டீன் ஏஜ் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – தற்காப்புத் திறனை வளர்ப்போம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Jun 04, 2022

ஒரு வாரத்திற்கு முன்பு ஹைதராபாத் நகரில் 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஐந்து சிறார்களில் இருவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சிறார்களில் எம்.எல். ஏ வின் மகன்களும் இருப்பதால் சம்பவத்தைத் திசைத்திருப்ப முயற்சி செய்தனர்.
17 வயதான இந்த சிறுமி பிறந்தநாள் விழாவிற்காக தனது நண்பர்களுடன் பப்பிற்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புகாரை அளித்த அவரது தந்தை, மது அருந்தாத விருந்து என்பதால் செல்ல அனுமதித்ததாக கூறினார்.
பப்பில் இருந்தபோது, சிறார்களின் குழுவால் நட்பாக இருந்ததால், அவர்கள் சிறுமியை வீட்டில் விட்டுவிட முன்வந்தனர். அவர்கள் முதலில் ஒரு பேக்கரிக்கு சென்றனர், அதன் பின்னர் அவர்கள் 17 வயது சிறுமியை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அந்த சிறுமியை இரவில் மீண்டும் பப்பில் இறக்கிவிட்டு சென்றனர். பப் அருகே இருந்த ஆறு சிசிடிவி கேமராக்களில் இருந்த வீடியோ காட்சிகளை போலீசார் மீட்டுள்ளனர். சிறுமி தனது கைகளில் காயங்கள் விழுந்ததால் ஏற்பட்டதாக முதலில் பெற்றோரிடம் கூறினாள், ஆனால் அவர்கள் மற்ற காயங்களை கவனித்து விசாரித்தபோது தான் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
பெண் குழந்தைகளை வீட்டிற்குள் வைப்பது பாதுகாப்பல்ல
இந்த சம்பவம் பதின்ம வயதினரின் பெற்றோர்களை வருத்தத்திலும், பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் நடக்கும் போது இருக்கும் விழிப்புணர்வு அதன் பிறகு மெல்ல மெல்ல மறைந்து விடுகிறது. அல்லது பெண் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைப்பட்டுப் போகிறது. இதனால் பெண் குழந்தைகளின் விருப்பத்திற்கு, கனவுக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பதில்லை.
பெற்றோர் என்ன யோசிப்போம், இனி பெண் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடாது, பிறந்த நாள் விழாவுக்கு அனுப்பக்கூடாது, வெளியீர் சென்று படிக்க அனுப்பக்கூடாது இப்படி பல முடிவுகளை பயத்தினால் பெற்றோர் எடுக்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். தப்பு செய்பவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடுவார்கள், ஆனால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை வீட்டிற்கு தன் விருப்பம், கனவு எல்லாவற்றியும் தியாகம் செய்ய வேண்டுமா? என்ன நியாயம் இது? தீர்வு இதுவல்ல.
பெண் குழந்தைகளை தைரியமாக, தன்னம்பிக்கையோடு, புத்திசாலியாக வளர்க்க வேண்டும். தங்களை தாங்களே பாதுகாக்கும் திறன்களை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பெண் குழந்தைகளை தைரியமாக, தன்னம்பிக்கையோடு வளர்ப்போம்
பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகள் தனிப்பட்ட பாதுகாப்பில் திறமையாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பாதுகாப்பிற்கு பொருத்தமான திறன்களை நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோமா? நீங்கள் கராத்தே ஆசிரியரிடம் சென்றால், அவர்கள் உங்கள் டூல்கிட்டில் சில குத்துகள் மற்றும் உதைகளை கற்றுக் கொடுப்பார்கள். இதுப் போன்ற தற்காப்பு பயிற்சிகள் நிறைவே இருக்கின்றது. ஆனால் இந்த உடல் திறன்கள் மட்டும் நம் குழந்தைகளுக்கு போதுமா?
முழுமையான தனிப்பட்ட பாதுகாப்பை உடல் ரீதியாக கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, நம் குழந்தைகளுக்கு அவர்களின் சூழலில் ஏற்படும் ஆபத்தைக் கண்டறியும் திறன், கொந்தளிப்பான மற்றும் வன்முறைச் சூழ்நிலைகளைத் கையாளும் திறன் தேவை.
உங்கள் பதின்ம வயதினரைப் பாதுகாப்பாக மாற்ற உதவும் சில தனிப்பட்ட பாதுகாப்புக் குறிப்புகள் இங்கே:
- தன்னம்பிக்கை - நம்பிக்கையுள்ள குழந்தைகள் பொதுவாக கெட்டவர்களால் குறிவைக்கப்படுவதில்லை. உரத்த குரலில், கண்களை நேராக பார்த்து, தோள்களை உயர்த்தி, நிலையான நடையுடன் இருக்கும் தன்னம்பிக்கையான பிள்ளைகளை எளிதாக குறிவைக்க முடியாது. உங்கள் குழந்தைக்கு இவ்வாறு இருக்க கற்றுக் கொடுக்கவும்.
- விழிப்புணர்வு மற்றும் கவனம் - மொபைல் சாதனத்தோடு அதிகம் தொடர்போடு இருக்கும் பிள்ளைகள் 8o% விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்ற விழிப்புணர்வை குறைக்கிறது ஸ்மார்ட் மொபைல்ஸ்.
- தட்டிக்கேட்கும் குணம் - யாரோ ஒரு உயர் மட்டத்தில் இருப்பதால், செல்வந்தராக இருப்பதால் அவர்கள் தப்பு செய்தாலும் அவர்களை தட்டிக் கேட்க முடியாது அல்லது அதிகாரப்பூர்வ பேட்ஜ் வைத்திருப்பதால், அவர்களை சட்டப்பூர்வமாக அணுக முடியாது என்பதை உடையுங்கள். ஒருவரின் அடையாளத்தை சவால் செய்ய உங்கள் பிள்ளைக்கு அனுமதி கொடுங்கள். யாராக இருந்தாலும் கேள்வி கேட்க தயார்ப்படுத்துங்கள்
- குறியீடு/கடவுச்சொல் உத்தி - உங்கள் குழந்தையுடன் ஒரு குறியீடு/கடவுச்சொல்லை கூறுங்கள். இந்தக் குறியீட்டையோ கடவுச்சொல்லையோ அவர்கள் உங்களுக்கு உரைத்தால், அவர்கள் சிக்கலில் இருப்பதாகவும், அதை எடுக்க வேண்டும் என்றும் அர்த்தம். இது உங்கள் டீனேஜர் யாருடன் இருந்தாலும் அவர்களை காப்பாற்ற உதவும். இந்த விஷயத்தில் அவர்களின் நிலைமை குறித்து எந்த தீர்ப்பும் செய்ய வேண்டாம். நீங்கள் தீர்ப்பளித்தால், உங்கள் டீனேஜர் உங்கள் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும், மேலும் எதிர்காலத்தில் உங்கள் உதவியைக் கேட்க மாட்டார்.
எப்போதும் நம் குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர் நாம் இருக்க விரும்புகிறோம் என்றாலும், பிள்ளைகள் வளர வளர, இது பல சந்தர்ப்பங்களில் சாத்தியமில்லை என்பது தான் உண்மை. இயற்கையாகவே குழந்தைகள் சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கும், உங்கள் பாதுகாப்புக் கரத்திலிருந்து விலகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். வீட்டிற்குள் பூட்டி வைப்பது தீர்வாகாது. நம் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் பாதுகாப்பிற்காக தயார்பப்டுத்துவதும் நம் முக்கிய கடமையே.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}