலாம்: சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 06, 2021

 19
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

தமிழ்நாட்டில் ஜூலை 3 ஆம் தேதி முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையோட பாதிப்பு அனைத்து வயதினருக்குமே வெவ்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு அவர்களுடைய பதட்டத்தை அதிகப்படுத்திய செய்திகளும் உண்டு.

இந்நிலையில் இந்தியாவில் கர்ப்பிணி பெண்கள் இப்போது கோவிட் -19 க்கு தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பு வெளியானாலும், இதில் ஏதும் பக்க விளைவுகள் இருக்க முடியுமா? சில கர்ப்பிணிப் பெண்களுக்கு விலக்கு உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பார்க்கலாம்.

கர்ப்பிணிகள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்:

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பத்தின் எந்த காலத்திலும் கோவிட் -19 தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு இது பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவுவதற்காக, கர்ப்பத்தில் கோவிட் -19 நோய்த்தொற்றினால் ஏற்படும் அபாயங்கள், தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் தடுப்பூசியின் பக்க விளைவுகள் ஆகியவற்றை விவரிக்கும் வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசிப் பரிந்துரைப்பதற்கான 4 காரணங்கள்:

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதால் ஏற்படும் அபாயங்களை விட நன்மைகள் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்களின் கருத்து உள்ளதாக  அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு நான்கு காரணங்களை அது மேற்கோளிட்டுள்ளது:

 • கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால், தற்போதைய சான்றுகள் படி  கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது கோவிட் -19 இலிருந்து கடுமையான பாதிப்புகள்  வருவதற்கான ஆபத்து உள்ளது என்பதை குறிக்கிறது.
 • கோவிட் -19 நோய்த்தொற்றால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பிறக்கும் போதும் அதிக ஆபத்து இருக்கலாம்.
 • பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான நோயாகவோ இருக்கும்போது, ​​அவர்களின் உடல்நலம் “விரைவாக மோசமடையக்கூடும், அது கருவின் வளர்ச்சியைப் பாதிக்கலாம்”.
 • கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிப் போடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ”கர்ப்பிணிகள் கோவிட் -19 க்கு அதிக ஆபத்து உள்ளவர்கள் ”அமைச்சகம் மேற்கோளிட்டுள்ளது”

தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன?

கோவிட் -19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பிற நபர்களைப் போலவே கர்ப்பிணிகளையும் பாதுகாக்கின்றன என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. "தற்போதைய தகவளின் அடிப்படையில், கோவிட் -19 தடுப்பூசிகள் கர்ப்பிணி அல்லது கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்,"

இருப்பினும், அவை மேலும் கூறுவது, கரு மற்றும் குழந்தைக்கான தடுப்பூசிகளின் நீண்டகால பாதகமான விளைவுகள் மற்றும் பாதுகாப்பு இன்னும் அறியப்படவில்லை. எந்தவொரு மருந்தையும் போலவே, தடுப்பூசியும் பொதுவாக லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்: லேசான காய்ச்சல், ஊசி போடும் இடத்தில் வலி அல்லது 1-3 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்றவை இருக்கக்கூடும்.

தடுப்பூசி போட்ட 20 நாட்களுக்குள் ஒரு அரிய பாதகமான எதிர்வினை (1-5 லட்சத்தில் ஒன்று) சாத்தியத்தை அவை சுட்டிக்காட்டுகின்றன, இதற்கு விழிப்புணர்ச்சி மற்றும்  கவனம் தேவைப்படலாம்.

மேலும் படிக்க: கர்ப்பிணிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? http://www.parentune.com/parent-blog/corona-covid-19-karppinikal-thangkalai-evvaaru-paathukaaththuk-kolla-vendum/5345

அவசர  மருத்துவ தேவைக்கான அறிகுறிகள் யாவை?

மருத்துவ கவனிப்பு தேவைப்படும் பல அறிகுறிகளை அமைச்சகம் பட்டியலிடுகிறது:

 1. மூச்சுத் திணறல்
 2. நெஞ்சு வலி
 3. கைகால்களை அழுத்துவதில் வலி அல்லது கைகால்களில் வீக்கம்
 4. தடுப்பூசிப் போட்ட இடத்திற்கு அருகில் சிறிய புள்ளி ரத்தக்கசிவு அல்லது தோலில் சிராய்ப்பு
 5. வாந்தியுடன் அல்லது இல்லாமல் தொடர்ந்து வயிற்று வலி
 6. இதற்கு முன் வலிப்பு நோய் பாதிப்பு அல்லது  இல்லாத நிலையில், வலிப்புடன் வாந்தி
 7. கைகால்களின் பலவீனம் / முடக்கம் அல்லது உடலின் எந்த குறிப்பிட்ட பாகத்தில் பலவீனம்
 8. தொடர்ந்து வாந்தி
 9. மங்கலான பார்வை அல்லது கண்களில் வலி.

கர்ப்பிணிகளில் தடுப்பூசி பரிந்துரைக்கப்படாத வகை இருக்கிறதா?

பொது மக்களுக்கு இருக்கும் முரண்பாடுகள் கர்ப்பிணிகளுக்கும் ஒத்தவை:

 • முந்தைய டோஸ் போட்டவுடன் ஒவ்வாமை
 • தடுப்பூசிகள் அல்லது ஊசி மருந்துகள், மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு ஒவ்வாமை.

பெண்ணுக்கு ஏற்கனவே கோவிட் இருந்திருந்தால் என்ன செய்வது?

அத்தகைய பெண்கள் தடுப்பூசியை நோய்த்தொற்றிலிருந்து 12 வாரங்கள் அல்லது 4 முதல் 8 வாரங்கள் வரை ஒத்திவைக்க அமைச்சகம் பரிந்துரைக்கிறது.

மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் -  வைரல் பரவலை தடுக்க நம் உடல் உற்பத்தி செய்யும் புரதமே ஆன்ட்டிபாடி என்று அழைக்கப்படுகிறது. மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் என்பது நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை ஆன்ட்டிபாடிகள் ஆகும்.

 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அல்லது கன்வேலசெண்ட் பிளாஸ்மாவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் அல்லது செயலில் கோவிட் -19 நோய்த்தொற்று உள்ளவர்கள் தற்காலிகமாக தடுப்பூசி போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டால், பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு தடுப்பூசி போட வேண்டும்.

பக்கவிளைவுகள் எவ்வாறு கண்காணிக்கப்படும்?

பெண்களின் கர்ப்ப நிலையை பதிவு செய்யும் போது அனைத்து பாதகமான நிகழ்வுகளும் உடனடியாக கோவினுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதேப் போல் AEFI (adverse events following immunization) பதிவு செய்யப்பட்டு விடும். மேலும் அனைத்து தீவிரமான மற்றும் கடுமையான SEFI களும் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

கோவிட் -19 ஒரு கர்ப்பிணியையும், குழந்தையையும் எவ்வாறு பாதிக்கிறது?

பெரும்பாலான பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் (> 90%) மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் மீண்டு வந்தாலும், “ஆரோக்கியத்தில் திடீரென சரிவு ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும்” என்று அமைச்சகம் கூறியுள்ளது. "கோவிட் -19 இல்லாத கர்ப்பிணிகளுடன்  ஒப்பிடும்போது, ​​கோவிட் -19 அறிகுறி உள்ளவர்கள் ஐ.சி.யுவில் சேருதல், ஈட்ரோஜெனிக் குறைப்பிரசவம், முன்-எக்லாம்ப்சியா போன்ற அறிகுறிகள், சிசேரியன் மற்றும் இறப்பு உள்ளிட்ட பாதகமான கர்ப்ப கால விளைவுகளின் ஆபத்து அதிகம் என்றும் கூறியுள்ளது.

மேலும் இதையும் படிக்க: கர்ப்ப காலத்தில் COVID - 19 பற்றி அவசியம் அறிய வேண்டியதுhttp://www.parentune.com/parent-blog/pregnancy-and-covid-19-things-you-should-know/6343

மேலும் கோவிட்-பாசிட்டிவ் தாய்மார்களின் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும் போது (95%) நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது. "இருப்பினும், கர்ப்பத்தில் கோவிட் -19 குறைப்பிரசவத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, மேலும் பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பையும், சில சந்தர்ப்பங்களில் மரணத்தையும் கூட அதிகரிக்கிறது," என்று கூறியுள்ளது.

சில கர்ப்பிணிகள் மற்றவர்களை விட அதிக ஆபத்தில் உள்ளார்களா?

கர்ப்ப காலத்தில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்குப் பிறகு சிக்கல்களை வளர்ப்பதற்கான ஆபத்து காரணிகளையும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் பட்டியலிடுகின்றன:

முன்பே இருக்கும் இணை நோய்கள், 35 வயதுக்கு மேல் கர்ப்பம் மற்றும் அதிக உடல் எடை (high body mass index), நீரிழிவு, உறுப்பு மாற்று சிகிச்சைகள், நாள்பட்ட சுவாச கோளாறுகள், நோயெதிர்ப்பு தடுப்பு சிகிச்சைகள், டயாலிசிஸ் மற்றும் இதய நோய் போன்ற சில கர்ப்பிணிகளுக்கு கோவிட் -19 இலிருந்து கடுமையான பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சகம் குறிப்பிடுகிறது.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}